(Reading time: 36 - 71 minutes)

ன்னைய கடவுள் இன்னைக்கு இங்க வச்சுறுக்கார்…. அவர் வச்ச இடத்துல என்னால முடிந்தவரை யாருக்கும் தொந்தரவு இல்லாம, என்னால முடிஞ்ச நல்லத செய்துட்டு நிம்மதியா வாழ்ந்துட்டு போகனும்றதுதான் என் லைஃப் ஸடைல்….. நாளைக்கே  நான் அடுத்த நாட்ல போய் அனாதையா நிக்ற நிலமையும் வர முடியும்….. ஏன் நைட்டோட நைட்டா இந்த பூமியவிட்டே போற மாதிரியும் ஆகிட முடியும்…. அப்டி இருக்றப்ப நான் நிக்ற இந்த இடம் எனக்கு நிரந்தரம்……இது என் இடம்….இங்க உள்ளவங்கதான் என்னோடவங்க…… மத்தவங்கள நான் வெறுக்குறேன்னு எப்படி இருக்க?....”

“…………”

“என்னைப் பொறுத்தவரைக்கும் நாடு இனம் மதம் மொழி எதனாலும் அன்பு செலுத்துறதுக்கு காரணமா எடுத்துக்கலாம்….ஆனா இது எதையுமே வெறுக்குறதுக்கு அடிப்படையா எடுக்க கூடாது… எடுக்கவும் மாட்டேன்….”

அவள் முகத்தையே… அவனைப் பார்த்திருந்த அவள் கண்களையே… பார்த்து நிதானமாக சொல்லி முடித்தான் அதிபன். பதிலென்று எதுவும் வாய் திறந்து சொல்லவில்லை அனு.

அவன் பேசும் விஷயங்கள் அவளை அசரடிக்கின்றனதான்….கேட்கும் மனதுக்கு இதமாய் இருக்கின்றனதான்…..ஆனால் இவன் எப்போதும் பேசும் போது ஒரு நல்லதை  சொல்வான், நாளை வந்து வேறு எதற்காக என்னதை செய்வானோ என்று அவளுக்கு இருக்கும்தானே….அவள் அனுபவம் அப்படி…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஆனாலும் அவள் முகத்தில் சற்று அமைதி வந்திருந்தது. பார்வையை மீண்டுமாக தன் எதிரிலிருந்த சுவற்றின் மீது திருப்பிக் கொண்டாள்.

அவள் அடுத்து எதையும் பேசப் போவதில்லை எனப் புரிந்தது அதிபனுக்கு. கிளம்ப முடிவு செய்தான் அவன்.

“கனி ஆன்டி உன்ன இப்பவே பார்த்துட்டு வர சொன்னாங்க அனு….. அதான் இவ்ளவு லேட் ஹவர்ஸ்னாலும் வந்தேன்…. மனசை போட்டு குழப்பிக்காத..…உன்னை யாரும் இங்க வெறுக்கலை….மிச்சதை நாளைக்கு பேசுவோம்….டேக் கேர்”

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென அவனை திரும்பிப் பார்த்தாள் அனு. அவள் முகத்தில் அத்தனை வெளிச்சம். விரிந்த கண்களில் அப்படி ஒரு…… என்ன அது? ஏதோ ஒன்று… ஆனால் அது நல்லது….

“கனி ஆன்டியா உங்கள இப்ப இங்க வர சொன்னாங்க?” கேட்ட அவள் குரல் இவனை எவ்வளவோ அங்கீகரித்தது.

அந்த நொடி அவள் கண்ணும் குரலும்…..இப்போது நேரமும் சூழலும் என்னதாய் இருந்தாலும் எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட வேண்டும் என தோன்றிவிட்டது அதிபனுக்கு.

ஆரம்பத்தில் விமானநிலையத்தில் அவளை பார்த்த அந்த நிகழ்விலிருந்து ப்ரச்சனைக்கான காரணத்தை  சொல்ல தொடங்கினான் அவன்…. அவளிடமும் அதை கவனிக்கும் முக பாவம்.

“ஓ மை காட்” என இடையிட்டாள் இப்போது..

“அது….என் பவ்ச் அது… அவன் யாரோ….என்னோடத எடுத்துட்டான்……” அவசர அவசரமா தன் நியாயத்தை புரிய வைக்கும் வேகத்தில் தொடங்கியவள் பேச்சு,

சற்று வேகம் குறைந்து “எனக்கு போலீஸ்ட்ட போறதுக்குள்ள அவன் எங்கயும் போயுடுவானோன்னு இருந்துச்சு……. கத்தி ஹெல்ப் கேட்டாலும் யாரும் ஹெல்ப் பண்ணுவாங்களா…… என் பவ்ச் திரும்ப கிடைக்குமான்னு தெரியலை…..”

பயம் கலந்து தயங்கி “அதோட நான்… தனியா வந்துறுக்கேன்…… அந்த கல்ப்ரிட்டே என்ட்ட அடுத்து எதாவது ப்ரச்சனை செய்தா….. என்ன செய்யன்னு பயமா இருந்துச்சு….”

 தலை குனிந்து… முனங்கலாக….. “அதான் அவனுக்கே தெரியாம அவன்ட்ட இருந்து எடுத்துடலாம்னு……” தொக்கி நிற்க….

அத்தனை சூழலிலும் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்…..

அவன் முகத்தில் முகிழாமல் பரவுகிறது முறுவல் ஒன்று…..

முன் பின் தெரியாத, முழுவதும் அந்நிய பழக்க வழக்கங்கள் உள்ள நாட்டிற்கு தேடி வந்து குடியேறும் இரும்பு பிடிவாதமும்…..யாருக்கும் இரங்கும் இளகிய மனமும்…. அதில் ஒளிந்திருக்கும் அத்தனை குழந்தைதனமும்….அழகான ஒரு நேர்மையுமாய்…. எப்படிப் பட்டவள் இந்த அனு….?

“இதெல்லாம் எனக்கு தெரியாதா….எதோ பொண்னு பிக்பாக்கெட் அடிக்குன்னு இருந்துச்சு…” அவள் தொனியிலேயே… அவள் பேசும் விதமாகவே அவன் சொல்லிக் காண்பிக்க…. குனிந்திருந்தவள் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்….. அதுவாக வருகிறது அவளிடம் புன்னகை….

ஏதோ ஒருவகையில் சூழ்நிலை இலகுவாகிக் கொண்டு வருவது போல் இருந்தது இவனுக்கு…

“சாரிமா….இதுலதான் எல்லாம் தப்பாக ஆரம்பிச்சுது….” தொடர்ந்து இன்று நடந்த  நிகழ்வுகளை இவன் கோணத்தில் இவன் விளக்க….

“அது ஜுவானும் கூட வர்றேன்னு சொன்னான் தீபன்…..அதுக்குத்தான் நைட் அப்டில்லாம் சேர்ந்து போறத ஊர் ஒத்துக்காதுன்னு சொல்லிட்டு இருந்தேன்…..மத்தபடி உங்களுக்கு தெரியாம வந்துட்டுப் போறது தான் ப்ளான்…அது உங்களுக்கு இப்டி புரிஞ்சிருக்கும்னு நான் எதிர் பார்க்கலை……” அவனுக்கு அரை குறையாய் புரிந்த அந்த அடுத்த மொழி கலந்தப் பேச்சுக்கு அவள் விளக்கம் சொன்னாள்.

அவள் குரலில் சற்று குற்ற உணர்வும் இருந்தது…..உன்ன ஏமாத்த நினச்சேன்னுதான எப்படியும் இந்த பேச்சுக்கு அர்த்தம்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.