(Reading time: 14 - 28 minutes)

பூங்காவா? ,மவனே உன்னை எப்படி புஸ்வானம் ஆக்குறேன் பார்”என்றவள் அங்கு நடந்த சென்ற அவர்களின் சீனியர் பூரணியை அழைத்தாள்..பூரணி, பெண்ணாய் தப்பித் தவறி பிறந்த ரௌடி என்று சொல்லலாம்.. பல நேரங்களில் கை பேசியப் பிறகுத்தான் அவளுக்கு வாய் பேசும். அப்படிப்  பட்டவளிடம் ஜெனி என்ன பேசுகிறாள்?என்று அருண் யோசிக்க, செல்வமோ கவீனிடம் “தல உன்னையும் உன் ஆளையும் கலாய்ச்சது தப்புதான்.. அதுக்காக காலேஜ் சுத்தி வேணும்னாலும் ஓடச்சொல்லு கேட்குறேன் ..ஆனாஇப்படி மாட்டி விட வேணாம்னு சிபாரிசு பண்ணுடா” என்று கெஞ்சிடவே, அவர்களின் முன் வந்து நின்றாள் பூரணி..

“டேய்”

“ஏக்கா”என்றனர் இருவரும் பீதியாய்..

“உங்க பேரு என்னடா?”

“நா….நான் அருண்க்கா, இவன் செல்வம்.. நாங்க ஒரே க்லாசுக்கா…ஆனா,இவனுக்கும் எனக்கும் எனத சம்பந்தமும் இல்லக்கா”  ராஜா ராணியில வர்ற ஜெய் மாதிரியே பயந்து போய் பேசினான் அருண்.

அவர்கள் இருவரின் முகபவத்தை பார்த்து மற்ற மூவரும் சிரித்தனர்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ எதாச்சும் வேணும்னா நேரடியாய் கேட்கவேண்டியதுதானே? இதுக்கு கூட தூது அனுப்புவிங்களா?” அவள்  அப்படி கேட்கவும் இருவருமேபுரியாமல் விழித்தனர்..

“என்னடா,வாயத்திறந்து பேசமாட்டிங்களா?”

“அ…. அது மௌனவிரதம் அக்கா”

“டேய்..”

“உண்மைதான் கா…ஆனா ஃபர்ஸ்ட்  டைம் விரதம் எடுக்குறேனா,அதான் ரூல்ஸ்தெரியல”என்றான் செல்வம்..

“நோட்ஸ்கேட்டிங்கன்னு ஜெனி சொன்னாள்…நாளைக்கு என்னை வந்து பாருங்க” என்றாள்பூரணி… பூம்பூம் மாடு போல இருவரும் தலையாட்டவும் மிடுக்காய்திரும்பி போனால் பூரணி…

“ஷபாஅ”என்று பெருமூச்சு விட்டனர்  இருவரும்…அது ஏன்டா, நம்ம கண்ணுல படுற பொண்ணுங்க மட்டும் பேயாகவே இருக்குதுங்க ?"என்று செல்வம் கேட்க,

"விடு மச்சி,கடைசி வரைக்கும் எனக்கு நீ உனக்கு நான் " என்றபடி இருவரும் கட்டி கொள்ள மற்ற மூவரும் களுக்கென சிரித்தனர்..

சந்துரு, நளினி , ஞானப்ரகாஷ் மூவரும் பயணித்து கொண்டிருந்த கார் அவர்களின் திருமங்கலத்தை  நோக்கி சீறி பாய்ந்தது .. அவர்களுக்கு முன்னறே  தந்தையுடன் ஊருக்கு வந்திருந்தாள் நந்திதா. வழக்கம் போல மகளும் தந்தையுமாய் சேர்ந்தே அவர்களின் வீட்டை சுத்தபடுத்தி கொண்டு இருந்தார்கள் ..பாஸ்கரனை போலவே நந்துவிற்கும் இருப்பு கொள்ளவில்லை .. எப்போது அவர்கள் வருவார்கள் ? ஏதேனும் நடக்குமோ ? என்ற பயத்தை தாண்டி சந்துருவின் முகத்தை சில நாட்களுக்கு பிறகு பார்க்க போகிறோம் என்ற பரபரப்பு தான் அவளுக்குள் அதிகமாய் இருந்தது ..

வீட்டு வேலைகளில்  கண்ணாய்  இருந்தாலும் அவ்வப்போது, நந்துவை பார்த்து கொண்டுதான் இருந்தார்  பாஸ்கரன் .. அவசரபட்டு மகளின் மனதில் ஆசையை வளர்த்து விட்டோமோ ? என்ற கவலை அவருக்குள் ... நேற்றிரவு , நளினி போனில் வீட்டில் நடந்தவற்றை கூறவும் தான் பாசம் என்ற பெயரில் தான் கொஞ்சம் அதிகப்படியாய் நடந்துவிட்டோம் என்று உணர்ந்தார்  பாஸ்கரன் ..

தனது மகளுக்கு பட்டினத்தில்   படிக்க வாய்ப்பு கிடைத்ததுமே அவர் பூரித்து போனதற்கு முதல் காரணம் , தனது தங்கையும் தங்கையின் மகனும் அங்கு இருப்பதுதான் .. ஆனால் தனது தங்கையின் கணவரை பற்றி அதிகம் யோசிக்கவில்லை அவர் .. எதுவாகி போயினும் நளினி தனது கணவனை சமாளிது விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்..

ஆனால் இன்று அவரின் கோபத்தின் அளவு புரிந்து கொண்டவருக்கு மனம் பதைபதைத்தது .. ஏற்கனவே தன்மேல் கோபத்தில் இருக்கும் தங்கையின் கணவர் ,தனது மகளை பயன்படுத்தி குடும்பத்தோடு இணைய முயல்கிறாரோ ? என்ற எண்ணம் ஞானப்ரகாஷுக்கு வந்துவிட்டால் ? தன்னைவிட தனது மகளுக்கு இது எவ்வளவு பெரிய இழுக்கு ? மறந்துவிட வேண்டும் அவள் , சந்துருவை மறந்துதான் ஆக வேண்டும் ..

ஞான பிரகாஷும் ஒரு தந்தை தானே ? தன் மகள் தனக்கு இஸ்டம் இல்லாமல் காதலித்தால் தன்னால் போருக்க முடியுமா? பிரகாஷுக்கும் அப்படித்தானே இருக்கும் ? பிரகாஷின் விருப்பம் இல்லாமல் ,அவரின் மனம் மாறாமல் நந்து,சந்துருவின் திருமணம் நடக்கவே கூடாது என்று உறுதியாய் இருந்தார் பாஸ்கரன் .. இதழோரம் புன்னகையையும் விழியோரம் கனவுகளையும்சுமந்தப்படி  வளம் வந்த மகளை கவலையாய் பார்த்தார் பாஸ்கரன் ..இருப்பினும் கடமை முதளில்வந்து நிற்க ,ஒரு முடிவுக்கு வந்தவராய் ,

"நந்தும்மா உன்கிட்ட அப்பா கொஞ்சம் பேசணும் டா"என்றார் .. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அவர்முன் வந்து நின்றாள்  அவள் .." சொல்லுங்கப்பா" ..

" அப்பா உன்கிட்ட ஒரு  விஷயம் சொல்லணும்மா "

"அதான் சொன்னிங்களே ,தயங்காமல் என்னனு சொல்லுங்கப்பா .."

"  அது வந்து " என்று ஆரம்பித்தவர், சந்துருவின் வீட்டில் நடந்ததையும் தனது எண்ணத்தையும் கூறினார் .. இளகிய மனம் கொண்ட தன் மகள் உடைந்து விடுவாளோ என்று பயத்துடனேயே அவர் பார்க்க, நந்து அசையாமல் அமர்ந்திருந்தாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.