(Reading time: 29 - 57 minutes)

20. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

தார்க்கிகா வந்து இப்படி வார்த்தைகளை கொட்டிவிட்டு திரும்பி நடக்க…..மனோவிற்கு ஒரு புறம் கடும் கோபம் என்றாலும் மறு புறம் வேறு ஒரு விஷயம் திக்கென்றது…. மித்ரன் இவளை அடச்சு வச்சு மிரட்டி கல்யாணம் செய்ததா அவ கத்திட்டுப் போறாளே….களஞ்சியம் அதைப் பத்தி கேட்டா இவ என்ன விளக்கம் சொல்லனும்?

அது மித்ரன் ஏற்பாடு செய்த டிராமான்னு சொன்னா…..அவன் போலீஸ்னும் சொல்ல வேண்டி இருக்குமோ? மித்ரன் தன் அம்மாட்ட கூட அதை சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிருக்கானே….

ஆக தார்க்கிகா கிளம்பவும் இவள் அங்கிருந்து எழுந்து கொண்டாள் கிளம்பும் வண்ணமாய்….

உங்கட்ட பேச விருப்பம் இல்ல நான் போறேன் என எப்படி சொல்ல…? ஆனாலும் எழுந்துவிட்டாலே அதானே அர்த்தம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிரேமாவின் "கண்ணாமூச்சி ரே ரே.." - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

களஞ்சியமும் இப்போது எழுந்து நின்றார்…..அவர் முகத்தில் இவளிடம் எதையோ கேட்க வேண்டும்…எதையுமோ சொல்லித்தான் ஆக வேண்டும் என ஒரு வகை தவிப்பு….

அவர் பேச விரும்புகிறார் என புரிந்தாலும் இவளுக்கோ விஷயத்தை துருவுவதற்கு நிச்சயமாய் இது தருணமல்ல என படுகிறது….. படு கவனமாய் கையாள வேண்டிய விஷயம் இது…..யோசித்து சாதுர்யமாய் பேச தேவையான மனநிலை இப்போது இவளுக்கு இல்லை….

இந்த தார்க்கிகா விஷயம்….. பயமாக இல்லை எனினும்….என் கையாலதான் அவன் சாவு என இவள் முன் நின்று ஒருவர் மித்ரனை குறித்து பேசுவதை கேட்டது  மனசுக்கு நல்லாவா இருக்கு….. அதுவும் அவன் பக்கத்தில் இல்லாத நேரத்தில்….

 இவளை உள்ளுக்குள் இருந்து தின்று கொண்டிருக்கிறது அவனது பிரிவு…. அதோடு இப்டி தேவையில்லாம கோபபட்டு அவன படுத்றனே என்ற தவிப்பு வேறு பாடாய் படுத்துகிறது…..இதில் கண்டிப்பாக இந்த பேச்சு வார்த்தையை ஒழுங்காக கையாள இவளால் முடியாது….

“நான் கிளம்புறேன் அத்த…”

இவள் சொல்லிய பின்பு அவர் என்ன செய்ய…. களஞ்சியமும் சம்மதமாக தலை ஆட்டி வைத்தார்…. மனோ விடு விடுவென அவளுக்காக கொடுக்கப் பட்டிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அன்று மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களும் இதே கண்ணாமூச்சியை களஞ்சியத்திடம் தொடர வேண்டியதாகிவிட்டது மனோவிற்கு…. காரணம் மித்ரனிடம் இதை குறித்து என்ன சொல்லவென கேட்டுவிட்டு அதன் பின்பு இவள் களஞ்சியத்திடம் பேசலாம் என நினைக்க….மித்ரனிடம் இதை  பேசும் சூழல் அமையவில்லை என்பதோடு அவளை பாதித்து பதம் பார்க்க இன்னுமாய் வந்து சேர்ந்தது அடுத்த ஆட்டம் பாம்.

மித்ரன் ஸ்விஸ் சென்று சேர்ந்துவிட்டதாய் சொல்லிய அன்று இரவு அவளை தொடர்பு கொண்ட அவன் “ஒரு ஃப்யூ டேஸ் நான் ஃபோன்ல எதுவும் கம்யூனிகேட் செய்ய முடியாது மனு…. தப்பா எடுத்துக்காத ப்ளீஸ்” என முடித்துவிட்டான்.

அவன் வேலையில் இது வழக்கமான ஒன்றாக இருக்க வேண்டும்தான்….. அது மனோகரிக்கும் புரிகிறதுதான்….மனோகரி இயல்பில் வெகு தைரியமான பெண்ணும்தான்.. பயோசியில் நடந்த அந்த கிட்நாப் அட்டெம்டிற்கு பின்னும் தயங்காமல் அலுவலகம் சென்றவளாயிற்றே அவள்.

ஆனாலும் ஏனோ இப்போது மித்ரன் இவளிடம் பேச முடியாது என்று சொன்னதே உள்ளுக்குள் ஒரு பிசைதல்….அவனை யாரோ கண்காணித்தால்தானே இப்படி அவன் ஒளிந்து மறைய வேண்டி இருக்கும்…… அவன் ஆபத்தில் இருக்கிறானோ என்று ஒரு வகை தவிப்பு ….

அவன் ரொம்ப ஸ்மார்ட்..யாரனாலும் ஹேண்டில் பண்ணிருவான்….என இவள் தன்னைத்தானே தேற்றிக் கொண்டாலும், தன் பாதுகாப்பு என்று வருவதற்கும்….தான் நேசிப்பவரின் பாதுகாப்பு என்ற நிலமைக்கும் உள்ள வித்யாசம் அதிகமோ? இவளுக்குன்னு வர்றப்ப வந்த தைரியம்  மித்ரனுக்குன்னு வர்றப்ப வரமாட்டேங்குதோ?? என்று அவளுக்கு தோன்ற தொடங்கிய இடம் அது….

மறுநாள் இவள் முகத்தில் என்னதை கண்டாளோ இன்பா…..என்ன ப்ரச்சனை என்ன ஏது என அவள் துருவவில்லை எனினும் “வீட்லயே இருந்தா கஷ்டம் மனோ…..வா வெளிய ஒரு ரவ்ண்ட் போய்ட்டு வரலாம்…ஒரு சேஞ்சா இருக்கும்” என அழைத்துப் போன இடம் ஃபீனிக்‌ஸ் மால்.

கூட்டம் நம் மனதை கலைக்கிறதோ கவர்கிறதோ ஆனால் நிச்சயம் நம்மைத் தாண்டி பிறரை நினைக்க வைப்பது நிஜம்….மனோவுக்கும் அது தான் நேர்ந்தது.

இன்பாவுடன் ஒரு வகையில் இன்பமாகவே செல்ல தொடங்கியது நேரம்….. பேசி சிரித்தபடி….வாங்கி கொறித்தபடி…. சிலவற்றை வாங்கி….சிலவற்றை மறுத்து என நட்பு மாருதம்….

“அந்த ஐஸ் க்ரீம் என் ஃபேவ்….. நீ வந்து டேஸ்ட் பண்ணிப் பாரு உனக்கும் பிடிச்சிடும்…..” ஒரு குறிப்பிட்ட ஷாப்புக்கு போக வேண்டும் என்றாள் இன்பா…

“பிடிக்கலைனா?” மனோ கிண்டலாய் கேட்டாள். இருவருமாய் அந்த ஃப்ளோரைப் பார்த்து செல்லத் தொடங்கினர்…

“ரொம்ப நல்லதுன்னு நினச்சு உனக்குள்ளதையும் நானே சாப்டுடுவேன்….அட் அ டைம் மூனு சாப்டுவேன் தெரியுமா….?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.