(Reading time: 20 - 40 minutes)

வர்கள் போராட்டத்தை ஆரம்பித்ததும்,பிரின்சிபல் வருவதற்கு முன் அவந்திகாவின் பாதுகாப்புக்காக சரண் வந்திருந்தான்.

சரணின் பாதுகாப்பிற்காக யஸ்வந்த்தும் வந்திருந்தான்.

கல்லூரி தலைமை தான்,அவர்கள் வந்து பேசுவதற்கு முன்,அவர்களது உறவினர்களை பேச வைக்க நிர்வாகத்திற்கு உத்தரவிட,அதில் முதல் போன் கால் சென்றது அவந்திகா வீட்டுக்கு தான்.

அதனால் தான் சரண் வந்திருந்தான்.

அவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவந்திகாவின் பக்கத்தில் இருந்த பெண்களை சமாளிப்பாக பேசி,வேறு ஒரு இடத்தில் அமர வைத்தவன்,அவளின் பக்கத்தில் அமர,யஸ்வந்த்தையும் இழுத்து அமர வைத்தான்.

அங்கிருந்த மாணவன் ஒருவன்,”இது தான் பசங்க லைன் பாஸ்”என்று கிண்டலடிக்க,

“உன்ன அப்புறம் வந்து கவனிக்கறேன் மாப்ள”என்று உடனடியாக சமரசமாக பேசிவிட்டு,வீரமாக பேசுவது போல அவளருகில் அமர்ந்தவன்,”ஹாஸ்டல சோறு திங்கறவன் தான் போராடுறான்.உனக்கு என்னடி வந்துச்சு”என்று கேட்டுவிட,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

அவளிடமிருந்து பதில் வருவதற்கு முன்,”எங்க நட்பு புனிதமானது.நண்பனுக்கு ஒரு பிரச்சனைன்னா,அதுக்காக போராடுறதுக்கு நூறு பேர் சேர்ந்து வருவோம்”என்று ஒருவன் சொல்ல,அதையே திருப்பி அங்கிருந்தவர்கள் சொல்லவும் தலையில் அடித்துக்கொண்டவன் கும்பலோடு கும்பலாக அவனும் அமர்ந்துவிட்டான்.

“போராடுவோம்..போராடுவோம்”என்று எல்லாரும் கோஷமிட ஆரம்பிக்க,கல்லூரி நிர்வாகமும் சமரசம் பேச ஆரம்பித்தது.

சிறிது தாமதித்தாலும் மீடியாவுக்கு விஷயம் போனால்,அவர்களது கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமே!

“சாப்பாடு கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தானே”என்று அட்மினிஸ்ட்ரேஷன் நிர்வாகி சொல்ல,அங்கிருந்த மாணவர்கள் குழு தலைவன் பேச ஆரம்பித்தான்.

“நாங்க ஹாஸ்டல்ல கொடுக்கற பணத்தை மெஸ்ல கொடுத்தா,நல்ல ஆரோக்கியமான உணவாகவும்,ருசியான உணவாகவும் கிடைக்கும்.நாங்க எங்க நாக்கை கண்ட்ரோல் பண்ணனும்னு நீங்க சொன்னீங்கன்னா,முதல்ல பீசை நீங்க கண்ட்ரோல் பண்ணுங்க.தப்பு எங்க மேல இல்ல”என்று தெளிவாக சொல்லிவிட்டு அமர,அவர்களுக்கும் உண்மை தெரியும் என்பதால் யோசனை செய்தார்கள்.

அதற்குள் முந்திக்கொண்ட யஸ்வந்த்,”இந்த சின்ன பிரச்சனைக்காக இப்படி போராட்டம் நடத்தறது சின்னப்பிள்ளைத்தனமா இல்ல”என்று கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக பேச ஆரம்பிக்க,மாணவ தலைவனை அமைதியாக இருக்க சொன்ன அவந்திகா,

“நாங்க பண்றது சின்னப்பிள்ளைத்தனம்னா,நீங்க பேசறது வில்லத்தனமா இருக்கு.இங்க ஹாஸ்டல்ல இருக்க எத்தனை பேர் காலை உணவை சாப்பிடமா வர்றாங்கன்னு தெரியுமா..இதனால அலசர் வர வாய்ப்பு இருக்கு.அல்சர்னால சிலருக்கு வயிறு வலிக்கும்.சிலருக்கு காலப்போக்குல பசி இருக்கற உணர்வே வராது.அப்படி இருந்தா சுகர் வரும்.சுகர் வந்தா கை நடுங்கும்.அப்போ பார்த்து ஏதாவது எடை அதிகமான பொருளை கைல வச்சிருந்து,அது கால்ல விழுந்தா புண் ஆகும்.சுகர் பேஷன்ட்க்கு புண் வந்தா ஆறாது.காலப் போக்குல புண் அழுகற நிலைமைக்கு வந்து,படுத்த படுக்கையா ஆகிடனும்.அப்போ நீங்க வந்து பார்த்துப்பீங்களா..பணிவிடை செய்வீங்களா..ம்ம்..”என்று வரிசையாக எடுத்துவிட,வழக்கம் போல..

‘என்ன இப்படி பேசறா’என்று முழிக்கவே செய்தான்.

அந்த முழிப்பை அவள் ரசிக்கவே செய்தாள்.அவள் பேசும் போது,பதிலுக்கு ஆண் என்ற ஆணவத்தில் நிச்சயம் ஆண் வர்க்கம் குரல் கொடுக்கும்.இப்போது கூட நிர்வாக தலைமயில் இருந்த ஒரு ஊழியர் ஏதோ கத்திக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் யஸ்வந்த் அப்படி இல்லையே! பேச்சில் உண்மை இருந்தால் அமைதியாகிவிடுகிறான் என்று அவனை பற்றியே சிந்தித்தவள்,கல்லூரி நிர்வாகம்,”நல்ல முடிவா எடுக்கறோம்”என்று இறங்கி வரவும் தான் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினாள்.

மாணவத்தலைவன் விடாப்பிடியாக,”எங்களால யாரையும் நம்ப முடியாது சார்.நாலு வருஷம் நாங்க படிக்க தான் வந்திருக்கோம்.எங்க உடம்பை நாங்களே அழிச்சிக்க வரலை.இப்போவே இந்த காண்ட்ராட்க்டரை மாத்துங்க.உடனே முடியாது..இவங்களே நல்லா செய்வாங்கன்னா உறுதி நீங்க கொடுத்தா,அதுக்கு சாட்சியா எழுதி கொடுங்க.இதுவரைக்கும் எங்க பிரச்சனையை நாங்க கல்லூரி நிர்வாகத்துக்கிட்ட தான் கொண்டு வந்திருக்கோம்.நீங்க எங்க கோரிக்கைக்கு எதிரா செயல்ப்பட்டா,நாங்க மீடியாவுக்கு போவோம்”என்று உறுதியாக சொல்லவும்,பலர் கை தட்டினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.