(Reading time: 6 - 12 minutes)

 

மெல்லிய புன்னகை அவனிடத்தில்.. அது அவனுக்கு பிடித்த லாவெண்டர் பூக்களின் நறுமணம்.. அந்த சென்ட்டை பயன்படுத்தி இருக்க வேண்டும்.. காரணம் புரிந்தது.. சொல்லாத போதும் மனதின் மூலையில் மத்தாப்புகள்..

அந்த ஓவியங்களை ஒன்றன் பின் ஒன்றாக அந்த இளஞ்சிவப்பு கதிரவன் ஒளியில் பார்க்க பார்க்க மெய் மறந்து போனான்.. என்ன ஒரு திறமை? அப்படியே நேரில் பார்ப்பது போல.. அவனை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல..

அவன் மட்டும் இல்லை அந்த ஓவியங்களில்.. சிலவற்றில் மட்டுமே அவன் தனியாக இருந்தான்.. மற்றவர்களில் ஒரு பெண்..!! அழகென்று விவரிப்பதிற்கு பதில் வேறென்ன சொல்லலாம் என அவன் மதி ஒரு பக்கமாய் சிந்தித்து கொண்டிருந்தது. எளிமையான எழில்!!

ஆனால் அவளின் இந்த தோற்றத்திற்கும் அவன் பார்த்த தோற்றத்திற்கும் வித்தியாசங்கள் நிறையவே.. அது தான் அவள்.. ஆனாலும் மாறி வருகிறாள்.. இந்த சில நாட்களாய் அவனும் அதை உணர்ந்து இருந்தான்..

'டைரியை படிக்கலாமா? வீட்டிற்கு சென்று படிக்க முடியுமா? இல்லை நாளை? வேண்டாம் இன்றே இப்போதே அமைதியான இடம் வேண்டுமே எங்கே செல்லலாம்?' தனக்குள்ளேயே பேசிக் கொண்டு காரில் சென்று ஏறினான்.

சற்று நேரத்தில் எல்லாம் மஹாபலிபுர எல்லையை அவன் கார் எட்டியிருந்தது.

ரு ஹோட்டலை அடைந்து தனக்கான அறையை புக் செய்து கொண்டான். ஏதாவது சாப்பிட வேண்டும்.. பசி இப்போது தான் தெரிகிறது.. உணவை வரவழைத்து உண்ட பின் கடற்கரைக்கு சென்று விட்டான்!! அவன் தந்தையை போலவே இந்த இடம் அவனுக்கு மிக பிடித்தம்..

பௌர்ணமியும் இல்லாமல் அமாவாசையும் இல்லாமல் சாதாரணமாய் சிரித்துக் கொண்டிருந்தது நிலவு. ஒரு அப்பளத்தை சிறு குழந்தை ஒரு கடி கடித்துவிட்டு வனத்தில் வீசி விட்டது போல இருந்தது..!! இப்படி தான் அவனுக்கு தோன்றியது சிரித்துக் கொண்டான். அவனுக்கு எல்லாமுமே எளிமையாக இருக்க வேண்டும் கற்பனையும் கூட.. அந்த ஒரு விஷயத்தை விட..

அந்த டைரியை திறந்தான்...

நித்திலா... நவிரன்....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

அழகாக முதல் பக்கத்தில் எழுதப்பட்டு அருகில் சிறியதாய் அவன் படம் வரையப்பட்டிருந்தது..!!

அவள் கூறியதை நினைவு கூர்ந்தான்..

"நவிரன்.. ந..விரன்.. உங்கள இப்படி? மை காட் என்னால நம்பவே முடியலை.. ஒரு நிமிஷம் இதை நீங்க படிக்கணும்" அவள் எதையோ எடுப்பதற்காக தன் பையை திறந்தாள். ஆனால் அவன் நிற்கவில்லை சென்று விட்டிருந்தான்.

இன்று எப்படியோ அவள் கொடுக்க நினைத்தது அவன் கைகளில் தவழ்கிறது..

அடுத்த பக்கம்...

என் நவிரன்.. இத்தனை நாள் எதற்காக நான் காத்திருந்தேனோ.. அதற்காக வந்தவன்.. என்னை பெண்ணாக உணரச் செய்யவே பிறவி எடுத்து வந்தவன்.. என் நவிரன்...

அவன் உடல் ஒரு முறை சிலிர்த்து ஓய்ந்தது.. நவிரா அவன் உதடுகள் உச்சரித்தன..

கொஞ்சம் ஆர்வமும் ஆவலுமாக அதை படிக்க துவங்கி இருந்தான் அவன்!!!

உயிர் தேடல் தொடரும்

Episode # 02

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.