(Reading time: 14 - 28 minutes)

 

2013 (புகழின் நினைவுகள் )

"தல கெத்து தல நீ "

"ஏன்டா குமாரு ?" தனது நண்பன் குமரனின் தோளில்  கைபோட்டு கொண்டே அந்த மாடிப்படிகளில் ஏறினான் புகழ் ..

"பின்ன ,நம்ம சரவணன் சாரோட க்ளாசையே  கட் அடிக்கிறியே ..அப்போ பெரிய ஆளுதானே நீ ?"

" அவர் என்ன சொல்லி கொடுக்க போறாரோ அதை நான் எப்பவோ படிச்சுட்டேன் ..அதான் கிளம்பி வந்துட்டேன் .. நீ ஏன்டா என் கூடவே வந்துட்ட ?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அவர் க்ளாசை கட் அடிக்க காரணம் தேவையா ?"என்று சிரித்தான் குமரன் ... ஆனால் ,புகழுக்கு தெரியும் தான் எங்கு சென்றாலும் குமரன் தன்னோடு நிழல் போல இருப்பான் என்று .. அந்த கல்லூரியில் இரண்டு வருடங்கள் முடித்து இப்போது மூன்றாம் வருடம் படித்து கொண்டிருந்தனர் இருவரும் ..இந்த மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் காதல் என்ற அத்தியாயத்தை இருவருமே புரட்டாமல் இருந்ததற்கு முக்கிய காரணமே அவர்களின் நட்புதான் ..

புகழ் இயல்பாகவே கலகலப்பான , சுறுசுறுப்பான மாணவன் .. அனைத்து ஆசிரியர்களுக்கும் அவன் பரிட்ச்சயமானவன் ..மாணவர்களுக்கு ஹீரோ !  அவனை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே  இடத்தில் பார்ப்பது கஷ்டம் ! அந்த கல்லூரியில் அவனுக்கு தெரியாத மறைவிடங்களே இல்லை !குறும்பிலும் படிப்பிலும் நம்பர் 1 ...

குமரன் அவனுக்கு நேரெதிர்..கூச்ச சுபாவம் , சுமாராய் படிப்பான் ..ஆனால்நல்ல விசுவாசி ..அதுவும் புகழின் நட்புக்காக உயிரையும் கொடுப்பான் .. அவனை "புகழின் நிழல் " என்றுத்தான் அனைவரும் கூறுவார்கள் ..

குமரனுடன் பேசிக்கொண்டே கல்லூரியின் மொட்டை மாடியில் அமர்ந்தான் புகழ் .. சில்லென்ற காற்று அவன் முகத்தில் மோதிட ,வழக்கம் போலவே அந்த சூழ்நிலையை  ரசித்து பாராட்டினான் ..

" செம்ம வியூ டா.. மொத்த காலேஜும் நம்ம கைல இருக்குற மாதிரி இருக்கு ல ?"

"தல ப்ரின்சிக்கு தெரிஞ்சா, அவ்வளவுதான் "

"டேய் மூணு வருஷமா இங்கதானே இருக்கோம் ? எவன் கண்டுபிடிச்சான் இந்த இடத்தை ?" என்று புகழ் கூறும்போதே

" அதானே " என்றபடி அங்கு வந்தாள் யாழினி..

ஐந்தடி உயரம் வட்ட முகம் ,எதையோ தேடி அலையும் இரு விழிகள் , நீல நிற ஜீன்ஸ் அணிந்து , அவள் ஒல்லியா அல்லது பருமனா என்று கண்டுபிடிக்க முடியாத அளவு தொளதொள வென்று ஒரு டீ  ஷர்ட் அணிந்து கூந்தலை குதிரை வால் போல கட்டி இருந்தாள் .. ஏதோ  ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல , ஸ்போர்ட் ஷூ , தோளில்  பெரிய ஸ்கூல் பெக் ...

" யாருடா இந்த பொண்ணு ? ஜங்கல்  ட்ராக்கிங் (jungle tracking) போறதுக்கு பதிலா காலேஜுக்கு வந்துட்டாளா ?" என்றான்  புகழ் ..குமரனோ

"நம்ம சீக்ரட் ஸ்பார்ட் இவளுக்கு எப்படி தெரியும் தல ? "என்றான் ..

" ஹாய்  நான் யாழினி "என்றபடி அவர்களுக்கு நடுவில் தனது பேக்கை வைத்துவிட்டு  அமர்ந்து கொண்டாள் ...

"ஹே யாரு நீ ?உனக்கு எப்படி எங்கள் இடம் தெரியும் ?"

" ஷ்ஷ்ஷ்ஷ் .. டென்ஷன் ஆகாத புகழ் "

" தல பேரு கூட தெரியுமா உனக்கு ?"

" உன் பேரு கூட தெரியும் குமரா "என்று சிரித்தாள் அவள் ...

" என் கேள்விக்கு இன்னும் பதில் வரலையே " கறாராய் கூறினான்  புகழ் ..

" நான் நம்ம க்ளாஸ் தான் ..புதுசா ஜாய்ன் பண்ணி இருக்கேன் ..சரி நம்ம க்ளாசை  பத்தி தெரிஞ்சுக்கலாம்ன்னு ரிசர்ச் பண்ணேன் .. நீ தான் எனக்கு ப்ரண்டா  செட் ஆகுவன்னு தோணிச்சு ..அதான் உங்க ரெண்டு பேர் பின்னாடியும்   நடந்து வந்தேன் " என்றவள் தனது பேக்கை திறந்தாள் ..

"இதென்ன இவ்வளவு பெரிய பேக் ?"என்று குமரன் விளக்கம் கேட்க

" எனக்கு அடிக்கடி பசிக்கும் குமரன் ..அதான் சாக்லேட் , கேக் ,பழம் ,முறுக்கு எல்லாம் வெச்சுருக்கேன் "என்றவள் இருவருக்கும் டைரி மில்க்   கொடுத்தாள் ...  அவளின் இயல்பான பேச்சில் ஈர்க்கப்பட்டான்  புகழ் .. ஆரம்பத்தில் கறாராய் இருந்தாலும் போக போக  இருவரும் ஒருவரை ஒருவர் வாரி கொள்ளும் அளவு பேசி கொண்டனர் ..

"ரெண்டு பேரும் உண்மையை சொல்லுங்க " யாழினி கொடுத்த அதிரசத்தை தின்றுகொண்டே பேசினான் குமரன் ..

"யாழினி நீ சொல்லு ..உனக்கு தலய ஏற்கனவே தெரியும்தானே ? நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிற விதத்துலேயே தெரியுது "என்றான் .. புகழை குறும்புடன் பார்த்த யாழினி "என்ன புகழ் சொல்லிடவா ?"என்றாள் .. அவள் ஏதோ  கதை சொல்லபோகிறாள்   என்று புகழுக்கு புரிந்தது ..சிரிப்பை அடக்கி கொண்டு

" ம்ம்ம் சொல்லு " என்றான் .. குமரன் தீவிரமான பாவனையில் கதை கேட்க யாழினியும் கதை சொல்ல ஆர்வமாகினாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.