(Reading time: 9 - 18 minutes)

காலையிலேயே புன்னகை முகமாக ஆஃபீசிற்குள் நுழைந்தவளை வியப்போடு பார்த்தாள் ஜனனி…

“ஜானு… ஃபேஷியல் எதுவும் பண்ணியா என்ன?..”

“இல்லையே ஜன்னி…. ஏன் கேட்குற?...” என்ற ஜானவியை பட்டென்று அடித்தாள் ஜனனி…

“ஸ்… ஆ… வலிக்குது பிசாசே…” என தடவி விட்டுக்கொண்டவள், சற்று நேரத்திலேயே சிரித்துக்கொண்டே

“எதுக்குடி அடிச்ச?...” என கேட்க,

அவளை விநோதமாக பார்த்த ஜனனி,

“ஜா…………………….னு……………………” என இழுத்துக்கொண்டே அவளின் அருகில் வந்தவள், அவள் முகத்தையே உற்றுப்பார்க்க,

அதில் அளவுக்கு அதிகமாக சந்தோஷமும், வெட்கமும் தாண்டவமாடியது…

“ஹேய்… என்னடி… வெட்கம் எல்லாம் வருது உன் முகத்துல?...”

“அ…து… ஹ்ம்ம்.. ஒன்னுமில்லையே…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

“ஹேய்… நீ சமாளிக்குற விதத்துலேயே தெரியுது?... என்ன காலையிலேயே என் தம்பி பேசிட்டானா?...”

“ஆமா…” என சட்டென்று சொன்னவள், 

“அது… அது… உனக்கெப்படி தெரியும்…” என ஆச்சரியத்துடன் கேட்க,

“ஆமாடி… இத தெரிஞ்சுக்க நான் பி.ஹெச்டி பண்ணியிருக்கணும் பாரு…” என்றாள் ஜனனி கிண்டலாக…

“ஹ்ம்ம்…”

“ஹ்ம்ம்… எல்லாம் இருக்கட்டும்… என்ன ஆச்சு?.. ரொம்ப பிரகாசமா தெரியுற?...”

“அது…” என ஆரம்பித்த ஜானு, அந்த உரையாடலின் நினைவில் சிரித்து வெட்கம் கொள்ள,

“அடியே… சொல்லிட்டு ட்ரீம்ஸ்க்கு போடீ… பாரு மணி 9 ஆக போகுது?... சார் வந்துடுவார்… அப்புறம் பேச முடியாது… சொல்லித்தொலை…” என ஜனனி அவசரப்படுத்த,

“உங்கிட்ட சொல்லாம நான் என்னைக்கு இருந்தேன்…” என்ற ஜானு, அர்னவிடம் பேசியதை சொல்லி முடிக்க,

“ஹாஹா…” என சிரிக்க ஆரம்பித்தாள் ஜனனி…

“எதுக்குடி சிரிக்குற?...”

“இல்ல ஃபியூட்சரில் என் தம்பிக்கு வேலை ரொம்ப ஈசியாகிடும்னு நினைக்குறேன்…”

“என்ன வேலை?... என்ன ஈசி?... புரியலை…”

“உனக்கு புரிஞ்சிட்டாலும்…” என நொந்து கொண்ட ஜனனி,

“இல்ல… ஒருவேளை நீ ரொம்ப கோபமா இருந்தாலும் உன்னை டி சொல்லி அப்படியே ஆஃப் பண்ணிடலாமே…. அது என் தம்பிக்கு ரொம்ப ஈசியான விஷயம் தான… அத தான் சொன்னேன்…”

“மூஞ்சி…. அக்காவும் தம்பியும் இருக்கீங்களே… எப்போ என்னை கவுக்குறதுன்னு ப்ளான் போட்டுட்டே இருப்பீங்க போல…”

“இதோடா… புதுசா வேற உன்னை கவுக்கணுமா என்ன?... அதான் என் தம்பிகிட்ட கவுந்திட்டியேடீ செல்லம்…” என்ற ஜனனி, ஜானுவின் கன்னம் பிடித்து சொல்ல,

ஜானு சிரித்துக்கொண்டே, “அதென்னமோ உண்மைதான்… கவுந்துட்டேன் தான் உன் தம்பிகிட்ட….” என மனசுக்குள்ளேயே சொல்லிக்கொள்ள, அவள் முகமோ அந்திவானமாய் சிவந்து போயிற்று….

“ஹேய்… போதும்டீ… வெட்கப்பட்டது… இப்பவே இப்படி வெட்கப்பட்டு எல்லாத்தையும் காலி பண்ணிடாத… கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோடீ என் தம்பிக்கு… அவன் பாவம் இல்லையா?...” என்ற ஜனனியின் முகத்திலும் கிண்டல் தெறிக்க,

“சீ… போடீ….” என அவளைக் கட்டிக்கொண்டாள் ஜானவி…

“ஏண்டி இதுதான் உங்க ஊருல போன்னு அர்த்தமா?... போன்னு சொல்லிட்டு இப்படி கட்டிகிட்டு நிக்குற?... நிஜமாவே பாவம் தான் என் தம்பி…. ஹ்ம்ம்…” என அவள் போலியாக வருத்தப்பட,

“உன்னை…” என்றபடி அவளின் மேல் பாய போனாள் ஜானவி… அவளிடமிருந்து தப்பித்து ஓடி தனது இடத்திற்கு வந்தமர்ந்தாள் ஜனனி…

ஜனனிக்கும் ஜானவிக்கும் இரண்டு வயது வித்தியாசம் உண்டு… இருந்தாலும் வேலைக்கு சேர்ந்த புதிதில் அது இருவருக்குமே தெரியாது…

ஜானவி ஜனனியை வா போ என்றே சொல்லி அழைக்கப் பழகியிருக்க, இருவரும் நெருக்கமான தோழிகளான போது தான், ஜனனி தன்னைவிட பெரியவள் என்ற உண்மையே அவளுக்கு தெரிய வந்தது…

ஏனோ அவளை அக்கா என்று சொல்ல தோன்றாது வா போ என்றே பேசினாள் ஜானவியும்… அப்போது தான் அவளின் சகலமும் ஜனனிக்குத் தெரியவர, உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாத ஜனனிக்கு, அவள் கார்த்திக் சரயூவிடம் செல்லும் சேட்டை பற்றி சொன்னதும், தனக்கும் ஒரு தம்பி இருந்திருந்தால் இவ்வாறு தான் இருந்திருப்பானோ என்ற யோசனையும் வர, அவனை தன் தம்பியாகவே மாற்றிக்கொண்டாள்…

அதை ஜானவியிடம் சொன்னபோது அவளுக்கும் சந்தோஷமே… அன்றிலிருந்து ஜனனியின் பேச்சில் அவனது பெயரை விட என் தம்பி என்ன சொன்னான்?... என்ற உரிமையே அதிகம் இருக்கும்… ஜனனியின் உரிமையான பாசம் ஜானவிக்கும் புரிய, தோழியை இதமாக அணைத்துக்கொண்டு அவளிடம் அவனின் கதை அளப்பாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.