(Reading time: 29 - 57 minutes)

"ப்பா அண்ணன் அண்ணியை ரொம்ப மிஸ் பண்ணுதுப்பா... நீங்க அண்ணனைப் பார்த்தா அண்ணிக்கு கோபம் வருமோ என்பது போல பேசினீங்க... அதான் அண்ணன் வர தயங்கியிருக்கும்... நாம இப்போ அண்ணன் மேல அண்ணிக்கு கோபமில்லன்னு சொன்னா கண்டிப்பா அண்ணன் வந்து அண்ணியை பார்ப்பாங்கப்பா..." என்றாள் பிரணதி... அதற்கு ஆமாம் என்பது போல தலையாட்டினாள் மதி.

"அப்படி நடந்தா சந்தோஷம் தான்..." என்றார் செந்தில் பின்... "இங்கப் பாரு யுக்தா நீ நிச்சயத்துக்கு வரக் கூடாதுன்னு நான் நினைக்கலம்மா... நீ எங்க வீட்டு மருமக... நீ எங்கக் கூட இருந்தா தான் நிறைவா இருக்கும்... ஆனா அதை நீ சந்தோஷமா செய்யனும்...

பிருத்வி மேல உனக்கு கோபம் இல்லாம இருக்கலாம்... ஆனா அவன் பேசினது உன்னோட மனசை கஷ்டப்படுத்துச்சு இல்லையா...?? அவனை நீ திரும்பவும் பார்த்தா உனக்கு அது ஞாபகத்துக்கு வரலாம்... அதனால தான்ம்மா நீ வர வேண்டாம்னு சொன்னேன்... "

"எனக்கு புரியுது மாமா"

"இப்போக் கூட சொல்றேன்... நீ வரனும்னு நாங்க ஆசைப்பட்டதால நீ அந்த பங்ஷன்க்கு வரனும்னு இல்லை... உன் மனசுக்கு எப்படி தோனுதோ செய்... என்றார் செந்தில்... மதியும் அதுதான் சரி என்பது போல் அமைதியாக இருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

பின் சாவித்திரியிடம் திரும்பிய செந்தில்... "சாவித்திரி உங்களுக்கெல்லாம் கூட எங்க மேல கோபம் இருக்கும்... இருந்தாலும் நீங்களும் கவியும் கண்டிப்பா நிச்சயத்துக்கு வரனும்..." என்றார்.

"அய்யோ என்னங்க நீங்க.... உங்க ரெண்டுப்பேரையும் இப்பவா எங்களுக்கு தெரியும்.... சின்னஞ்சிறுசுங்களுக்குள்ள என்ன வேணாலும் இருக்கலாம்... ஆனா உங்களுக்கு மருமகளா இவ போனதுல எங்களுக்கெல்லாம் சந்தோஷம்ங்க... அதுவும் சுஜாதாக்கு மட்டுமில்ல... பிறந்த வீட்டு சொந்தம் இல்லாத நானும் சுஜாதாப் போல தான் உங்களை நினைக்கிறேன்..." என்று சாவித்திரி சொன்னதும்...

"கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சாவித்திரி... அப்புறம் நான் முறைப்படி மாதவனும் சுஜாதாவும் வந்ததும் தான் அவங்களையும் சேர்த்து நிச்சயத்துக்கு அழைக்கனும்.... ஆனா அவங்க நிச்சயதார்த்தம் அன்னைக்கு காலையில தான் வருவாங்க... அப்போ எங்களுக்கு வேலை இருக்கும்.... அதனால அவங்களுக்கு போன் பண்ணேன்... " இதுல என்ன பார்மாலிட்டி அண்ணா... நான் கண்டிப்பா வரேன்னு சுஜாதா சொன்னா... மாதவனுக்கும் ஏதோ கோபம் இருந்தாலும் என்னால வர முடியாது ஆனா அண்ணியையும் சுஜாதாவையும் அனுப்பறேன்னு சொன்னார். அம்மா கவி நீயும் வரனும்.." என்ற செந்தில் பின் தேவாவைப் பார்த்து...

"தேவா நீயும் நிச்சயதார்த்தத்துக்கு வரனும்... உங்க வீட்ல இருக்கவங்களையும் முறைப்படி அழைச்சிருக்கனும்.... ஆனா சிம்பிளா செய்யறதால கல்யாணத்துக்கு அழைக்கிறேன்ப்பா... இப்போ நீ நிச்சயத்துக்கு வாப்பா..." என்றார்.

"என்ன அங்கிள் பார்மாலிட்டிஸ் எல்லாம் எதுக்கு... நான் கண்டிப்பா எங்கேஜ்மென்ட்க்கு வரேன்..." என்றான் தேவா... பின் மூவரும் கிளம்பினர்.

அவர்கள் கிளம்பி சென்றதும் கவி தேவாவிடம்... " தேவா இவ எங்கேஜ்மென்ட்க்கு போக வேண்டாம்னு தான் நினைக்கிறேன்... செந்தில் மாமா சொன்னது போல அந்த பிருத்விய பார்த்தா இவளுக்கு எல்லாம் ஞாபகம் வரும் அதனால வேண்டாம்னு சொல்லு..." என்றாள்.

யுக்தாவிற்கும் அது தான் குழப்பமாக இருந்தது... நிச்சயதார்த்ததிற்கு செல்லலாமா இல்லை வேண்டாமா என்று தெரியவில்லை... நீ சொல்லாம கொல்லாம போனதில் பிருத்வி வருத்தப்படுவான் என்று தேவா சொல்லலாம்... நீ இல்லாததால பிருத்வி ரொம்ப வருத்தப்பட்டான்மா என்று மதி அத்தை சொல்லலாம்... பிருத்வி பேசியதை நினைச்சு என்னோட மனசு கஷ்டப்படும் என்று மாமாவும் கவியும் சொல்லலாம்...

ஆனால் அதெல்லாம் இப்போது பெரிய விஷயமில்லை... ஆனால் இவள் அந்த வீட்டின் மருமகளாக பிருத்வியின் மனைவியாக அந்த நிச்சயத்தில் கலந்துக் கொண்டால் பிருத்வி என்ன நினைப்பான்... அவ்வளவு சொல்லியும் திரும்பவும் அவன் வாழ்க்கையில் தான் தொல்லை செய்வதாக நினைப்பானா...?? இல்லை திரும்பவும் அத்தை மாமாக்காக அமைதியாக இருப்பானா...?? இல்லை எல்லாம் மறந்து சேர்ந்து திரும்ப வாழலாம் என்று முடிவெடுப்பானா...?? இதெல்லாம் தெரியாமல் அந்த நிச்சயதார்த்ததில் இவளால் சகஜமாக கலந்துக் கொள்ள முடியுமா..?? பிரணதி சொன்னது போல் அதற்குள் பிருத்வி தன்னை வந்துப் பார்ப்பானா..?? என்று இவள் சிந்தித்துக் கொண்டிருக்க...

அதுவரையில் தேவாவும் கவியும் என்ன பேசினார்களோ ஆனால் தேவா கடைசியாக... " அங்கிள் ஆன்ட்டிக்காகவாவது யுக்தா எங்கேஜ்மென்ட்க்கு போகனும் இல்ல சங்கு... என்ன தான் தன் மகன் பக்கம் நியாயமில்லைன்னு தெரிஞ்சாலும் எத்தனை பேர் மருமகளுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.... அந்த விஷயத்துல அவங்க கிரேட்... அவங்ககிட்ட எல்லாரும் உங்க மருமக எங்கன்னு கேட்டு அவங்கள சங்கடப்படுத்தனுமா..." என்று கேட்பது காதில் விழ.... தேவா சொல்வதும் நியாயம் தானே என்று மனம் நினைத்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.