(Reading time: 36 - 71 minutes)

20. காதல் பின்னது உலகு - மனோஹரி

Kadhal pinathu ulagu

திபன் வந்துவிட்டு போனபின் பவிஷியாவிற்கு துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. அந்த நொடியே அபையனை அழைத்துப் பேச ஆயிரம் ஆசை. ஆனால் தன் அண்ணனை இவள் வீட்டிற்கு அனுப்பும் அவனே இவளை அழைக்கவில்லை என்னும் போது இவள் அழைப்பதும் சரியாக வராது என தடை போட்டது அறிவு….

எப்படியும் நாளைப் பார்த்துவிடப் போகிறாள். அதற்கு ஏன் தேவையில்லாத ரிஸ்க்…..ஆக அவனை அழைப்பதை தவிர்த்தவள்….. இவள் அழைப்பை ஏற்கவில்லை என தெரிந்தும் தினமும் நூறு முறை இவளை அழைத்துப் பார்க்கும் நிலவினையை அழைத்தாள்.

இவ்ளவு நாள் ஃபோன் அட்டென் பண்ணாததுக்கு எருமைல ஆரம்பிச்சு எலி வரைக்கும் எல்லா அவதாரத்தையும் நம்ம எடுக்க வைப்பா…… நேர்ல பார்க்கிறப்ப குறஞ்ச பச்சம் சீயக்கா பொடி காஃபி கட்டாயம் கிடைக்கும்…. பட் அவ கைல அடி வாங்குறதுனாலும் ஓகே…… இப்படி நினைத்துக் கொண்டே இவள் அழைக்க……திரும்ப திரும்ப அழைக்க… இப்போது எடுக்காமல் போனது நிலாப் பொண்னு.

கோபத்தில் எடுக்காமல் இருப்பாள் என பவி நினைக்கவில்லை……நிலு குணத்துக்கு அதுவும் அவ இவளை இவ்ளவு தடவை ஃபோன் பண்ணி தேடுனதுக்கு..…இப்ப போனை எடுத்து பொரிஞ்சு தள்ளியிருப்பா….அமோகமா அர்ச்சனை கிடச்சிறுக்கும்…… அடுத்து தான் இவ என்ன பேச வர்றான்னு கேட்காம போனை கட் பண்ணிட்டு, இவ அடுத்து எத்தனை தடவை கூப்டாலும் அட்டென் செய்யாம காயப் போடுவா…கடைசில மெஸேஜ்ல மெகா சைஃஸ்ல கால்ல விழுந்த பிறகு…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ம் சொல்லு எரும” ன்னு ஏக மரியாதையா பேசா ஆரம்பிப்பா…. அதுதான் நிலு… ஆனா இப்ப என்ன ஆச்சு? குழம்பிய பவி மண்டையில் மாங்கா சைஸ் பல்ப் மெல்ல எரிஞ்சுது…. ‘அவ யவி அண்ணா கூட இருப்பாளோ….?’ ‘சரி அவளா கூப்டட்டும் அப்பவே அடி வாங்கிக்கலாம்…’ என சிந்த வந்த சிரிப்பை செவ்விதழில் அடக்கிய படி முடித்தாள்.

உண்மையில் பவி நினைத்தது போல நிலு அங்கு யவ்வனுடன் தான் இருந்தாள்…… ஆனால் டூயட் மோட்ல இல்ல……டூ பேக் சில்லி சாப்ட  மூட்ல……

முந்தின நாள் கீழ விழுந்து எழுந்ததுக்கு ஹாஃஸ்பிட்டல் எங்கயும் கொண்டு போய்டுவாங்கன்ற பயத்துல அப்பவே ராம்ப் வாக்லாம் செய்து காமிச்ச பொண்ணு மறுநாள் அத மத்தவங்கல்லாம் மறந்துடுவாங்கன்னு ஜோரா நினச்சு ஸீனா ஸ்டார்ட் செய்துச்சு டேய….

ஆமாம் பொண்ணு பிறந்ததிலிருந்தே ஒரு குடும்ப குத்துவிளக்கு…..எப்பவும் அதிகாலை சுப வேளை ஆராம்பமாகிடும் அதன் வேலை….. ஃஸ்கூல் படிக்கும் காலத்திலிருந்தே அம்மாவுக்கு கிட்சென்ல ஹெல்ப் பண்ணிட்டுதான் கிளம்பிப் போவாள் நிலவினி…..

இப்ப இந்த மேரேஜ் ஃபிக்‌ஸ் ஆன டைம்ல அவ மனம் ஒரு நிலையில் இல்லை என்பதால் எல்லாம் முன்ன பின்ன ஆகியிருக்க…..இப்போதுதான் யவி கூட பூரண சமாதானம் வந்துட்டே……அதனாலதானோ என்னமோ காலைல அவ வழக்கமா எந்திரிக்கும் டைம்க்கு விழிப்பு வந்துட்டு.

விழிக்கும் வரை ஏதோ சுக கனவில் இருந்தாள் போலும்…விழிக்கும் போது கனவு ஞாபகம் இல்லை எனினும் அதன் தித்திப்பு அப்படியே அடி மனதில் சில்லிப்பு செய்ய…..உவகையோடு தலை திருப்பிப் பார்த்தவளுக்கு அவளுக்கு அருகில் அடுத்த புறமாக திரும்பி தூங்கிக் கொண்டிருந்த யவ்வன் பார்வையில் பட்டான்.

முதல் தடவை அவனைப் பார்த்த அந்த நொடியிலிருந்து எப்போதுமே அவனைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கும்….எத்தனை கோபம் எரிச்சல் அவன் மீது இருந்த நேரங்களிலும் அவனைப் பார்க்கவும் இவள் மனது கலையும்….

விழிக்கோடு அவனைத் தொடவும் ஆளில்லா அவள் உள் அறைக்குள் அரவமின்றி பூக்கள் மலரும்….இப்போதே கேட்கவே வேண்டாம். ஆக நிரம்பி வழியும் மனதுடனே நாளைத் தொடங்கினாள் அவள்.

அவள் குளித்து வெளி வரும் போது யவி அங்கு இல்லை…. ஜாகிங் போயிருப்பான் என தெரியும்…..நேற்றே சொல்லி இருந்தான் “காலைல ஜாக் போய்ட்டு அப்டியே ஃபார்ம ஒரு ரவ்ண்ட் பார்த்துட்டு வரனும்….” என.

அவனுக்காக ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் எனறு தோன்றியது இவளுக்கு. பொதுவாக சமையலில் ரொம்பவும் ஆர்வம் உள்ளவள் என்பதால் இதுவரை இங்கு அவள் எட்டிப் பார்க்காத தங்கள் போர்ஷன் கிட்சனில் வேலையை துவக்கலாம் என எண்ணினாள்.

முதல் வேலையாக பாலை காய்த்து ஒரு காஃபி…. அடுத்து ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணலாம்….

லன்ச் இன்னைக்கு அவனுடைய ஏதோ ஒரு அத்தை வீட்டில் என்று யவ்வன் நேற்றே சொல்லி இருந்தான். ஆக இவள் எது செய்யனும்னாலும் காலை ப்ரேக்ஃபாஸ்ட்ல தான் காமிக்கனும்….

ஸ்பெஷல்னு ஃபீல் பண்ண எதாவது ஒரு ஸ்வீட் செய்யலாம் என யோசித்து…. உள்ளே இருந்த தேங்காய் வெல்லம் எல்லாம் பார்த்து அடப்ரதமன் என முடிவு செய்து கொண்டாள்…..ஃஸ்வீட் சாப்ட நேரம் காலம் பார்க்கனுமா என்ன….? காலைல சாப்டலாம் தப்பில்ல…

ஆக யவ்வனுக்கு அன்று காலை சாப்பாடு மனைவி கையால்…. எல்லாம் நல்லாத்தான் போச்சு கொஞ்ச நேரம் வரை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.