(Reading time: 9 - 18 minutes)

து மீண்டும் அவனை தாக்க வர,அவனது கரத்தில் தட்டுப்பட்ட முழங்கை நீள கூர்மையான உளியை எடுத்தான்.அது சரியாக அந்த சிங்கத்தின் நெஞ்சில் குத்தியது.

காடே அதிரும் அளவு ஒரு கர்ஜனை!!!

அது சுருண்டு விழுந்தது!!சில நொடிகள் ஸ்தம்பித்தவன்,அதனருகே செல்ல சட்டென மீண்டும் அவன் மேல் பாய்ந்து அவனது வலது காலிலும்,இடக்கரத்திலும் நகத்தால் அழுந்த கீறியது.உயிர் போகும் வலியிலும் ஒரு அலறலும் அவனிடமிருந்து வெளிப்படவில்லை.அதே உளியால் அந்த சிம்மத்தின் கழுத்தில் குத்தினான்.அதன் மூச்சு நின்றுப் போனது!!

"ஆ...!"-என்ற பெரும் அலறல் ஆதித்யாவிடமிருந்து வெளியானது!!

சில நொடிகளில் தனது சட்டையை கிழித்து குருதி பெருக்கும் காலில் கட்டினான்.எழுந்தவனால் ஒரு அடியும் வைக்க இயலவில்லை.சிலையென அவன் நிற்க,அந்தப் புத்தகத்தை சுற்றி போடப்பட்டிருந்த இரும்பு கட்டானது உடைந்து கீழே விழுந்தது.அவனது கவனத்தை அது ஈர்க்க மெல்ல ஒவ்வொரு அடியாய் அதை நெருங்கி கையில் எடுத்தான்.

அவன் அதை எடுக்கவும் அந்த ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து அவன் வெளி செல்ல வழி தயாரித்து தந்தது!!

அதன் வழியாக பொறுமையாக வெளி வந்தவன்,ஊரின் எல்லைக்கு வந்து சேர்ந்தான்.அவன் அங்கே மயங்கி விழ,அச்சமயம் அங்கு எதற்காகவோ காரை எடுத்து வந்துக் கொண்டிருந்த அவனது ஓட்டுநர் கண்ணில் சிக்கினான் ஆதித்யா.அவரின் உதவியோடு மயக்க நிலையில் இல்லம் கொணரப்பட்டான் அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

"ந்தாங்க மாத்திரை!"-யாத்ரா அளித்த ஔஷதத்தை வாங்கி போட்டுக் கொண்டான் ஆதித்யா.

அவளது முகத்தில் கவலை தீர்ந்தப் பாடில்லை!!

"அம்மா சாப்பிட்டாங்களா?"

"இப்போ தான் சாப்பிட்டு தூங்கினாங்க!பாவம்...ரொம்ப பயந்துட்டாங்க!"-அவன் புன்னகைத்தான்.

"என்ன சிரிப்பு?"

"இல்லை...விவரம் தெரிந்த நாளில் இருந்து ஒரு பயம் இருந்தது!இப்போ அது தேவையில்லாத பயம் தான்னு தோணுது!"

"என்ன பயம்?"

"எங்கே எல்லார் வீட்டிலும் நடக்கிற மாதிரி என் வீட்டிலும் என் கல்யாணத்துக்கு அப்பறம் மாமியார்-மருமகள் சண்டை வருமோன்னு பயந்தேன்!"

"ஏங்க நீங்க சீரியஸாவே இருக்க மாட்றீங்க?"

"இதைவிட சீரியஸ்னா,ஐ.சி.யுல தான் என்னை அட்மிட் பண்ணனும்!"-யாத்ரா அவனது வாயை பொத்தினாள்.

"அப்படி எல்லாம் பேசாதீங்க!இதுக்கு மேலே உங்களுக்கு எதாவது நடந்தா,அதை பார்த்துட்டு என்னால இருக்க முடியாது!"-அவளது கண்கள் கலங்கின.நல்லவேளையாய் அவனுக்கு ஏற்பட்ட உண்மையை அவன் உரைக்கவில்லை.மாறாக,வெறும் விபத்து என்றே கூறி இருந்தான்.அவன் சந்தித்தவற்றை உரைத்திருந்தால் அவள் நிச்சயம் நொறுங்கி போயிருப்பாள்.

"ஏ...லூசு!எனக்கு ஒண்ணுமில்லைம்மா!எதுக்கு அழுற?"-அவளது கன்னத்தை வருடியப்படி கேட்டான்.

"எனக்கு பயமா இருக்குங்க!ரொம்ப பயமா இருக்கு!"

"ஏ...எனக்கு ஒண்ணும் ஆகாது!அழாதே...!!!இன்னும் 2 நாளில் நடக்க ஆரம்பித்துவிடுவேன் பார்!"-அவள் சமாதானம் ஆவதாக தோன்றவில்லை.

"சரி...இப்போ நான் உன்னோட கஷ்டத்தை தீர்க்க போறேன்!"-அவள் கேள்வியாய் அவனை பார்த்தாள்.

"எனக்கு கஷ்டம் வந்தா நான் என்ன செய்வேன் ஞாபகமிருக்கா?"-அவள் சில நொடிகள் புரியாமல் விழித்தாள்.

"மறந்துட்டியா?"-பின்,ஏதோ நினைவு வந்தவள்,அவனது அணைப்பினுள் சேர்ந்தாள்.அவன் கவலையில் இருக்கும் சமயத்தில் அன்புக்குரிய ஒருவரின் அணைப்பினை நாடுவான்!

அவளது இறுக்கமாக சிறைப்படுத்தியவனின் பார்வையில் அச்சமயம் தெரிந்த அது....நிச்சயம் காதல் இல்லை!ஒருவித குரோதமாகவே இருந்தது!!

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.