(Reading time: 13 - 26 minutes)

வர் புது போன் வாங்கி மூன்று நாட்கள் தான் ஆகியிருந்தது.இதற்கு அர்த்தம் மூன்று நாட்களுக்கு முன் கூட செவ்வந்தி ஒரு போனை போட்டு உடைத்துவிட்டாள் என்று கூட சொல்லலாம்.

இதுவரை பல போன்கள் உடைக்கப்பட்டு,புதிதாய் வாங்கப்பட்டு,சில சரிசெய்யப்பட்டு..என்று மாதம் இதற்காக ஆகும் தொகையே அதிகமாக இருக்கும்.

இதில் மகளும் வருத்தப்பட்டதில்லை.அப்பாவும் வருத்தப்பட்டதில்லை.

சரண் தான் பொருமிக்கொள்வான்..”சொந்தமா மொபைல் ஷோரூம் வைச்சிருக்க கொழுப்பு.எவனாவது புது போன் வாங்க வந்தா,உடைச்ச போனை ரிப்பேர் பண்ணி,புது போன்னு சொல்லி கொடுக்கறது”என்று அடிக்கடி சொல்லிக் காமிப்பான்.

ஏதோ தீயும் வாசம் வருவதை உணர்ந்து பாண்டியன் மீண்டும் சமையல் செய்யும் வேலையில் இறங்க,”போதும்பா..நான் சாப்பிடறதுக்கு செய்தாலும் பரவாயில்லை..அங்க என் கூட படிக்கிற லூசுங்களுக்காக இவ்வளவு சிரமப்பட்டு ஏன் செய்யணும்..”என்று நண்பர்களை திட்டிக்கொண்டே அவர்களுக்காக செய்திருந்த காளான் பிரியாணியை எடுத்து ஒரு பெரிய ஹாட் பேக்கில் எடுத்து வைத்தாள்.

“போயிட்டு வரேன்பா..இன்னைக்கு நான் சீக்கிரமே வந்திடறேன்.பூ கொண்டு போக ஆள் வந்திடுவாங்க.அவங்க வர லேட்டான பரவாயில்லை.நான் வந்த பின்னாடி போயிக்கலாம்.நீங்க எங்கயும் கார் எடுத்துட்டு போயிடாதீங்க..டிரைவர் அண்ணாவும் இல்ல”என்று சொல்லியவளுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தார்.

அவர் முகத்தில் சோர்வு தென்படவும் பேகை எல்லாம் தூரப் போட்டுவிட்டு,”ரொம்ப நேரம் நிற்க வேண்டாம்னு எவ்வளவு முறை சொல்றேன்பா.நான் சமைச்சுக்க மாட்டேனா”என்றவள் பாண்டியனின் வலது காலில் இருந்த செயற்கை காலை கழட்டி வைத்துவிட்டு இடது காலை பிடித்துவிட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

“ரொம்ப கஷ்டமா இருக்காப்பா”கவலையுடன் கேட்ட மகளுக்கு இல்லையென்று தலையசைப்பில் பதில் சொன்னார்.

“நான் வேணும்னா லீவ் போட்டுடட்டுமா”

“சின்ன விஷயத்துக்கெல்லாம் மனச கஷ்டப்படுத்திக்காதே.என்ன நடந்தாலும் மனசை தைரியமா வைச்சுக்கணும்.அப்போ தான் ஆர்மி மேனோட பொண்ணு மாதிரி இருக்கும்..”என்றவருக்கு யாரும் அவரை எக்ஸ் ஆர்மிமேன் என்று சொன்னால் கோபம் வந்துவிடும்.

இன்றளவும் அவர் துடிப்புடன் செயல்படும் ஆர்மிமேன் தான்.

“ஒரு லட்சியத்தோட தான் ஆர்மில வேலைக்கு சேர்ந்தீங்களாப்பா”என்று வேண்டுமென்றே பேச்சை வளர்த்தினாள்.

இல்லையென்றால் காலேஜுக்கு நேரமாகிறது என்று விரட்டிவிடுவார்.அப்புறம் கால் வலிக்கு யார் மருந்தை தடவிவிடுவார்களாம்..!

மகளின் மனதை அறியாதவராய்,”பெத்தவங்களை அடுத்த வேலை சோத்துக்கு கஷ்டப்படாம வச்சு காப்பாத்தனும்ன்ற லட்சியத்த தவிர வேற எதுவும் இல்ல குட்டிமா.பெருசா வேலை எதுவும் கிடைக்கல.மிலிட்டரிக்கு ஆள் எடுக்கவும்,வேற வழியில்லாம தான் போய் சேர்ந்தேன்..”,

“எனக்கு இதுல எப்படி ஆர்வம் வந்ததுன்னு உனக்கு புரியும்படி சொல்றேன்.இப்போ பார்த்த உடனே காதல் வருது..அதில உள்ள கஷ்ட நஷ்டம் புரிய வரும்போது சிலருக்கு வெறுப்பு வருது.இது தான் காதல் வாழ்க்கை..”,

“அதே கல்யாணம் பண்ணி வாழ தொடங்கும் போது,அதில உள்ள கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் தெரிஞ்ச பின்னாடியும்,இரு மனங்களுக்குள்ள காதல் வருதே..அது போல தான் என்னோட வேலை மேல நான் வச்சிருக்கற விருப்பம்,லட்சியம் எல்லாம்.உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்ச பின்னாடியும்,நம்ம ஒரு உயிரால பல உயிர்கள் காக்கப்படுதுன்னு நினைக்கும் போது ஏற்படுற பெருமை,கர்வம் இருக்கே..வேற எந்த வேலைலயும் அது கிடைக்காது..”என்றவரின் பிற்பகுதி பேச்சை மட்டும் காதுக்குள் ஏற்றி முற்பகுதி பேச்சை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டாள் செவ்வந்தி..

காதல் திருமணத்தை விட,வீட்டில் வரன் பார்த்து முடிக்கும் திருமணமே சிறந்தது என்பதை தான் இப்படி சுற்றி வளைத்து சொல்லுகிறாராம்..!!

மகள் சிரித்த முகமாகவே கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவர் நிம்மதியுற்றவராக,”எனக்கு வரப் போற மாப்பிள்ளை கூட ஒரு ஆர்மிமேனா தான் இருக்கணும்னு ஆசைப்படறேன் குட்டிமா”என்றார்.

அதற்கும் முன்னிருக்கும் பற்களை எல்லாம் காட்டி சிரித்து வைத்தாள்.

மருந்தை தடவிவிட்டு கைகழுவி வந்தவள்,”நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் வைச்சுக்கங்க.எங்கேயும் போயிடக் கூடாது”என்று மிரட்டிவிட்டே செல்ல,

“நீ இத மறந்துட்டியே”என்று சின்ன டிபன் பாக்சை எடுத்து நீட்டினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.