(Reading time: 10 - 19 minutes)

துவா நிஷா செல்லம்.. என்னோட பாலிசி என்னன்னா... என்னை யாரவது எழுப்பி விடனும்.. அலாரம் வைச்சா ஆப் பண்ணிட்டு திரும்ப படுத்திருவேன்.. அதுதான் நான் எனக்கு அலாரம் வைக்காமல்.. உனக்கு வச்சுட்டு படுத்திட்டேன்.. எப்படி என்னுடைய ஐடியா?”

“தூ.. கேவலமா இருக்கு.. இதுக்கு என்கிட்டே டைரக்டா சொல்லி இருக்கலாம் லே.. “

“அது எப்படி .. ? என்ன பத்தின இமேஜ் சரிஞ்சுட்டா.. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே”

“ஆத்தா.. மங்காத்தா.. கிளம்பு போ.. “

என்ற படி இருவரும் அன்றைய பயிற்சிக்கு தயார் ஆனார்கள்.

மிக சரியாக ஐந்தரைக்கு அனைவரும் வந்து இருக்க, நம்ம அர்ஜுன் தலைமையிலான trainers வந்தனர்..

முதலில் warm up exercise செய்து விட்டு, பிறகு கிரௌண்ட் சுற்றி பத்து தரம் ஓடினர்.

பிறகு உடற்பயிற்சி ஆரம்பித்து முடித்தனர்.. கடைசி அரை மணி நேரம் .. யோகா .. முடித்து விட்டு எல்லோரும் ஏழரைக்கு தங்கள் இடத்திற்கு திரும்பினர்.

இந்த ட்ரைனிங் எல்லா விதத்திலும் என்பதால், அதிக luggage கொண்டு வரக் கூடாது.. ஆறு செட் inner wear , மூன்று செட் formals, ஆறு செட் நைட் டிரஸ் இத்தனை தான் எடுத்து வரலாம்.. மிலிடரி uniform மூன்று செட் உண்டு.. மற்ற accessories உம அதிகம் வைத்துக் கொள்ள கூடாது.

குளித்து, துவைத்து uniform அணிந்து ரெடி ஆனார்கள். காண்டீனில் பிரேக் பாஸ்ட் முடித்து விட்டு மீண்டும் கிரௌண்ட் செல்ல..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

மதியம் வரை ...பொதுவான விளையாட்டு, உடற்பயிற்சிகள் நடந்தது.

லஞ்ச் முடித்த பின் ஆடிட்டோரியம் சென்று குழுக்களாக அமர்ந்தனர்.

அந்தந்த trainers அவர்கள் trainee உடன் பேச ஆரம்பித்தனர். இது பெர்சொனலிட்டி develpment போன்றது.

அர்ஜுன் முதலில் எல்லாரயும் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.. பிறகு அவர்கள் ஒவ்வொருவரிடமும் தினசரி நடவடிக்கைகள் பற்றி கேட்டு கொண்டு வந்தவன், நிஷா முறை வரவும், அவளை பற்றி சாதரணமாக விசாரித்து விட்டு,

“நிஷா ... நீங்கள் வீட்டில் இருக்கும்போதும் காலையில் சீக்கிரம் எழுந்து விடுவீர்களா?” என்று வினாவினான்

நிஷாவும் அதில் உள்ள உள்நோக்கம் தெரியாமல்,

“இல்ல சார்.. அம்மா எழுப்பி விடுவாங்க.. நான் எல்லாம் ராக்கோழி .. காலையில்தான் தூங்குவேன்.. “

“ஒஹ்.. அப்படின்னா.. இன்னிக்கு எப்படி எழுந்தீங்க..” என,

சுபா அவள் கையை பிடித்து இழுக்க, அதை கவனியாமல்,

“கேப்டன்.. அந்த கூத்த ஏன் கேட்கறீங்க” என்று சொன்னவள், காலையில் நடந்ததை அப்படியே சொன்னாள்.

சுபா தலையில் கையை வைத்து “போச்சு.. என் மானம் மரியாதை ..கவுரவும் எல்லாம் போச்சே.. எங்கிட்ட இருந்ததே ஒன்னே ஒண்ணுதானே .. அது போச்சே.. “என்று அவள் மூளை வருத்தப்பட , மனசோ “எங்கே .. உன் கிட்ட அது எல்லாம் இருந்துச்சு. .இப்போ இல்லை.. என்னை பார்த்து இன்னொரு தடவை சொல்லு .. “ என்று கேலி செய்தது.

அதை “ச்சீ போ.. “ என்று விரட்டி விட்டு, நிஷா மேலும் அவளை பற்றி என்ன damage பண்ண போகிறாளோ என்று பார்த்தாள்.

நிஷா சொன்னதை கேட்ட அர்ஜுன்,

“சுபத்ரா.. இங்கே campus லே செல் போன் நாட் allowed தெரியாதா?’

“இல்லை கேப்டன்.. அது மொபைல் இல்ல.. வெறும் வாய்ஸ் ரெகார்டர் வித் mp 3 பிளேயர் தான்..”

“ஒஹ்.. அப்போ நீங்களே கிணறு வெட்ட சொல்லுவங்கன்னு தெரிஞ்சு வச்சு இருக்கீங்க.. அப்போ punishment கொடுக்கணுமே.. “ என்று இழுக்க,

அவன் என்ன சொல்ல போகிறானோ என்று திகிலுடன் பார்க்க,

“உனக்கு punishment இனிமேல் நீ நாளையிலிருந்து அலாரம் இல்லாமல் எழுந்து இருக்க வேண்டும்.. நிஷா நீ எழுப்ப கூடாது.. இது என்னோட ஆர்டர்.. “ என்று விட்டு,

மற்றபடி உள்ள ட்ரைனிங் ஆரம்பித்தான்.

அவனின் punishment கேட்ட நிஷா நமுட்டு சிரிப்பு சிரிக்க, சுபா முகமோ விளக்கெண்ணை குடித்தார் போல் இருந்தது.

ட்ரைனிங் முடிந்து எல்லாரும் செல்லும் வரை காத்து இருந்த அர்ஜுன், அதற்கு பின் வாய் விட்டு சிரித்தான் வெகு நேரம்.

“மை ஸ்வீட் .. குட்டிமா.. “ என்று கொஞ்சிக் கொண்டான் தன் மனதில் சுபாவை..

மழை பொழியும்

Episode 02

Episode 04

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.