(Reading time: 11 - 22 minutes)

ல்லை, கண்டிப்பாக சாப்பிடதான் வேண்டும்” என்று “ஸ்ரீனிவாசனை பார்த்து நான்கு ஸ்வீட்டும் மில்க்ஷேக்கும் அனுப்பு” என்றான் சுந்தரம்.

அவர் இதயம் வேகமாக லப்டப் என்று அடித்துகொண்டிருந்தது.

முதலில் தியாகராஜன் சார்தான் பேசினார், “நான் உன்னைபற்றி எல்லாம் சொல்லிவிட்டேன் சுந்தரம். அவர்களுக்கு பூரண திருப்தி இருந்தாலும் உன்னையும் உன் கம்பனியையும் பார்த்துவிட்டு போகலாமென்று வந்திருக்கிறார்கள்”.

“சார் எல்லாம் சொல்லிருப்பார் என்று நினைக்கிறேன். என்னைப்பற்றி முற்றிலும் அறிந்தவர் அவர். என் குல கோத்திரமே அறிந்தவர்” என்று பேச்சை கொஞ்சம் நிறுத்தினான்…...

பிறகு "உங்கள் பெண்ணை நேற்று அவள் அம்மாவுடன் கோவிலில் பார்த்தேன் எனக்கு அவள்தான் என் வாழ்க்கைத் துணைவி என்று மனதில் பட்டுவிட்டது. உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்துவைத்தால் அவளை கண்கலங்காமல் பார்த்துகொள்வேன்" என்றார்.

சிறுது நேரம் யாரும் ஒன்றும் பேசவில்லை. அப்பொழுது கதவை திறந்து கொண்டு ஸ்ரீநிவாசன் ஸ்வீட்டும் மில்க்க்ஷேக்கும் கொண்டு வந்து வைத்தார். ஸ்ரீநிவாசன் வெளியே போனவுடன்," எடுத்துகொள்ளுங்கள்" என்றான் சுந்தரம்.

“மாப்பிள்ளை என் பெண் அனுவை உங்களுக்கு கல்யாணம் செய்து கொடுக்க எங்களுக்கு மனபூர்வமான சம்மதம் என்று அனுவின் தந்தை சந்திரசேகர் கூறினார்.எனக்கு அனு ஒரே பெண், இவன் என்னுடைய பையன், பேர் வெங்கடேசன். அனுவிற்கு வயது பத்தொன்பது. சின்ன வயதுதான் ஆனால் உங்களை மாதிரி ஒரு வரன் கிடைப்பது கஷ்டம், அதனால் நாங்கள் முடிவு செய்துவிட்டோம்” என்றார். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ஆனால் உங்கள் பெண்ணிடம் பேசினீர்களா, அவர்களுக்கு சம்மதமா?” என்று கேட்டான் சுந்தரம்,

“அதற்கு அவசியமில்லை… நாங்கள் சொன்னால் கேட்டுக்கொள்வாள்” என்றார் சந்திரசேகர். 

“சரி நான் இன்று சாயந்தரம் உங்கள் பெண்ணை பார்க்க உங்கள் வீட்டிற்கு வருகிறேன்” என்றான் சுந்தரம்.

 “நீங்கள் ஏற்கனவே பெண்ணை பார்த்து ....” என்று இழுத்தார் சந்திரசேகர்

" நான்தான் உங்கள் பெண்ணை பார்த்தேனே தவிற, உங்கள் பெண்ணோ உங்கள் மனைவியோ இன்னும் என்னை பார்க்கவில்லையே அதுமட்டுமில்லை.. நான் உங்கள் பெண்ணிடம் பேச வேண்டும் அவள் விருப்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றான் சுந்தரம்.

சந்திரசேகருக்கும், வெங்கடேசனுக்கும் ரொம்ப பெருமையாக இருந்தது .

“சரி அப்போது நாங்கள் கிளம்புகிறோம், நீங்கள் எத்தனை மணிக்கு வருவீர்கள்?” என்று கேட்டார் சந்திரசேகர்.

 " ஒரு ஐந்து மணிக்கு சௌகர்யபடுமா?" என்று கேட்டான் சுந்தரம்.

“கண்டிப்பாக” என்றார் சந்திரசேகர்.

“சரி அப்போ சாயங்காலம் பார்க்கலாம்” என்று விடை பெற்று கிளம்பினார்கள்.

“எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டான் சுந்தரம்.

“ஆட்டோவில்தான்” என்றார் வெங்கடேசன்,

”ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்கள்” என்று சுந்தரம் சொன்னான்.

போனை எடுத்து ரிசெப்ஷனில் கூப்பிட்டு ஸ்ரீனிவாசனிடம்” டிரைவரை கூப்பிட்டு இவர்களை வீட்டில் கொண்டு விட சொல்” என்றான் 

அவர்கள் கிளம்பி சென்றவுடன் தியாகராஜன் ஐயாவை பார்த்து” சார் நீங்க இன்னும் சாப்பிடவில்லையே என்னுடன் சாப்பிடுங்க வாங்க” என்றான் சுந்தரம்.

“இல்லை சுந்தரம் என் மருமகள் எனக்காக சமைத்துக் காத்துக்கொண்டிருப்பாள் நான் போகணும்” என்றார் தியாகராஜன் சார்

“சரி அப்போ ஈவினிங் வறீங்களா? நான் உங்க வீட்டிற்கு வந்து கூட்டிகிறேன்” என்றான் சுந்தரம்.

“இல்லை சுந்தரம் நீ போய் பார்த்துவிட்டு வா,” என்றார் தியாகு சார்

“ஏன் சார்?” என்று கேட்டான் சுந்தரம்.

“எல்லாம்தான் பேசி முடித்தாகி விட்டது, அதனால் நீ போய் பார்த்து பேசிவிட்டு வா. கல்யாண தேதி முடிவானதும் சொல்லு நான் கண்டிப்பாக கல்யாணத்துக்கு வந்து நடத்தி கொடுக்கிறேன்” என்றார் தியாகு சார்.

“சரீ சார் ..” என்று விட்டு “உங்களுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும், ஆனால் உங்களை என் அப்பா ஸ்தானத்தில் வைத்திருப்பதால் சொல்ல முடியவில்லை” என்றான் சுந்தரம் “அதனால்... “என்று சொல்லியபடியே அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி வாங்கி கொண்டான் சுந்தரம்.

“என்னப்பா இது… நீ இவ்வளவு பெரிய ஆளாய் ஆகிவிட்டாய் இன்னும் காலில் விழுந்துக் கொண்டு இருக்கிறாய்” என்றார் தியாகு சார்.

"எவ்வளவு பெரிய ஆளானாலும் அப்பாவுக்கு என்றும் ஒரு மகன்தான் இல்லையா?" என்று சுந்தரம் சொன்னதும் தியாகராஜன் சார் கண்கள் பனித்துவிட்டன.

“எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, நீ இந்த மாதிரி ஒரு கர்வமே இல்லாமல் இருப்பது” என்றார்.

அவரையும் தானே தன் காரில் கொண்டு அவர் வீட்டில் விட்டு விட்டு அப்படியே கடைக்கு சென்றான்

தொடரும் 

Episode # 02

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.