(Reading time: 10 - 20 minutes)

15. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

வித்யா தன் அண்ணன், அம்மா என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் நல்ல பெண் தான்.. தன் அண்ணன் தனக்கு நிச்சயம் நல்லது தான் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளவள் .  அதனால்தான் தன் அண்ணன் பார்த்த மாப்பிளை என்று அவள் கணவர் மேல் மிகவும் அன்பு வைத்து இருந்தாள்.

வித்யா மாமியார் தனக்கு ஒரே மகன் எனபதால் தன்னோடு அவன் என்றும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த வித்யா கணவர், அவளின் அன்பை பார்த்து அவரும் அவளிடம் மிகுந்த காதல் கொண்டார். அதனால் தான் வித்யா உண்டான போது வெளிநாட்டிற்கு செல்ல கிடைத்த வாய்ப்பை மறுத்து , ஆதியிடம் கூட கோபம் கொண்டார்.

அது வரை வித்யா மாமியார் , தன் மகன் தன் பேச்சை கேட்பான் என்று நம்பிக்கை வைத்திருந்தவர், அதற்கு பின் மகன் இனிமேல் வித்யா பேச்சைத்தான் கேட்பான் என்று உணர்ந்து கொண்டார். மகனின் தன்மை அறிந்த வித்யா மாமியார், வித்யாவிடம் எந்த பிரச்சினையும் வைத்துக் கொள்ளாமல், அவள் பிறந்த வீட்டினரை முக்கியமாக அவள் அண்ணன், அண்ணி இருவரிடமும் பிரச்சினை செய்து கொள்ள வைத்தார், அதையும் நாசுக்காக வித்யாவே அவர்களை கேள்வி கேட்குமாறு தூண்டி விடுவார். அதன் விளைவே வித்யா அவள் அண்ணனின் சூழ்நிலை தெரிந்தும் , அவன் தன் கணவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

hospitalil வித்யாவிடம் பேசிய ஆதி, அதற்கு பின் அவளிடம் பேசுவதில்லை,

வித்யா வீட்டிற்கு சென்ற அன்று மீண்டும் தன் வீட்டிற்கு பேசினான் ஆதி,

"ப்ரயு .. எல்லோரும் வீட்டிற்கு வந்தாச்சா..? " என்று வினவினான்.

"ஆமாம் .. அங்கே எப்படி இருக்கு ? புயல் எல்லாம் ஓய்ந்ததா? வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டீங்களா? "

"ஆமாம் டா.. இங்கே ரெண்டு நாளா பரவா இல்லை.. இன்னிக்குதான் ஆபீஸ் போனேன்.. "

"சரி.. இனிமேல் எப்போ உங்களால் இங்கே வர முடியும்?"

"தெரியல டா.. இந்த ஒரு வார வேலை எல்லாம் அப்படியே இருக்கு . அதுனாலே.. அதை கொஞ்சம் செட் ரைட் பண்ணிட்டு மறுபடி விசா எல்லாம் ரெடி பண்ணும்.. நான் ஒரு பத்து நாள் கழிச்சு என்ன பண்ணலாம் ன்னு பார்க்கிறேன்.. "

ஆதியின் வரவு மற்றும் கல்யாணம் எல்லாவற்றிற்கும் சேர்த்து பதினைந்து நாட்கள் லீவ் எடுத்திருந்த ப்ரயு.. ஆதியின் நிலையை பார்த்து, அவனிடம் சொல்லி விட்டு லீவை கான்செல் செய்துவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள். ஆதி எப்படியும் கூடிய சீக்கிரம் வருவான் அப்போது தேவைப்படும் என்று எண்ணினாள்,

வழக்கம் போல் இரவுகளில் பேசும் ஆதியிடம் பிரயுவும் பேசிக் கொண்டிருந்தாள். அவன் இரவு நேரங்களில் பேசுவான் என்பதால், முடிந்த வரை வேலைகளை முடித்து விட்டு தான் அவனோடு பேச வருவாள்..

அன்று இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே.. அவள் அத்தை அழைக்க, அவனிடம் ஒரு கால் மணி நேரம் கழித்து on லைன் வருவதாக சொல்லி விட்டு சென்றாள். இதை போல் தினமும் நடக்க ஆரம்பித்தது.

சற்று நேரம் கழித்து அவள் வரவும், என்னவென்று வினவினான்..

"ஒண்ணுமில்ல பா.. பகலில் நான் வேலைக்கு போய் விடுவதால், அத்தை தான் வித்யா, குழந்தை இருவரையும் கவனித்து கொள்கிறார்கள். இரவுகளிலும் அவரே முழிக்க முடியுமா? அதனால் இரவுகளில் நான் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு, அத்தையை ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறேன். உங்களோடு பேசும்போது , சமயத்தில் குழந்தை அழுதால் , எடுத்து வித்யாவிடம் கொடுத்து வாங்கி விடுவேன்.. " என்றாள்.

ஒஹ்.. குழந்தைக்காக அடிக்கடி முழிக்க வேண்டியிருக்கிறதா.. ப்ரயு?"

"ஆமாம் பா.. சின்ன குழந்தை அல்லவா? அது பசிக்கு முழுதுமாக சாப்பிட முடியமால், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு மீண்டும் கொஞ்ச நேரத்தில் அழும்.. எப்படியும் ஐந்து, ஆறு முறை எழுந்து கொள்ளும்.."

ஒஹ்.. உனக்கு மறுநாள் வேலைக்கு போக கஷ்டமாக இல்லையா ?"

"கஷ்டமாக தான் இருக்கும்.. ஆனால் .. இது நாம் தானே செய்ய வேண்டும்."

மேலும் சற்று நேரம் அவளிடம் பேசி விட்டு வைத்தான்.

றுநாள் இரவு தன் தாயிடம் முதலில் பேசினான் ப்ரயு..

பொதுவான நலம் விசாரித்த ஆதி, "அம்மா.. உங்களுக்கு உதவியாகவும், வீட்டு வேலைக்கும் சேர்த்து ஒரு ஆளை ஏற்பாடு செய்து கொள்ளுங்களேன்.. "

"ஏன் ஆதி ?"

"இல்லைமா.. இப்போ வித்யா, குழந்தை கவனிக்கவே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும், இதில் வீட்டில் சமையல், மற்ற வேலையும் சேர்த்து எப்படி பார்த்துக் கொள்வீர்கள்? அதனால் தான் சொல்கிறேன்."

"காலையில் எல்லா வேலையும் ப்ரத்யா முடித்து விட்டு தானே செல்கிறாள்.. பின் என்ன..?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.