(Reading time: 15 - 30 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 03 - வத்ஸலா

Varthai thavarivitten Kannamma

ந்த அழைப்பிதழை படித்து முடித்த அபர்ணாவினிடத்தில் முழுதாக ஒரு நிமிடம் அசைவில்லைதான். பழைய நினைவுகளுக்குள் பயணித்து திரும்பி இருக்க வேண்டுமவள்!!!

எதிரில் நிற்பவர்களின் உடல்மொழிகள் மனமொழிகள் என எல்லாவற்றையும் சேர்த்து படிக்க தெரிந்தவனே நல்ல மருத்துவன் அல்லவா??? இரண்டு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டியபடியே அவள் எண்ண ஓட்டங்களை படித்துக்கொண்டிருந்தான் நம் டாக்டர்!!!!

பரத்தின் நண்பன் சொன்னது எல்லாம் உண்மைதான் என அவள் முக பாவங்களை பார்க்கும் போது புரிந்தது விஷ்வாவுக்கு.

தனது தோழிகள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறாள் அவள், அவன் சினிமாவில் பாட துவங்கி இருக்கிறான் என!!! அவனது பாடல்களை கேட்டிருக்கிறாளா??? கேட்டிருக்க கூடும்!!! அவளுக்கே தெரியவில்லை. அது அவன் குரல்தான் என தெரிந்துக்கொள்ளும் அளவுக்கு அவள் அவற்றில்  கவனம் செலுத்தியதில்லைதான்.

பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவன் புகைப்படத்தையே பார்க்கிறாள் அபர்ணா. என்ன ஒரு ஏழு எட்டு வருடங்கள் இருக்குமா???  

விஷ்வாவின் மெலிதான தொண்டை செறுமல் அவளை தரை இறக்கியது.

'ஸோ...' என்றான் அவன்.

'ம்???' அவள் சட்டென நிமிர..

'கிளம்பலாமா???'

'நா... நான்... எதுக்கு விஷ்வா???' அவள் குரலில் பரவியிருந்த தடுமாற்றத்தை அவன் உணராமலில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

அவள் கண்களை நேராக பார்த்து 'நியாயம்ன்னு ஒண்ணு இருக்கு...' என்றான் நிதனாமாக.

அதே நேரத்தில் வானத்திலிருந்து கேட்டது இடி சத்தம்!!!! கொஞ்சம் திடுக்கிட்டுதான் நிமிர்ந்தாள் அவள். அவன் சொல்வதை அந்த இடி சத்தம் அமோதிப்பது போலே தோன்றியது.

'நியாயம்ன்னு ஒண்ணு இருக்கு...' மெல்ல நிமிர்ந்து வானத்தை பார்த்துக்கொண்டாள் அவள். இடியும், மழையும் அவளது வாழ்வின் சில நிகழ்வுகளுக்கு எப்போதும் சாட்சியாகவே இருந்திருக்கின்றன.

திடீரென ஏதோ தோன்ற திடுக்கென விஷ்வாவின் முகம் பார்த்து கேட்டாள் அபர்ணா.

'இவரை உனக்கு எப்படி தெரியும் விஷ்வா??? எத்தனை வருஷமா தெரியும்???

'எத்தனை வருஷமாவா???' சின்ன சிரிப்பு அவனிடத்தில் 'ரொ....ம்.....ப...  ரொம்ப...  வருஷமா...'

'உனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டா  விஷ்வா???'

'ஃப்ரெண்ட்??? ம்ஹூம்......... அப்படியும் சொல்ல முடியாது. அதுக்கும் மேலே!!!'

'அப்போ உனக்கு சொந்தமா??? எனக்கு தெரியாம எப்படி???'

'ம்??? சொந்தமா??? அதுதான் இல்லையே!!! ஏதாவது ஒரு வகையிலே அவன் எனக்கு சொந்தக்காரனா, ரத்த பந்தமா இருந்திருக்க கூடாதான்னுதான்  தினமும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன் அப்பூ' விஷ்வாவின் குரலில் நிறையவே ஆதங்கம். அவனுக்கு பரத்தின் மீது இருக்கும் பாசம் நன்றாகவே புரிந்தது அவளுக்கு.

'அவருக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாது. தெரியும் எனக்கு...' என்றாள்....  'என்ன விஷ்வா இப்படி குழப்பறே???' யோசனையுடன் சொன்னவளின் மனதிற்குள் சட்டென ஏதோ ஒரு மின்னல் வெட்ட......

'வி...ஷ்...வா... ' என்றாள் கொஞ்சம் திகைப்பு கலந்த குரலில். 'எனக்கு இப்போதான் புரியுது...'

அவளுக்கு என்ன புரிந்திருக்கும் என அறிந்தவனாக அமோதிப்பாக தலை அசைத்தான்.

'அவருக்காகதான் நீ இத்தனை நாளா.....???'

'எஸ்...'

சட்டென பேச்சிழந்து போனாள் அபர்ணா.

'சுருக்கமா சொல்லணும்னா அவன் வாழ்கையிலே பல விஷயங்களை இழந்ததுக்கு நானும் ஒரு வகையிலே காரணம்.....' சற்றே தழைந்த குரலில் சொன்னான் விஷ்வா..

பலநூறு எண்ண ஓட்டங்கள் அவளுக்குள்ளே, அதனோடு சேர்ந்து.... அவளுடன் பரத் பேசிய பழகிய அந்த ஒரு சில நாட்களின் நினைவுகள்.....

கிட்ட தட்ட எட்டு வருடங்களுக்கு முன் அவனை அவள் கடைசியாக பார்த்தபோது அவன் சொன்ன வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன. அப்போதும் மழையும், இடியும் அவர்களுடன் இருந்தன.

'ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்..... ப்..........ளீ..........ஸ்ஸ்ஸ்..... தயவு செய்து அழாதே... என்னாலே உன் கண்ணிலே தண்ணியை பார்க்க முடியாது.... ப்ளீஸ்...' அவள் விரல்கள் கண்ணீரை துடைத்துக்கொண்டன. ஒரு நிம்மதியான சுவாசம் அவனிடம்.

'இப்போ இல்லை..... வாழ்கையிலே எப்பவுமே நான் உனக்கு என்ன செய்யறேனோ இல்லையோ.... உன் கண்ணிலே தண்ணி மட்டும் வர விட மாட்டேன் கண்ணம்மா..'

'ப்ச்....' என்றாள் அந்த கண்ணம்மா என்ற வார்த்தை பிடிக்காமல். அந்த வார்த்தை என்ன??? அவனையே பிடித்ததில்லை அப்போதெல்லாம்!!!

'சரி.... 'கண்ணம்மா...' சொல்லலை.... இப்போ சொல்லு..... சில வருஷம் கழிச்சு  ஒரு நாள் நான் சொன்ன மாதிரி ஒரு சூழ்நிலை உனக்கு வந்திட்டா நீ என்ன செய்வே???' கேட்டான் பரத்.

........................................

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.