(Reading time: 21 - 41 minutes)

பேருலயே மது வெச்சு இருக்கோம்ல? அதான் “ என்று கோலரை தூக்கி விட்டு கொண்டான் மதியழகன்.

“ ஹும்கும்..எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்ல மது”

“நிஜமாவா?”

“ஆமா”

“அப்போ ப்ரூவ் பண்ணு?” என்று அவன் குறும்புடன் கண்ணடிக்க,ஒன்றுமே தெரியாதது போல நடித்தாள் நிலா.

“எப்படி ப்ரூவ் பண்ணுறது ?எனக்கு தெரியலையே மது” என்றபடி அவனை நெருங்கி நின்றாள்.

“ ஹேய் என்னடீ யாரும்மே இல்லதப்போ பக்கத்துல வர? இதெல்லாம் தப்பும்மா”

“ஹா.. இந்த மாதிரி சிட்டிவெஷன்ல பக்கம் வரலன்னா தான்பா தப்பு” என்று கண்ணடித்தபடி இன்னும் நெருங்கி சென்றாள் அவள்.

“ வேணாம்டீ .. நான் பாவம் சின்ன பையன்”

“ ஹா ஹா”

“ கிட்ட வந்த, கத்திடுவேன்” என்று மதி வில்லனின் கையில் மாட்டியது போல நடிக்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“அப்படியா? காலையில் என்னமோ கேட்டியே நீ”

“ நா..நா… நான் என்ன கேட்டேன்?”

“ அப்படியா இரு நான் ஞாபகப்படுத்துறேன்” என்றவள், அவன் இமைக்கும் நொடியில் இதழோடு இதழ் பதித்தாள். அவள் தொடங்கிய கவிதையை அவன் தொடர சிலநொடிகளுக்கு பின் அவனை தள்ளிவிட்டு சிரித்தாள் நிலா.

“ கொஞ்சம் அமைதியாய் இருந்ததும், எல்லாருகூட சேர்ந்து நீயும் என்னை கலாய்ச்சியே அதுக்குத்தான் இந்த ஷாக் ட்ரீட்மண்ட். இப்போ வா இன்னொரு ஆளுக்கு ஷாக் தரணும்” என்றாள் நிலா. மதியழகன் அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்துக் கொண்டே பின் தொடர, மனோவின்  எதிரில் அமர்ந்தனர் இருவரும்.

மனோவும் பாக்யமும் புன்னகை நிறைந்த முகத்துடன் தங்களது மகளையும் மருமகனையும் ரசிக்க,நிலா அவர்கள் இருவரையும் முறைத்தாள். தன் மகளின் பார்வையில் இருந்த வித்தியாசத்தை முதலில் கண்டுக்கொண்டார் மனோ.

“ என்ன பேபி ?என்னாச்சு?”

“ ஏன் மனோ நாந்தானே உனக்கு எப்பவும் பேபி ?”என கொஞ்சும் குரலில் சந்தேகமாய் கேட்டாள்நிலா..

“ எனக்குத் தெரிஞ்சு எங்களுக்கு ஒரே பொண்ணு அது நீதாண்டா..” என்று சிரித்த மனோ நிலா முறைக்கவும் “ சரி சரி நோ கோபம்..நீதான் என் செல்ல பேபி…என் நிலாக்குட்டி” என்று கொஞ்சினார்.

“ எனக்கு தெரியாமல் ரகசியம் ஏதும் வெச்சு இருக்கியா?” .மகளின் கேள்வியை கேட்டு புருவம் உயர்த்தினார் மனோ. “ஏன் டீ எனக்கு சின்ன வீடு இருக்குன்னு ஏதும் சொல்லி வெச்சியா? இவ ஏன் இவ்வளோ கேள்வி கேட்குறா?”

“ எனக்கு கெட்ட கோபம் வரும்..நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு,… என்னை இதில் இழுக்காதிங்க” என்றார் பாக்யம் கறாராய். நிலாவின் தோளை லேசாய் அழுத்தி “என்ன?” என்று பார்வையால்வினவினான் மதியழகன். அவனுக்குத் தெரியும் அவள் இப்படி சுற்றி வளைத்து பேசுபவள் இல்லை. எதற்கு இத்தனை கேள்வி கேட்கிறாள் ? என்று குழம்பித்தான் போனான் அவனும்.அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து பெருமூச்சு விட்டாள் நிலா.

“ அப்பா மதியம் நீங்களும்  ஷக்தியும் பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன். சோ ஷக்தி இவ்வளவு பிடிவாதமாய் எங்களோட கல்யாணத்தை பத்தி பேசினதுக்கு நீங்கதான் காரணமா? ஏன் பா என்கிட்ட நீங்க நேரடியா சொல்லாமல் ஷக்தி கிட்ட சொன்னீங்க?”

“ நிலா, நான் உன் கல்யாணத்தை பத்தி உங்கிட்டயே பேசினேன். நீதான் இப்போதைக்கு இதபத்தி பேச வேணாம்ன்னு சொன்ன”

“உண்மைதான் பா.. ஆனா நீங்களும் சரின்னு விட்டுட்டிங்களே ..! நீங்க மறுபடியும் இதபத்தி பேசி இருக்கலாமே பா”

“விடு குட்டிமா.. யார் சொன்னால் என்ன ? நல்ல விஷயம் நடந்துருக்கு அது போதும்ல?”

“அப்படி இல்லமது..எனக்கு புடிச்சவங்ககிட்ட  நான் எதையும் மறைக்க மாட்டேன்..சரியோ தப்போ அதை மனம் விட்டு சொல்லிருவேன். அதே நேர்மையை அவங்களிடமும் எதிர்பார்ப்பேன். இது அப்பாவுக்குத் தெரியும்..எனக்கும் அவருக்கும் ஒளிவு மறைவுன்னு எதுவுமில்ல. அப்படி இருக்கும்போது இப்போ மட்டும் ஏன்?” என்றாள் நிலா.

“ அப்படி இல்ல நிலாகுட்டி. உன் ஆசைக்கு நான் மரியாதை தரனும்ன்னு நினைச்சுத்தான் அன்னைக்கு நான் எதுவும் சொல்லல..ஆனா எனக்கும் வயசாகுதுல.. நான் நல்லா இருக்கும்போதே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு ஆசைப்பட்டேன்..அது தப்பா ?”என்றார் அவர் தழு தழுத்த குரலில்.அவர் பேச்சில் நிலா வெகுண்டு போக மதியழகன் தான் நிலைமையை சீராக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.