(Reading time: 36 - 71 minutes)

ந்த தண்ணி தொட்டி சுவர்ல வச்சிறுந்த என் மொபைலை எடுக்கத்தான் அப்ப நான் அந்தப்பக்கமா  போக ட்ரைப் பண்ணிட்டு இருந்தேன்…..அப்பதான் நீங்க அங்க வந்துறுக்கீங்க நான் கால் தடுமாறி உங்க மேலயே விழுந்துட்டேன்….விழுறப்ப அனிச்சையா கைல கிடைக்கிறதை பிடிப்பமே அப்டித்தான் நான் உங்களை பிடிச்சதும்…..

பட் அந்த நேரமே முதல்ல ஐயோ யாரோ ஒருத்தன் இந்த நேரத்துல இங்கயா…..என்னை என்ன  செய்வானோன்னு ஒரு பயங்கர பயமும் அடுத்து உடனே அது நீங்கன்னு புரியவும் நிம்மதியும்தான் வந்துச்சு…..

இத்தனைக்கும் உங்களுக்கு பயந்துதான் ஒளிஞ்சு ஒளிஞ்சு வந்திருந்தேன்…. இருந்தாலும் நிச்சயமா என்னை ஹார்ம் பண்ண மாட்டீங்க….தப்பான எண்ணத்துல உங்க விரல் நகம் கூட என் மேல படாதுன்னு எனக்கு அப்டி ஒரு நம்பிக்கை…. நீங்க பக்கத்துல இருந்தா அடுத்தவங்க கூட என்னை எதுவும் செய்ய முடியாதுன்னு ஒரு தைரியம்….

 உங்களை தனிப்பட்ட வகையிலே பார்த்திறுக்கேன்…. பேசியிறுக்கேன்…..அத வச்சுதானே நான் உங்களைப் புரிஞ்சுகிட்டேன்…..நீங்க மட்டும் என் பிறந்த நாட்டப் பத்தி… அங்க நேர்ல வந்து கூட பார்க்காதவங்க பேசிக்கிறதை வச்சு…. என் கேரக்டரை எப்டி டிசைட் செய்தீங்க…..? அவ்ளவு ரேசிஸம் உங்களுக்கு…..நான் வொயிட்ன்றதை மாத்த முடிஞ்சாதான் நீங்க சாரி கேட்கதும் நிக்கும்….” கத்தாமல் கொதிக்காமல் அமைதியாய் தன் குமுறலை கொட்டி முடித்திருந்தாள் அனு.

இவன் முகம் பார்க்காமல் சுவரை கூர்மையாய் வெறித்தபடி அமர்ந்திருந்த அவள் மீது நின்றிருந்தன அதிபனின் கண்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

மனதிலோ அவளது தொடக்கப் பேச்சை வைத்து இவனுக்கு வந்திருந்த புரிதலில் சில இறுக்க மொட்டுக்கள் இதழ் அவிழ்க்கும் இசை…..

இவன் அவளை அடுத்தவீட்டுப் பெண்ணாக கூட எண்ணவில்லை……..எப்போதிருந்து என்று தெரியவில்லை ஏன் என்றும் புரியவில்லை…..அவளை அடுத்தவளாக கூட நினைக்க தவறி இருக்கிறான் இவன். ஆனால் அதற்கு தடையாக அறிவில் நின்றிருக்கிறது அந்த பிக்பாக்கெட் நிகழ்ச்சி….. அதில் அவளை காய்ச்சி எடுத்திருக்கிறான்….

சில காதல் வண்ண மயம் வான வேடிக்கை என அதிர அறிவித்து வரும்…..சில நேரம் ஒரு காதல் ஊமையாய் ஒலியற்ற ஒளியாய் உள்ளே வந்து கரைந்து கொள்ளும்…. இரண்டாம் வகையில் இவன் இணைந்திருப்பது இப்போதுதான் புரிகிறது அதிபனுக்கு….

அடுத்ததாய் வருவது அம்மா ஞாபகம்….கூடவே தெரிகிறது அவரது சம்மதம்….. அம்மாவுக்கு சம்மதம் என்றால் அப்பா உட்பட அனைவருக்கும் சம்மதம் என்றுதான் அர்த்தம்… ஊரைப் பொறுத்தவரை அனு ஒரு தமிழ்ப் பெண்ணாய் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்ளுமோ….. ஆனால் இப்போதோ முதலில் அதிசயிக்கும்…. அதன் பின் அதுவே அவர்களுக்குப் பழகிப் போகும்….. ஆக யாரும் அனுவை வறுத்தப் போவது இல்லைதான்……  

ஆனால் அனுவுக்கு…??? இந்த நேரத்தில் அது பதில் தேடக் கூடாத கேள்வி…. கொஞ்சம் டைம் போகட்டும் ஆனால் இப்ப முதல்ல அவளுக்கு இருக்ற இந்த தப்பான புரிதலை சரி செய்யனும்…

“அனு….” இவன் குரல் காதில் விழுந்த அடையாளம் கூட இல்லை அவள் முகத்தில்.

“சைன்ஸ் படிச்சிறுக்கியா அனு?” சம்பந்தம் இல்லா இந்த கேள்வியில் திரும்பிப் பார்த்தாள் அவள்.

“சைன்ஸ் படி பார்த்தால்கூட ஏதோ ஒரு குறிப்பிட்ட க்ளைமேட் பூமியில ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதில குறிப்பிட்ட சூழ்நிலை காற்று மழையோட அமைஞ்சதால  அபூர்வமா  ஒரு செல் உயிர் தோன்றி… அடுத்தும் அது  அதிசயத்திலும் அதிசயமா ஏற்ற சூழ்நிலை அமையப் போய் மனுஷனா பரிணமிச்சுதுன்னு சொல்றாங்க…..

அது படி உலகத்துல ஒரு இடத்துலதான் முதல்ல மனுஷன் தோன்றி அப்றம் உலகம் முழுக்க பரவி இருக்கனும்…. அப்டி எல்லோரும் ஒரு இடத்திலிருந்து வந்தவங்கன்னா…. இங்க உள்ள எல்லோருமே வெளிநாட்ல இருந்து வந்தவங்கன்னு தான் அர்த்தமாகுது…..இல்ல அப்டி மனுஷங்க தோன்றுனதே இங்கதான்னா….. இப்ப உலகம் முழுக்க இருக்கவங்களும் இந்த நாட்டுக்காரங்கதான்..….அப்ப நீ உன் பூர்வீகத்துக்கு திரும்பி வந்திருக்கன்னு அர்த்தம் ஆகுது…..இதுல வெளிநாட்ல இருந்து வந்திறுக்கன்னு நான் ஏன் உன்னை வெறுக்கனும்….?

அதோட அந்த நாட்ல தப்பே நடக்காது…. அந்த இன மக்கள் இப்டி ஒரு தப்ப செய்யவே மாட்டாங்கன்னு எதாவது ஒரு நாட்டையோ ஒரு இனத்தையோ சொல்ல முடியுமா?  உலகத்தில் எல்லோருமே நிறை குறை உள்ள மனுஷங்க….எல்லா நாட்லயும், எல்லா இனத்துலயும் நல்லது செய்றவங்களும் இருக்காங்க கெட்டது செய்றவங்களும் இருக்காங்க…. இதுல யாரை மேல…..இல்ல யார கீழன்னு எப்படி சொல்ல?

ஒரு தமிழ்நாட்டுக்காரனா நான் பார்த்தே இருக்காத அஸ்ஸாமி பெங்காலி கஷ்மீரி மராத்தி பீகாரின்னு பல பிரிவு மக்களை என்னோடவங்களா ஏத்துக்க முடியும்னா….ஏன்  என்னால அடுத்த நாட்டுக்காரங்களை ஏத்துக்க முடியாதுன்னு நீதான் சொல்லனும்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.