(Reading time: 36 - 71 minutes)

மூத்த மருமகள் ஆலிவைப் போல அனுவும் யூஎஸ்ஸில் இருக்க வேண்டும் என்பதுதான் கனிமொழியின் எண்ணம்…. என்றோ ஒரு நாள் ஆலிவுக்கும் அனுவுக்கும் மீண்டுமாய் ஒரு வாழ்வு அமையும்…. அமைய வேண்டும் என எண்ணினார் அவர்.

இத்தனை வயதில் கணவரும் பிள்ளைகளும் இல்லாமல் நிற்பது அவருக்கு எப்படியாய் இருக்கிறதாம்….இதில் தன் மருமகள்களுக்கும் அந்த நிலை வேண்டும் என அவர் எப்படி எண்ணவாம்…..

ஆக அவர் அனு இங்கு வருவதை  முடிந்த வரை மறுத்துப் பார்த்தார். ஆனால் நண்பர்கள் உதவியுடன்  மாத்யூ உடலை அங்கு பத்திரப் படுத்திவிட்டு…… ஒருவாறு அலைந்து திரிந்து பலரிடமும் உதவி வாங்கி இந்தியா கிளம்பி வந்தாள் அனு. அதற்கே சில மாதம் பிடித்தது.

கொண்டல்புரம் கட்டுப்பாடுகள் பற்றி கனிமொழிக்கு அவர் இங்கு இந்தியாவில் வாழ்ந்த காலம் வரை தான் தெரியும்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவர் அப்போதைய நிலமையை மனதில் வைத்து சொன்னவைகளின் படி நவமணியும் கனி மொழியும் ஊருக்கு பிடிக்காத வகையில் திருமணம் செய்திருப்பதால் ஊர் இன்று வரை அவர்களை ஏற்காது என்ற எண்ணம் அனுவுக்கு…..

அதனால் மாத்யூ இறுதிசடங்கை இங்கு செய்ய தடை வருமோ என்ற பயம், அதோடு உள் நாட்டுக்காரர்களான நவமணி கனிமொழி திருமணத்தையே எதிர்த்த ஊர்…. வெளிநாட்டுப் பொண்ணான இவளை மணந்த மாத்யூவை எப்படி ஏற்கும் என்ற குழப்பம்…

ஆக யாருக்கும் சொல்லாமல் நவமணியின் பூர்வீக இடத்தில் இறுதிசடங்கை முடிக்க எண்ணினாள் அனு.

ஆனால் இங்கு வந்த பின்தான் அவள் எதிர்பார்த்தது போல் இடம் எதுவுமே பூங்காவனத்தார் பேரில் இல்லை என்று தெரிய வந்ததாலும்…..

அதிபன் பேரில் மட்டும் சில இடங்கள் இருக்கின்றன ஆனால் அதிபனுக்கு இயல்பிலேயே இவளைப் பிடிக்கவில்லை எனும் போது ஊரே ஒத்துக்கொள்ளாத விஷயத்தை அவன் எப்படி செய்து தருவான் என்ற நினைவிலும்…..

அதுவும் கனிமொழியுடன் அனு அங்கு குடியேறும் பட்சத்தில் அவள் கனிமொழியின் மருமகள் என தெரியவந்தால் அதற்காகவும் ஊர் கனிமொழியை இன்னுமாய் வெறுக்க கூடுமோ என்ற தவிப்பிலும்…

அவள் எதற்கு வந்தாள் கனிமொழிக்கும் அவளுக்குமிடையேயான உறவு என்ன என்பதையே கூட யாரிடமும் சொல்லாமல் திரும்பிப் போயிருந்தாள் அனு.

இதில் கனிமொழி பகிர வேண்டியவைகளை அதிபன் வீட்டில் பகிர்ந்திருந்தார்.

அதிபன் நேற்று இரவு அனுவை ஹாஃஸ்பிட்டல் அனுப்பிவிட்டு கனிமொழி வீட்டில் அமர்ந்து அபயனிடம் பேசிக் கொண்டிருந்தான் அல்லாவா….. அதை முழுவதுமாக கேட்டிருந்தார் கனிமொழி….

இரண்டு மகன்களை வளர்த்தவர்……அதிபன் மனம் புரியாமல் போகுமா…? அவருக்கு அதிபன் அனுவை விரும்புவதாக தோன்றியது.

கனிமொழியைப் பொறுத்தவரை தன் இழப்பின் சோகம் மிகவும் பெரிதுதான்….. தன்னில் தானே மரத்து வாழ்வை வெறுத்து அனைத்திலும் கசந்து போயிருந்தார் அவர். ஆனால் அதே நேரம் அனு அவர் தூக்கி வளர்த்த குழந்தையல்லவா…..?

அவள் முதல் முதலில் குப்புற விழுந்தது……உட்கார்ந்தது….தவழ்ந்தது…..நடந்தது…..பேசியது என எல்லாம் இவர் கரத்தில்தான்……அடுத்தும் எப்போதும் எல்லாவற்றிற்கும் இவரிடம் தான் வந்து நிற்பாள் அவள். அனுவைப் பொறுத்தவரை முதல் அம்மா இவர்தான்…..அவளது சொந்த அம்மாவே அடுத்துதான்.

அவளது நல்வாழ்வை இவர் எப்படி மறந்து போகக்கூடும்?

அதிபன் பேசியவரை அவன் குணமுமே கனிமொழிக்கு பிடித்திருந்தது. அனுவுக்கான எதிர்காலம் அவனாய் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒரு உணர்வு அவருக்கு…… ஆனால் அது எவ்வளவு தூரம் நிறைவேற முடியாத விஷயம் என்பதும் அவருக்கு தெரியும்….

அதிபனுக்கு மட்டும் விருப்பம் இருந்து போதாது….. அவனது குடும்பத்திற்கும் இதில் சம்மதம் இருக்க வேண்டுமே….அதோடு ஊர் வேறு குறுக்கே வந்து என்ன சட்டம் போடுமோ….அதற்கும் மேலாக அனு சம்மதிக்க  வேண்டும்….

ஆனால் அதற்காக முயற்சியே எடுக்காமல் இருந்துவிடவும் முடியாதே….. அதனால்தான் முதலில் அதிபனை அத்தனை இரவில் அனுவைப் பார்க்க அனுப்பி இருந்தார் அவர்….

கனிமொழியே அதிபனை அத்தனைக்கும் பிறகும் அதுவும் அந்த இரவில் அனுப்பி இருக்கிறார் என தெரியவந்தால் அதிபன் நம்பத் தகுந்தவன் என்று அனு உணர்வாள் என்று கனிமொழிக்குத் தெரியும்….. அது அதிபன் அனு இருவருக்குமே அந்த நேரத்து குமுறும்  மனநிலைக்கு சற்றாவது ஆறுதல் செய்யும், அதோடு பரஸ்பர நம்பிக்கை தானே எந்த ஒரு உறவுக்கும் அடிப்படை என்பது அவர் எண்ணம்.

அடுத்து அதிபன் குடும்பத்தாருக்கு அனு பற்றி தெளிவான ஒரு புரிதலை உண்டாக்கிவிட வேண்டும் என நடந்தவைகளை சொல்லி வைத்தார்.

அதோடு இவர் நினைத்த வண்ணம் அதிபன் அனு விஷயம் திரும்புமோ இல்லையோ….இந்த ஊரில் ஓரளவுக்கும் இவருக்கும்  இருக்கும் உறவினர்களில் ஓரளவு நெருங்கிய உறவு இவர்கள்தான். அவர்களாவது தனியாக இரு பெண்களும் மட்டுமாக தங்கி இருக்கப் போகும் இவர்களை பற்றி அறிந்து இருக்க வேண்டும் என நம்பினார் கனிமொழி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.