(Reading time: 29 - 57 minutes)

ந்த சிண்டி இருக்காளே சிண்டி….அவளை நீங்க கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க…..அப்டியே நம்ம மதி போல… பார்க்க அப்டியே பையன் மாதிரியே இருப்பா……எனக்கு கல்யாணம்னு செய்தா ஒரு முழு பொண்ண கல்யாணம் செய்யனும்னு ஆசை….”

அவன் சொல்வதை அவன் புறமாக தலையை மட்டுமாய் நீட்டி கேட்டுக் கொண்டே கூட நடந்த மதியோ இப்போது அவன் காலில் ஓங்கி ஒரு மிதி……

 “நான் பையன் மாதிரியாடா இருக்கேன்  உனக்கு…?”

அவள் மிதிப்பாள் என எதிர் பார்த்திருந்த மித்ரனோ சரியான டைம்க்கு தன் காலை விலக்கிக் கொண்டே….. “ உன்னப் போய் பையன்னு சொல்லுவனா மதி…. அது தப்புல்ல….நீ இதுல ஹாஃப் அதுல ஹாஃப்….50- 50….இல்ல நீ 4 குவாட்டர்ஸ்…..”

இப்பொழுது சுற்று முற்றும் பார்த்த மதி அடிக்க எதுவும் வாகாக கிடைக்கவில்லை என்பதால் குனிந்து தன் செருப்பையே கழற்றிக் கொள்ள….

சட்டென விலகி அந்த முதியவருக்குப் பின்னால் போய் நின்று கொண்டான் மித்ரன் இப்போது.  “சாரி சாரி மீதி ரெண்டு பேரை விட்டுடேன்னு இவ்ளவு கோப படாத…. மேன் வுமன் டாங்கி டார்டாய்ஸ் எல்லாம் இக்வல் மிக்‌ஸ் நீ” என்று அவளை இன்னுமாய் எரிய செய்தவன்.…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - உதய் - 26, நந்திதா - 28... சிறகடித்து பறக்குமா இவர்களின் காதல் எனும் பட்டாம்பூச்சி εїз...!

படிக்க தவறாதீர்கள்...

“ஆன்டி இந்த லேடி எட்டிகெட்ஸ்னு நீங்க சொல்லி கொடுத்த எதையாவது இவ ஃபாலோ பண்றாளான்னு பாருங்க…..” என்றான் தன் ஆன்டியிடம்.

இதற்குள் எதையோ முனங்கிக் கொண்டே தன் செருப்பை தரையில் போட்டு அதை அணிய தொடங்கினாள் மதிபா…. “சரி உன்னப் பொறுத்த வரைக்கும் முழு பொண்னுனா என்னன்னு சொல்லி தொல…. அப்டி ஏதாவது ஒரு ஜந்து கண்ல மாட்னா உன்ட்ட தள்ளிட்டு வரேன்….” மதிபா தான்.

“ம்….. என்னப் பொறுத்தவரைக்கும் பொண்னுனா....” ஏதோ தீவிரமாய் யோசிப்பவன் போல் ரூஃபை பார்த்தவன்…

“உன்ன மாதிரி இல்லாத எந்த பொண்ணும் பொண்னுதான்னு நினைக்கிறேன்….” என முடித்தான்.

“யூ…” பல்லைக் கடித்தபடி மீண்டுமாய் கோபமாய் தன் செருப்பை நோக்கி குனிந்த மதிபா… பாதியில் தன் மனதை மாற்றிக் கொண்டு இப்போழுது காதில் புகைவர இவனைப் பார்த்து முறைத்தாள்…

“சரி அதெல்லாம் போகட்டும்…. உண்மையிலேயே நீ என்னதான் எதிர்பார்க்கிற டோனி…”  மித்ரனைப் பார்த்துக் கேட்டார் ஆன்டி….

“ஆன்ட்டி என்ன நீங்க…..இங்கதான் டேட்டிங்…..ப்ளானிங்…. மேரேஜ்னு…..இதெல்லாம் லாங் ப்ரொசீசர்…..இத விட்டா மேரேஜ்க்கு வழியும் கிடையாது…. இன்டியால நோ ப்ராப்ளம்…. 5 டேஸ்ல பொண்னு செலக்ட் செய்து……. 5 மினிட்ஸ் நேர்ல பார்த்து….. 5 வீக்‌ல மேரேஜே முடிச்சுடுவோம்….. அங்க மேரேஜ் ஆகாமலே போய்டுமோன்னு நினைக்க அவசியமே இல்ல…….” என கிண்டலாக  சொன்னவன்…

மீண்டுமாய் அவர் தோளில் கை போட்டு “ எனக்குல்லாம் மேரேஜ்னா அப்பா இருந்தா எப்டி பார்ப்பாங்களோ அப்டித்தான் வேணும்…..” என்றபடி நடந்தான். இந்த பேச்சில் கிண்டல் இல்லை…..

“ஆமா….உங்க அம்மா கூட உங்க அப்பா சாய்ஸ்தான்” எரிச்சலாய் முனுமுனுத்தாள் மதிபா….

அவர்களை விட்டு சற்று தொலைவில் இதை கேட்டுக் கொண்டு வந்திருந்த இன்பாவுக்கு சுர் என ஏறுகிறதுதான்…. மித்ரனோ அமைதியாகவே அதற்கும் பதில் சொன்னான்…

“அம்மாக்கென்ன….அப்பா கூட அவங்க ரொம்பவே நல்லாதான் இருந்தாங்க….”

“ம்…..நீதான் சொல்லிக்கனும்….  வைஃப்னா தன் ஹஸ்பண்ட மட்டும் பார்த்தா போதுமா….தன் பிள்ளைங்கள பார்க்க வேண்டாமா?....உன் வைஃப்லாம் உன் பிள்ளைங்களையும் நல்லா பார்த்துக்கனும் இப்பவே சொல்லிட்டேன்….. இல்லனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…”

“ஹேய் டொமேடொ….அம்மா மத்த பிள்ளைங்களை நல்லாதான பார்த்துக்கிறாங்க….” மித்ரனின் பதிலில் நச் என அவன் தலையில் ஒரு கொட்டு….வேற யாரு மதிபாதான்….

இப்பொழுது இவளை திரும்பிப்பார்த்து நின்றவன்….. “அம்மா எல்லோர்ட்டயும் நல்லாதான இருக்காங்க. மதி.…என்ட்ட தான் எதோ கொஞ்சம் மிஃஸ் ஆகிட்டுன்னு வச்சுகோயேன்….….. குறையே இல்லாத ஒரு மனுஷனை நீ பார்த்திருக்கியா….இது அவங்க வீக்னஸ்…..” நிதான குரலில் விளக்கியவன்

  சற்று அவள் புறமாக குனிந்து “அதோட இப்டி அவங்க என்ன இங்க அனுப்பி வைக்கலைன்னா….இந்த ஃபோர் இன் ஒன் க்ரீசர்லாம் எனக்கு கிடச்சிறுக்குமா…… நீயே ஒரு அம்மாவுக்கும் மூனு சிம்லிங்கும் ஈக்வல் இல்லையா…. நீ என் வைஃபுக்கு ஒரு டிபிகல் இன்டியன் மதர் இன் லாவா இருப்பியோன்னு எனக்கு இப்பவே டென்ஷனாகுது தெரியுமா….” கிண்டலும் உண்மையுமாய் கலந்த தொனியில் அவன் பேசிக் கொண்டே போக

அதன் பின் அவர்களை பின் தொடரவில்லை இன்பா…. ஏனோ தொடர தோணவில்லை….. அவன் முன் தான் மிக தாழ்ந்து போய் நிற்பதாக உணர்ந்தாள். குற்ற மனப்பான்மை……

நடந்ததை மனோவிடம் விவரித்த இன்பா….. “அடுத்து தான் மித்ரனை நான்  அப்பா சொன்ன வகையில யோசிக்க ஆரம்பிச்சேன்…. “ இப்படி மனோவுக்கு எது கேட்க பிடிக்குமோ எது அவளை சுகமாய் உணர வைக்குமோ அப்படி நிகழ்வுகளாய் பகிர்ந்து கொண்ட இன்பா, மனோ தூங்கியதும்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.