(Reading time: 13 - 25 minutes)

18. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தியின் திகைத்த முகத்தை பார்த்த ப்ரயுவிற்கு ஒருபக்கம் வருத்தம் இருந்தாலும், இன்னொரு புறம் சிரிப்பும் வந்தது .

வீட்டின் உள்ளே வந்த ஆதியை எல்லோரும் நலம் விசாரிக்கிறேன் என்ற பேரில் ஹாலிலேயே உட்கார வைத்து இருந்தனர். அவனின் சோர்ந்த முகத்தை பார்த்த ப்ரயு உள்ளிருந்து காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

அவன் வித்யா மாமனார், கணவர் இருவரிடமும் ரெப்ரெஷ் செய்து வருவதாக சொல்லி தங்கள் அறைக்கு சென்றவன், அங்கிருந்து பிரயுவை அழைத்தான்.

வந்ததிலிருந்து தன் மகனோடு தனியே பேச அவகாசம் கிடைக்காத ஆதியின் அம்மாவும், பிரயுவோடு உள்ளே வந்தார்.

ஆதி தன் அம்மாவிடம்,

“அம்மா, எப்படி இருக்கீங்க.. ? “ என்று நலம் விசாரிக்க, பதில் சொன்னவரிடம்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“ஏன்மா.. ? வித்யா வீட்டிற்கு நாம் சென்று அவர்களோடு சேர்ந்து கொள்வதாகதானே சொன்னீர்கள்? ஆனால் எல்லோரும் இங்கே வந்து விட்டார்களே?” என்று அவன் கேட்கும்போதே , ஆதி அம்மாவை யாரோ கூப்பிட,

“ப்ரத்யா.. அவனுக்கு எல்லாம் சொல்லு “ என்று விட்டு போய் விட்டார். அவர் வரும்போது ஏசி போட்டு விட்டிருந்ததால், அவர் போகும்போது கதவை சாத்திக் கொண்டு போனார்.

அவர் கதவை சாத்தின அடுத்த நிமிஷம், ப்ரத்யா ஆதியின் அணைப்பில் இருந்தாள். அவள் இதை எதிர்பார்க்கதாதால், அனிச்சை செயலாக விலக முற்பட்டாள். அவன் அணைப்பு இறுகவும், அவன் முகத்தை பார்த்தாள்.

பிரயுவின் பார்வையை சந்தித்த ஆதி

“ரதிம்மா, எப்படி இருக்க?”

“ஹ்ம்ம்..” என,

“ஏண்டி.. நானே ஒன்றரை வருஷம் கழித்து, உங்கள் எல்லோருடும் இருக்க ஆசைபட்டு வந்தால், இப்படி வீட்டில் ஒரு திருவிழா கூட்டத்தை கூட்டி வச்சுருக்கீங்க.. “ என்று செல்லமாக கோபப்பட்டான்.

ப்ரயு மனதில் முதல் நாள் நடந்த விவாதங்கள் மனதில் ஓடியது. முதல் நாள் மாலை தன் அம்மா வீட்டிற்கு வந்த வித்யா,

“அம்மா.. அண்ணா நைட் வந்துராங்களா ?”

“இல்ல.. வித்யா.. காலையில் தான் வருவான். flight அங்கே புறப்பட்டதே லேட் ..”

“அம்மா.. நாளைக்கு நம்ம கூட வர்ற சொந்தகரங்கள எல்லாம் இங்கேயே வர சொல்லிட்டோம். .காலை ஒரு ஒன்பதுலேர்ந்து பத்துக்குள்ள வந்துருவாங்க..”

“ஏன்.. வித்யா.. நாங்க எல்லோரும் உங்க வீட்டுக்கு வந்து அங்கேருந்து புறப்படுவதாக தானே ஏற்பாடு “

“அது.. இன்னிக்கு நாங்க இருக்கிற பிளாட்லே ஒரு துக்கம் ஆயிடுச்சு. .அவங்க எப்போ காரியம் எல்லாம் பண்ணுவாங்கன்னு தெரியாது.. அங்கிருந்து எல்லோரும் அவங்க எதிரில் புறப்படுறது அவ்ளோ நல்லா இருக்காது. அதான் இப்படி ஏற்பாடு பண்ணிட்டோம்.’

ஏன்மா.. எல்லோரையும் எதாவது பொது இடத்துக்கு வர சொல்லி அங்கேர்ந்து கிளம்பலாமே.. “

ஏன்மா இங்கேர்ந்து கிளம்புரதுலே என்ன பிரச்சினை.

இல்லமா. .ஆதி காலையில் தான் வரான்.. அவன் வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்.. நாங்களும் கிளம்பி வரணும்லே.. இங்கே எல்லோரும் வந்தா அவங்களுக்கு சாப்பாடு, குடிக்கன்னு அவங்களுக்கு ஏற்பாடு பண்ணிட்டு, அந்த வேலை எல்லாம் முடிச்சுட்டு கிளம்பினா.. லேட் ஆகாத... ?”

பிரயுவிற்கு ஆச்சர்யம்மாக இருந்தது.. தன் அத்தைக்கு கூட நம்ம கஷ்டம் எல்லாம் தெரியுது என்று.

இது பிரயுவிற்கான கரிசனம் என்று சொல்வதை விட, தன் மகன் இத்தனை நாள் கழித்து வரும்போது அவன் வசதி, அவன் மனைவியை இத்தனை நாள் கழித்து பார்க்கும் போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தார். மேலும் ஆதிக்கு தெரிவிக்கபட்டிருந்தது வித்யா குழந்தை விசேஷம் மட்டுமே.. ஆனால் அவர் மேலும் ஒரு பிளான் போட்டிருந்தார். அதை அவனிடம் சொல்லவில்லை. அதெல்லாம் சொல்லி அவனை கூட்டி வரவேண்டும். வீட்டில் இத்தனை பேர் வைத்துக் கொண்டு என்ன பேச முடியும் என்று எண்ணினார்.

ஆனால் வித்யாவோ “அம்மா , சாப்பாடு பத்தி கவலை வேண்டாம்.. நாம் போகும் வழியில் ஒரு இடத்தில இவர் பேசி வைத்து எல்லோருக்குமே அங்கே மதிய உணவிற்கு ஏற்பாடு செய்து விட்டார். காலை உணவு முடித்துவிட்டு தான் எல்லோரும் வருவார்கள். இது வெயில் காலம் தான் என்பதால் எல்லோருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி வைத்து விடலாம்.. சும்மா வேன் இங்கே வந்து நம் எல்லோரையும் பிக் up செய்ய மட்டும் தான் “ என்றாள்.

அவருக்கு அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. சரி என்று தலை ஆட்டி விட்டார்.

பிரயுவிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. இதை எல்லாம் எண்ணியவள், ஆதியிடம் முழுதும் சொல்லாமல், வித்யா வீட்டின் அருகில் நடந்த துக்கம், அதனால் ஏற்பட்ட இட மாற்றம் மட்டும் சொன்னாள்.

“ச்சே.. இது இப்பதான் இருக்கனுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.