(Reading time: 11 - 22 minutes)

தியின் பார்வை தன் எதிரே சாலையின் அந்தப்பக்கம் காரிலிருந்து இறங்கிய ஜெய்யின் மீதே இருக்க, வழக்கமாக டிரைவரிடம் ஏதோ சொல்ல திரும்புபவன் இன்று எதையும் சொல்லாமலே அங்கு நின்றிருந்த இஷானுடன் வேகமாக உள்ளே செல்ல, இங்கே சதியின் முகம் வாடிப்போச்சு…

அவனின் கோபம் இன்னும் குறையவில்லை போலும்… என்றெண்ணிக்கொண்டவள் என்ன செய்ய, அவனை பார்க்க என்று யோசிக்க ஆரம்பித்த போது, எதேச்சையாக அவள் திரும்ப, தைஜூ இஷான் போவதையே ஒருவித பயத்துடன் பார்ப்பது புரிந்தது…

“தைஜூ… என்னாச்சு?... உன் முகம் ஏன் சரியில்லை…”

“அதெல்லாம் எதுவுமில்லை சதி…”

“பச்… பொய் சொல்லாத தைஜூ… வழக்கமா இஷானைப் பார்த்ததும். உன் முகம் எப்படி பிரகாசமா இருக்கும் தெரியுமா?... ஆனா இன்னைக்கு அதுல ஒரு பயம் தான் தெரியுது… என்னடி ஆச்சு?... நான் சரியில்லாம போன அந்த இரண்டு மணி நேரம் கேப்புல என்ன தாண்டி நடந்துச்சு?....” என ஆதங்கத்துடன் கேட்க,

அதற்கு மேலும் அவளிடத்தில் மறைப்பது சரி என்று படாது போக, சதியிடத்தில் காலையில் இஷானின் விசாரிப்பைப் பற்றி சொன்னாள் தைஜூ…

அதைக் கேட்டதும், “ஓ… சார் என்னைப் பத்தி கேட்டாரா?... ஹ்ம்ம்… எப்படியும் அவன் டியூட்டி டைமில் இன்னைக்கு உங்கிட்ட கேட்கமாட்டான்… சோ நைட் ஃப்ரீ ஆனதும் கண்டிப்பா உனக்கு போன் பண்ணி கேட்பான்… இல்ல நாளைக்கு காலையில பார்க்ல வச்சு கேட்பான்… இரண்டுல ஏதோ ஒன்னு தான் கண்டிப்பா நடக்கும்…. சோ டோன்ட் வொரி பேபி…”

“எது?... கவலைப்படாதவா?.. எப்படிடீ கவலைப்படாம இருக்க முடியும்?... உன் அண்ணன் காலையில கேட்டப்போ தாத்தா தான் வந்து என்னை காப்பாத்தினார்?... மறுபடியும் கேட்டா என்ன பண்ணுறதுன்னு நானே பயந்து போய் இருக்கேன்… நீ என்னடான்னா, அவர் எப்போ கேட்பார்ன்னு டைம் சொல்லி என்னை கூட கொஞ்சம் பயமுறுத்துற?...”

“அய்யோ… தைஜூ பேபி… அவன் உன்னை எதுவும் செய்ய மாட்டான்… அதுக்கு நான் கேரண்டி… அவனை நான் பார்த்துக்கறேன்… சரியா… நீ எதுவும் வொரி பண்ணாம இரு….”

“இல்ல சதி… நா………ன்…….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“அதான் சொல்லுறேன்ல தைஜூ… நான் இஷான் கிட்ட பேசிக்கிறேன்… நீ டென்ஷன் ஆகாம கூலா இரு… ஓகே…”

“ஹ்ம்ம்…”

ப்போது, “என்ன அண்ணா, கிடைச்ச வாய்ப்பை நழுவ விட்டுட்டீங்களே…. அவன் குமார் அண்ணனை அடிச்ச அடிக்கு அவனுக்கு வலிக்குற மாதிரி எதாவது செஞ்சிட்டு வந்திருக்கலாம் நீங்க… இப்படி ஒன்னுமே பண்ணாம வந்துட்டீங்களே அண்ணா…. சே…” என தன் பங்கிற்கு அந்த மிருகத்தை உசுப்பேத்திக்கொண்டிருந்தான், அந்த மிருகத்தின் கீழ் வேலை பார்க்கும் ஒருவன்…

“அவனுக்கு நிச்சயம் வலிக்கும்டா… வலிக்குற மாதிரி தான் நடந்துக்கப்போறேன் இன்னைக்கு… சும்மா ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம்னு தோணுது… நீ என்ன சொல்லுற?...”

“நீங்க சொன்னா மறுப்பேது அண்ணா… கண்டிப்பா… விளையாடலாம்… என்ன ஆட்டம்னு மட்டும் சொல்லுங்க… மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்…”

“ஹ்ம்ம்…..” என யோசித்த அந்த மிருகம், தன் ஆட்டத்தினை செயல்படுத்த திட்டம் தீட்டியது பலமாய்…

தே நேரம், பூஜை அறையில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்த பிரம்மரிஷியின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தது…

கண்கள் திறவாமலே தனக்குள்ளே போராடிக்கொண்டிருந்தவர், அதிர்ச்சியுடன் மெல்ல கண் திறந்த போது, அவர் கண்கள் சிவந்திருந்தது…

“பரமேஷ்வரா….” என்ற நாமம் அவரது வாயிலிருந்து வெளிப்பட, அவர் இருகை எடுத்து வணங்கினார் ஈசனை…

ஏனோ ஈசனை முழு மனதுடன் அவரால் வணங்க இயலவில்லை…

என்னாயிற்று தனக்கு என்ற கேள்விக்குறியோடு அவர், தனக்கு எதிரே இருந்த சிவலிங்கத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார்…

பின் என்ன நினைத்தாரோ அங்கிருந்து எழ முயன்றவரின் கால்கள் சட்டென்று வழுக்க, நிலை தடுமாறி கீழே விழுந்தார்…

“பரமேஷ்வரா….” என மீண்டும் உச்சரித்துக்கொண்டு எழுந்த போது சட்டென அருகில் இருந்த தீபம் அணைந்தது…

Episode 11

Episode 13

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.