(Reading time: 36 - 71 minutes)

வ பர்ஸ திருப்பி எடுத்தத சொல்லவே அவள் தலை கீழ போச்சு…வாய் முனங்கிச்சு….. ஆனால் இப்போது வெளிப்படையாக அவள் எதையும் சொல்லிக் கொள்ளவில்லை…..

இவனுக்கும் இதற்கு மேல் பேச மனமில்லை…..

எதற்காக அவள் இந்தியா வந்திருக்கிறாள் என அவள் ஏன் யாரிடமுமே சொல்லவில்லை என்பதைப் பற்றி இப்போது இவனுக்கு சிறு யூகம் இருக்கிறது….. ஆன்டிய்யும் அங்கிளயும் விலக்கி வச்சிறுந்ததாலன்னு சொல்றாதானே…..ஆனாலும் அது தெளிவாய் புரியவில்லைதான் அவனுக்கு….. ஆனாலும் அவளிடம் அதைப் பற்றி துருவ மனமில்லை….

ஏதோ ஒரு வகையில் இலகுவாய் இருக்கிறாள் இந்த நிமிடம்…..அதை கெடுக்கும் எதையும் அவள் நினைவில் கொண்டு வந்துவிடக் கூடாது இவன்.

விடை பெற தயாரானான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“இப்ப பெயின் எப்டி இருக்கு அனு….?” கேட்கும் போதே அவன் குரலில் முகத்தில் மொழியில் மண்டியிட்டு ஏறுகிறது பரிதவிப்பும்….குற்ற உணர்வும்…. மன்னிப்பு யாசகமும்….தன்னை மன்னிக்க முடியா தன்மையும்….

உண்மையில் இதைத்தான் அவன் முதலில் கேட்க வந்ததும். ஆனால் அவள் இருந்த மனநிலைக்கு இந்தக் கேள்வி இன்னுமாய் கொதிக்க வைக்கும் என தவிர்த்திருந்தான்.

இப்போதோ இதைக் கேட்காமல் கிளம்ப மனம்வரவில்லை…

வெளிப்படாத புன்னகை ஒன்று முகத்தில் ஒழிந்தாட…. சற்றே தலையை அசைத்தபடி “அதெல்லாம் இப்ப ஒன்னுமில்ல….” என்றாள் சிநேக பாவத்துடன்.

“நாளைக்கு வீட்டுக்குப் போய்டலாமாம்….நீங்க ஃபீல் பண்ணிக்காதீங்க….”

ஒரு வகையில் நிம்மதியாகவே திரும்பி வந்தான் இவன்.

றுநாள் காலை அனுவை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிவர என அபயன் தன் காரில் கனிமொழியுடன் கிளம்பினான். அதிபன் காலையிலேயே கிளம்பி ஹாஸ்பிட்டல்தான் சென்றிருக்கிறான் என்றாலும் அவன் தம்பியை வரச் சொல்லி இருந்தான்.

இரவில் மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும்போதே அதிபன் தெளிந்து தெரிந்ததால் இன்று அதிபனே அனுவை கூட்டி வரட்டும் அதுதான் சரியாக வரும் என நல்ல தம்பியாய் அபயன் நினைத்திருந்தான்.

ஆனால் அதிபனோ “கார எடுத்துட்டு கனி ஆன்டியோட வா….அனுவ வீட்டுக்கு கூட்டிட்டுப் போகனும்” என்று ஹாஸ்பிட்டலில் இருந்து கொண்டு அழைத்தான்.

‘சரி அங்க போய் அடுத்து என்ன செய்யலாம்னு பார்த்துகலாம்……எப்டியாவது அதிய தான் அண்ணி கூட அனுப்பி வைக்கனும்’ என்ற நினைவோடே கிளம்பி வந்தான் அபயன்.

அபயனுக்கு மட்டுமல்ல அவன் வீட்டில் எல்லோருக்குமே அனுவின் நிலை தெரியும். நேற்று சசிபால் கூப்பிட்டு அபயனுக்கு விஷயம் சொல்லி இருந்தான். அத்தகைய மனநிலையில் அதிபனை தனியாக விட நல்ல நண்பனான அவனுக்கு மனமில்லை….ஆக அபயனை அனுப்பி இருந்தான் அவன்.

காலையில் கனிமொழி இவன் வீட்டினருடன் பேசிக் கொண்டு இருக்கும் போது எல்லாவற்றையும் சொல்லி இருந்தார்.  அனுவின் பெற்றோரும் கனிமொழியின் குடும்பமும் பக்கத்துவீட்டுக்காரர்கள்.

கனிமொழிக்கு இரண்டு மகன்களும் பிறந்த பின் பிறந்தவள் அனு. அனு பிறந்த சில வாரங்களில் அவளது தந்தை இறந்து போக…..அனுவின் தாயாருக்கு உடனடியாக வேலைக்கு சென்றாக வேண்டிய கட்டாயம். அப்பொழுது நட்பின் அடிப்படையில் அனுவை தான் பார்த்துக் கொள்வதாக வாங்கிக் கொண்டார் கனிமொழி.

ஆக அனு வளர்ந்ததே கனிமொழியிடம் தான்.  வளரும் காலத்தில் கனிமொழியின் இரண்டு மகன்களுக்கும் அனு நல்ல ஃப்ரெண்ட்….. பின்னாளில் இரண்டாம் மகன் மாத்யூ அனுவை விரும்ப தொடங்கிய போது வீட்டில் யாருக்கும் அதில் மறுப்பேதும் இல்லை….. மூத்த மகன் கெவின் ஆலிவ் என்ற அமெரிக்கப் பெண்ணை மணமுடிக்க அடுத்து நடந்தேறியது மாத்யூ அனு திருமணம்.

மாத்யூ அனு இருவருமே ஸ்கூல் டீச்சர்ஸ்….சற்று எளிமையான வாழ்க்கைதான். கெவின் தீயணைப்பு வீரனாய் இருந்தான். அவன் ஒரு தீவிபத்தில் சிலரை காப்பாற்றும் முயற்சியில் இறந்து போக அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தில் அவனது தந்தை நவமணிக்கு ஹார்ட் அட்டாக்.  அதில் கனிமொழி கணவரையும் இழக்க….

அதோடு முடியாமல் துன்பம் அடுத்து சில மாதங்களில் மாத்யூவையும் கூட்டிக் கொண்டு போனது ஒரு விபத்தில். விபத்தில் மாட்டியது அனுவும் தான். ஆனால் தெய்வாதீனமாக அவள் முழுதாக தப்பிவிட்டாள்.

மருத்துவமனையில் வைத்து மாத்யூ அனுவிடம் “கொண்டல்புரம் போயிடனும் அனு” என சொன்னதுதான் அவனது கடைசி வார்த்தை.

அனு மாத்யூவை இந்தியா கொண்டு வர முடிவு செய்தாள் எனில்…..கனிமொழிக்கோ இனி அங்கு யூஎஸ்ஸில் இருப்பதில் அர்த்தமே இல்லை என தோன்றிவிட்டது. அவர் தன் கடைசி காலத்தை தாய்நாட்டில் முடிக்க எண்ணினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.