(Reading time: 15 - 29 minutes)

டவுள் குசும்பன். குறும்புக்காரன். விஷ்ணுவின் வாழ்க்கை தான்  கதையே, அதில் அனுதான் ஹிரோயின். அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே கேட்ட வைக்கிறான் என்றாள் இந்தக் கடவுளின் குறும்பின் அளவு எவ்வளவு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

“கிளைமேக்ஸ் என்ன னு தெரியாது அனு” என்று பாவமாய் கூறினான் விஷ்ணு. வேறு என்ன செய்ய முடியும் நம்ம கைபுள்ளையால, நீதான் சொல்லனும் னு தைரியமா சவுண்டா விட முடியும்.

“கமான் விஷ்ணு உனக்கு தெரிஞ்சிருக்கும். நீ தானே இந்தக் கதைக்கு ஒரே போட்டோ கிராப்பர். நீ தைரியமா என் கிட்ட சொல்லலாம். நான் யார் கிட்டையும் சொல்லமாட்டேன் பிளிஸ் சொல்லு” என்று  குழந்தை கதை கேட்க அடம்பிடிப்பது போல் கெஞ்சினாள் அனு.   

“இல்ல அனு, பிராமிஸ். சொல்லப் போனா இன்னைக்கு முத்து குமரன் ஐயா பேசும் போது கூட எப்படி எண்டிங் வைக்கிறது னு  தெரியல னு பேசிக்கிட்டு இருந்தாரு. அப்படி பேசுரப்ப நெகட்டிவ் எண்டிங் வச்ச எப்படி இருக்கும் னு கேட்டுடு இருந்தாரு. என்ன னு தெரியல.” தனக்குத் தெரிந்த உண்மையைக் கூறினான் விஷ்ணு.

“நெகடிவ் எண்டீங் ன, வேணுவும், சாருவும்(முத்து குமரன் கதையின் ஹிரோ, ஹிரோயின்) ஒண்ணு சேரமாட்டாங்களா?” வருத்தமாகக் கேட்டாள் அனு.

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த திவ்யா “இல்ல ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவாங்க. கல்யாணத்தை விடவா மனிதன் வாழ்க்கைக்கு ஒரு நெகடிவ் எண்டீங் வேணும். அந்த ரைட்டர் அதைத்தான் சொல்லி இருப்பார்” என்றாள் நக்கலாக.

“நீ சும்மா இரு” என்று தோழியை செல்லமாக அடக்கி விட்டு, விஷ்ணுப் பார்த்தாள் அனு.

“எனக்கு தெரியல அனு. எண்டீங் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் னு தான் நினைக்கிறேன்” என்றான் விஷ்ணு.

“போ விஷ்ணு. என்ன கேட்ட அவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேரனும். பாவம் நம்ம ஹிரோ, 2 வருஷமா (முத்து குமரனின் கதை படி) அவள லவ் பண்ணிருக்கான். அதுவும் உயிருக்கு உயிரா. சோ நெகடிவ் எண்டீங்ன நல்ல இருக்காது” என்று தன் கருத்தை வெளிப்படுத்தினாள் அனு.

கதையில் வரும் 2 வருடக் காதலே பாவம் என்றால், என் நிலைமை என்பது போல் அனுவைப் பார்த்தான் விஷ்ணு. அது திவ்யாவிற்கு புரியாமல் இல்லை. உடனே பேச்சை மாற்றுவதற்காக“சரி விஷ்ணு நீ எடுத்த வேற போட்டோஸ் காட்டு பார்ப்போம்”  என்றாள் திவ்யா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

விஷ்ணு உடனே தன் பையில் இருந்த தன் மடிக் கணினியை எடுத்து ஆன் செய்து திவ்யாவிடம் கொடுத்தான். அதில் இருவரும் புகை படங்களைப் பார்க்க ஆரம்பித்தனர். பூக்கள், பறவைகள், கூட்டம் நிறைந்த சென்னை நகரங்கள் என வித விதமான புகைப்படங்கள் அதில் இருந்தன. அவற்றில் ஒரு சில புகைப்படங்கள் மிகவும் அழகாகவும், வித்யாசமாகவும் இருந்தது. அதற்கு முதலில் இருவரும் அந்தப் புகைப்படத்தை எடுத்தது விஷ்ணுதானா என்று உறுதி செய்து கொண்டு பின்னர் அவனுக்குப் பாராட்டுக்களை வாரி வழங்கினர்.

இப்படியாக ஒவ்வொரு புகைப்படமாக பார்த்துக் கொண்டு வந்த போது ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் “ஒரு நிமிசம் அப்படியே இரு திவி” என்று கூறிவிட்டு தன் கணினி மேஜையை நோக்கி ஓடினாள் அனு.

என்ன செய்கிறாள் என்று இருவரும் புரியாமல் அவளைப் பார்க்க அவள் தன் மேஜை டிராயரை சிறிது நேரம் தேடியவள், கடைசியாக ஒரு சில பேப்பரோடு வந்து மீண்டும் திவ்யா அருகில் அமர்ந்தாள்.

“இங்கப் பார் விஷ்ணு, இது எனக்கு ரெம்ப புடிச்ச படம்” என்று ஒரு பேப்பரை விஷ்ணுவிடம் நீட்டினாள் அனு. அந்தப் பேப்பர் சிள்ஸி நாளிதழில் வெளியான ஒரு புகைப்படம். விஷ்ணு எடுத்தாக கூறி இப்போது கணினியில் காட்டும் அதே படம்.

அது பல வகையான மலர் செடிகளை கொண்ட தோட்டத்தின் புகைப்படம். விஷ்ணு அதை மிகவும் ரசித்து எடுத்திருந்தான். 

“இந்த போட்டோ எனக்கு ரொம்ப புடிச்ச போட்டோ விஷ்ணு. அதனால்தான் இதைக் கட் பண்ணி வெச்சேன். எனக்கு இந்த பேட்டோவ பார்க்கும் போது எல்லாம் எப்படியாவது இந்த இடத்துக்கு ஒரு தடவையாவது போகனும், அதுவும் என் மனசுக்கு பிடிச்சவங்க கூட. நானும் அவரும் மட்டும்” என்று அந்தப் புகைப்படம் தனக்கு எவ்வளவுப் பிடிக்கும் என்று விவரித்துக் கூறினாள்.

விஷ்ணுவால் அவள் கூறியதை நம்பமுடியவில்லை. ஏன் என்றால் அந்தப் புகைப்படம் எடுப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்ற போது முதலில் அவன் மனதில் தோன்றிய எண்ணமே ஒரு நாள் அனுவை அங்கு அழைத்து வர வேண்டும் என்பதுதான். அன்று அவன் எடுத்த புகைப்படம் முழுவதும் அவளை மனதில் வைத்து எடுத்ததுதான்.

 அந்தப் புகைப்படத்தை பற்றி அனுக் கூறியதைக் கேட்கும் போது அவனுக்கு பேரானந்தமாக இருந்தது. துள்ளிக் குதிக்கலாம் என்பது போல் இருந்தது அவனுக்கு. ஆனாலும் அதை வெளிக்காட்டா முடியவில்லை.

அதன் பின்னர் முழுவதுமாக இருவரும் மற்ற படங்களை எல்லாம் பார்த்து முடித்தனர். பின்னர் வெகு நேரம் பேசி முடித்துவிட்டு, இரவு உணவையும் முடித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.