(Reading time: 17 - 33 minutes)

'ற்பனை பண்ணிக்கலை. நிஜமாவே நேக்கு ரொம்ப பயமா இருக்கு. நாளன்னிக்கு நிச்சியதார்த்தம். நாளைக்கு கார்த்தாலே எங்க அத்தை, அத்திம்பேர், பெரியம்மா பெரியப்பான்னு எங்காத்து மனுஷா எல்லாரும் வந்திடுவா. அக்கா இப்படி பண்ணிட்டு போயிட்டா தெரிஞ்சா அப்பாவோட மானம் போயிடும் கோகுல். எல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசுவா கோகுல். அப்பாவாலே தாங்கிக்க முடியாது.' உடைந்தது அவள் குரல். அவளை தோளில் சாய்த்துக்கொண்டு தலை வருடினான் கோகுல்.

'காதல் என்பது ஒரு காட்டாறு. எதிரில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறியும் வல்லமை இந்த காதலுக்கு உண்டு படித்திருக்கிறான் அவன். ஆனால் அது அந்த காதலில் சம்மந்த பட்டவர்களை தாண்டி, சுற்றி இருப்பவர்களுக்கு இவ்வளவு வலி கொடுக்கும் என்பதை இப்போதுதான் கண் கூடாக பார்க்கிறான்'

'நீ தைரியமா இருடா. நான் பார்த்துக்கறேன் எல்லாத்தையும். நம்மாத்திலே தப்பா எதுவும் நடக்காது.'

'உங்க அப்பா அம்மா என்ன சொல்லுவா கோகுல்??? உங்க பெரியப்பா ரொம்ப கோபப்படுவார். நம்ம கல்யாணம் கூட நின்னு போயிடும் இல்லையா கோகுல்???'

சின்ன புன்னகையுடன் அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு மெல்ல சொன்னான் கோகுல்

'அப்படி விட்டுடுவேனாடா உன்னை??? நான் ஒரு தடவை சொன்னா சொன்னது தான். நேக்கு எப்பவும் கோதைதான். நேக்கு கோதையைதான் பிடிக்கும். கோதையை மட்டும்தான் பிடிக்கும். சரியா'??? .  

நேரம் இரவு பத்தரையை தாண்டிக்கொண்டிருக்க இப்போது மறுபடியும் அவளது தந்தையின் எண்ணை முயல அதுவும் அணைக்கப்பட்டிருந்தது.

'பெருமாளே...' என்றான் வாய்விட்டு. தனிச்சையாக திரும்பியவனின் கண்ணில் பட்டான் பூஜை அறையில் புன்னகையுடன் நின்றிருந்த மாயக்கண்ணன். அப்போது ஒலித்தது அவன் கைப்பேசி. அழைத்தது முரளி.

'அப்பாவா???' கோதை அவசரமாக கேட்க..

'இல்லைடா... முரளி ...' என்றான் கோகுல்

'ஆத்துள்ளே சிக்னல் சரியா இருக்காது. வெளியிலே போய் பேசணும்...' அவள் மெல்ல சொல்ல கைப்பெசியுடன் வெளியே வந்தான் கோகுல். கோதை உள்ளேயே அமர்ந்திருந்தாள்.

'சாப்பிட்டியாடா??? ஆரம்பித்தான் முரளி..

'சாப்பிட்டேன். எங்கேடா இருக்கே??? 

'ஏர்போர்ட் வந்திட்டேன் இன்னும் கொஞ்ச நாழியிலே பிளைட்.'

'முரளி... இங்கே ஒரு பிரச்சனைடா.. ' மெதுவாக துவங்கினான் கோகுல்.

அவன் பேசப்பேச முரளியினிடத்தில் அதிர்ச்சி, படபடப்பு, பரபரப்பு போன்ற எதுவுமே இல்லை. மிக நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான் அவன். இதில் கோகுலுக்கு பெரிய வியப்பெல்லாம் இல்லை. முரளி எப்போதுமே இப்படிதான்!!!! சில நொடி மௌனம் ஏதோ யோசனை முரளியிடம்......

சில நொடிகள் கழித்து 'சரி... ' என்றான்  அவன். 'ஆத்திலே சொல்லிட்டியா???

'இல்லைடா. இனிமே தான் சொல்லணும். யார் இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை.'

'நேக்கும் அதுதான் தெரியலை. அதனாலே ஒண்ணு பண்ணுவோம் யாருக்கும் இதை சொல்லவேண்டாம்..'

'டேய்...' திடுக்கிட்டே போனான் கோகுல்  இது மறைக்கற விஷயமாடா ???'

'இதுதான் மறைக்கிற விஷயம்!!!! இப்போதைக்கு, அட்லீஸ்ட் ரெண்டு நாளைக்கு அவ அப்பா உட்பட யாருக்கும்  இது தெரிய வேண்டாம்...'

'முரளி விளையாடாதே...'

'இல்லை. விளையாடலை. நன்னா யோசனை பண்ணிதான் சொல்றேன்'

கோகுலால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 'நாளைக்கு நம்மாதிலேயும் சரி அவாத்திலேயும் சரி எல்லாரும் வந்திடுவாடா. அவா கிட்டே எல்லாம் என்னடா  பதில் சொல்றது..'

'டேய்... எல்லாத்தையும்... நானே யோசிக்க முடியுமா??? நீயும் கொஞ்சம் யோசனை பண்ணுடா.. என்னமானும் சொல்லி சாமாளிடா .

இப்போ என்னத்துக்குடா இதை மறைக்கணும்???' கொஞ்சம் குழப்பத்துடனே கேட்டான் கோகுல்.

'அதெல்லாம் நான் இன்னும் முடிவு பண்ணலை. மறைக்கணும்ன்னு முடிவு பண்ணியாச்சு மறைச்சிடலாம். மத்ததை அப்புறம் யோசிப்போம்..'

'முரளி...' அவன் குரல் கொஞ்சம் அழுத்தமாக வெளிவந்தது. 'இங்கே இருக்கிற சிச்சுவேஷன் புரியாம பேசறே'

'எல்லாம் புரிஞ்சுண்டுதாண்டா பேசறேன். நீயும் கோதையும் என்னடா தப்பு பண்ணேள்??? உங்க கல்யாணம் என்னத்துக்கு நிக்கணும்???' அவன் சொல்ல வருவது சட்டென புரிய... சில நொடிகள் மௌனத்தில் கடக்க...

'அ... அது சரிடா அதுக்காக இதை மறைச்சா பெரிய பிரச்சனை ஆகும் முரளி...'

'சரி....... எல்லாத்தையும் சொல்லிட்டா பிரச்சனையே வராதா???

.........................................

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.