(Reading time: 11 - 22 minutes)

ருத்துவமனையில் எழ முடியாமல் இருந்த அந்த தருணத்திலும் சந்தோஷத்துடன் பல்லைக்காட்டிக்கொண்டிருந்த குமார், அவன் இருந்த அறையின் கதவு படாரென்று திறந்து கொள்ளவும், புருவத்தை சுருக்கினான் அவன்…

கதவை மிதித்து தள்ளி, கையை முறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஜெய்…

அவனைப் பார்த்ததும் சில நொடிகள் பயந்தவன், பின் சிரிக்க ஆரம்பித்தான்….

சிரித்துக்கொண்டிருந்தவனின் அருகே வந்த ஜெய் அவனை அனல்பார்வை பார்க்க, அவனோ சட்டென்று அமைதியானான்…

“உனக்குன்னு யாருமே இல்லன்னு சொல்லிட்டிருந்தியே, இப்போ அதெல்லாம் பொய் தானா ஜெய்?... சே… இப்படி பொய் சொல்லிட்டியே…” என்றான் குமார் கஷ்டப்பட்டு குரலை வரவழைத்துக்கொண்டு…

“நேத்து ராத்திரியே உன்னை கொன்னுருப்பேன்… ஆனா நான் உன்னை கொல்லலை… அந்த திமிருல பேசுறியாடா….” என்றான் ஜெய் நரம்புகள் புடைக்க…

“அப்படித்தான் வச்சிக்கோ… என்னை அடிச்ச ஒவ்வொரு அடிக்கும் நீ பதில் சொல்லித்தாண்டா ஆகணும்… சொல்லவைப்பாண்டா என் ஃப்ரெண்ட்….”

“சொல்ல வைக்க அவன் உயிரோடிருந்தா தானடா?...” எனக் கேட்டான் ஜெய் அலட்சியமாக….

“ஜெய்…….” என வலியையும் மீறி கத்தியவனை,

“சீ… வாயை மூடுடா… என்கூட நேருக்கு நேர் மோத துப்பில்லை உங்களுக்கு… அதை விட்டுட்டு முதுகுல குத்திருவேன்னு மிரட்டுறது உங்களுக்கே வெட்கமா இல்லை… சீ…. நீங்க எல்லாம் ரவுடிங்க?…” என இளக்காரமாக பேசி அவனின் கொட்டத்தை அடக்கினான் ஜெய்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஜெய் பேசியதில் சற்று நேரம் வாயடைத்துப்போனவன், பின், “ஜெய்… நாங்க ரவுடிங்களா இல்லையான்னு உனக்கு போக போக தெரியும்… ஏன் இன்னைக்கே கூட தெரியலாம்….” என்றவனின் கழுத்தைப் பிடித்து நெரித்த ஜெய்,

“ராஸ்கல்… இருடா… அவனை முதலில் அரெஸ்ட் பண்ணிட்டு வரேன்… அப்புறம் வந்து உன் உயிரை எடுக்குறேன்… அதுவரை உயிரோட இருந்து தொலை…. போ…” என்றபடி கழுத்தில் அழுத்தம் கொடுத்த பிடியை ஜெய் விலக்க, குமாரோ மூச்சுக்குப் போராடினான் வேகமாய்…

“இந்த மூச்சுக்காத்து கூட இப்போ நான் உனக்கு பாவம் பார்த்து கொடுத்தது தான்… சொல்லிவை உன் ஃப்ரெண்ட்கிட்ட… அவனை தேடி வந்துட்டே இருக்கேன்னு மறக்காம சொல்லு… அவனைப் பார்க்குற நாள் அவனுக்கு பெரிய பரிசு இருக்குன்னும் சொல்லிடு…” என்ற ஜெய், குமார் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்து அகன்றான் கண்களில் கோபத்தோடு…

தி… கொஞ்சம் மெதுவா போ… சொன்னா கேளு….”

“……….”

“அப்படி என்னடி பிடிவாதம் உனக்கு?... இன்னைக்கே காலேஜ் வரணும்னு….”

“…………….”

“கேட்குறேன்ல எதாவது சொல்லுறீயா நீ?....”

“………………”

“கொஞ்ச நேரத்துல எங்க எல்லாரையும் பயமுறுத்திட்ட சதி நீ…. ஆனா உன்னோட நடவடிக்கை, ஜெய் அண்ணா வீட்டுக்குள்ள போகும்போது ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சுடி…. நானே ஒருநிமிஷம் மிரண்டுட்டேண்டி… என்ன ஆச்சு சதி உனக்கு அப்போ?...” என தைஜூ கேட்டுக்கொண்டே இருக்கவும் பட்டென்று சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள் சதி….

“தெரியலை தைஜூ… எனக்கு என்ன ஆச்சுன்னு…. நாம அவர் வீட்டுக்குள்ள எப்படி போகன்னு யோசிச்சிட்டிருந்தப்போ, அவர் என்னை கூப்பிட்ட மாதிரி எனக்கு கேட்டுச்சு… ஏனோ அந்த செகண்ட், அப்படியே நெஞ்செல்லாம் ஒரு வலி... ஏக்கம்…. தவிப்பு…. எல்லாமே சேர்ந்து என்னை அடிச்சு போட்ட மாதிரி ஒரு உணர்வு… நான் என்ன செய்யுறேன்னே தெரியாம உள்ளே ஓடிட்டேன்… எனக்கு சொந்தமானவர் கிட்ட நான் போகணும் என்ற பரிதவிப்பு தான் அந்த நேரம் என் மனசு முழுக்க இருந்துச்சு…” என அவள் தன் உள்ளுணர்வுகளை தோழியிடம் பகிர்ந்து கொள்ள, தைஜூ அவளின் மனது புரிந்தது போல், மெதுவாக தோளில் கைவைத்து அழுத்தி தலை அசைத்தாள்…

“உங்க எல்லாரையும் பயமுறுத்தணும்னு நான் அப்படி நடந்துக்கலை தைஜூ… என்னையும் மீறி நான் ஏதோ ஒரு உலகத்துக்குள்ள போயிட்டேன்… என்னால அதுல இருந்து ஈசியா வெளியே வர முடியலை தைஜூ… சாரி….”

“ஹே… லூசு… எதுக்கு சாரி எல்லாம்…. விடு…. பரவாயில்லை… ஆனா எனக்கு ஒரு உண்மை மட்டும் தெரியலை சதி இப்போவர?...”

“என்ன உண்மை தைஜூ?...”

“பார்க்கில் நீ ஏன் என்னமோ போல இருந்த?... நான் வந்தது கூட தெரியாம அதே இடத்துல ஆணி அடிச்ச மாதிரி அப்படியே நின்னுட்டிருந்த சதி நீ… எனக்கே பெரிய ஷாக் உன்னை அங்க அப்படி பார்த்ததும்…. அதுக்கடுத்து அண்ணாவைப் பார்க்கணும்னு ஒரே அடம் வேற… என்னதான்டி நடந்துச்சு உங்க இரண்டு பேருக்கும் இடையிலேயும்?....”

தைஜூவின் கேள்வியில் சற்று நேரம் அமைதியாய் இருந்தவள், பின் ஒரு பெருமூச்சுடன், ஜெய்யின் கோபத்தைப் பற்றி சொல்ல,

“அண்ணன் கோபப்பட்டது தப்பே இல்லடி நிஜமா?.... அவர் வெறும் கோபம் மட்டும் பட்டாரேன்னு சந்தோஷப்பட்டுக்கோ…”

“எதுக்குடி அப்படி சொல்லுற?...”

“பின்ன உன்னை எல்லாம் நாலு சாத்தி சாத்தியிருக்கணும் எனக்கு தெரிஞ்சு… பிசாசே… எப்ப பாரு லூசுத்தனமாவே பேசினா உன்னை எல்லாம் வெளுத்தா தான சரிவரும்… அத தான் அண்ணன் செஞ்சிருக்காரு… கேட்கவே சந்தோஷமா இருக்கு இப்பத்தான்…”

“அடிப்பாவி… சந்தோஷமா?...”

“ஆமா… அப்பத்தான இனி நீ அப்படி ஒரு வார்த்தையை எங்கிட்டன்னு இல்ல, யார்கிட்டயும் சொல்லமாட்ட….”

“இல்ல தைஜூ… எனக்கு அந்த நேரத்துல எப்படி அந்த வார்த்தை வந்ததுன்னே தெரியலை… அன்னைக்கும் உங்கிட்ட பார்க்ல பேசும்போது எப்படி சொன்னேன்னும் தெரியலை… இன்னைக்கும் அவர்கிட்ட அதை எப்படி சொன்னேன்னும் தெரியலை… எனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலை தைஜூ….” என சொல்லிக்கொண்டிருந்தவளின் முகம் பற்றி திருப்பி,

“உனக்கு இதுதான் நடக்குது… வேற ஒன்னும் இல்லை…” என்ற தைஜூ, சதியின் பார்வை அப்படியே ஓரிடத்தில் நிலை கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, “இதுக்கு பேரு தான் லவ்….” என்றாள் புன்னகையுடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.