(Reading time: 15 - 29 minutes)

டுத்த ஓரிரு நாட்களும் அவ்வாறே சென்றது. திருமண பத்திரிகை அச்சிட்டு வந்திருந்ததால் ராஜ சேகரும் பார்வதியும் திருமண வேளைகளில் பிஸி ஆயினர்.

திபக்ன் நிலைமையோ அதைவிடப் பரிதாபம். குடும்ப தொழில் மொத்தமும் திபக்கின் கையில் என்பதால்,  திருமணத்திற்கு முன் பல வேளைகளை அவன் முடித்தாக வேண்டி இருந்தது. அதனால் அவனால் அனுவுடன் நேரம் செலவிட முடியாமல் போனது.

தான் வேளைச் செய்யும் ப்ராஜெக்டின் இறுதிக் கட்டம் என்பதால் திவ்யாவும் அந்த வேளையால் பிஸி ஆனாள்.

இதனால் அனு மட்டும் தனித்து விடப்பட்டவள் போல் உணர்ந்தாள். நேரத்தைக் கொலை செய்ய எவ்வளவோ முயன்று பார்த்தாள் ஆனால் எதுவும் பயன் அளிக்கவில்லை. மாறாகக் கடிகாரம் நகர மறுத்து அப்படியே நின்றது. நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் போன் செய்து பார்த்துவிட்டாள் அனைவரும் ஏதோ ஒரு காரணம் சொல்லி இவளிடம் பேசுவதை தட்டிக் கழித்தனர்.

கடைசியாக விஷ்ணுவின் கைப்பேசி எண் கண்ணில் பட்டது. அவனைத்தான் மாலை நேரத்தில் தொல்லை செய்கிறோமே இப்போது போன் செய்தால் என்ன சொல்வானோ என்று தயக்கத்துடனே அவனுக்குக் கால் செய்தாள் அனு.

விஷ்ணுவோ தன் வேளை இடத்தில் காலில் வெந்நீர் ஊற்றியவன் போல அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். இந்த வாரக் கதைக்கு தேவையான போட்டோஸ் அவனுக்கு இன்னும் சரியாக அமையவில்லை.  கையில் இருந்த புகைப்படங்களில் எல்லாம் ஏதோ ஒரு குறை இருப்பது போலவே தோன்றியது அவனுக்கு.

தன்னுடன் வேளைச் செய்பவர்களை எல்லாம் உணவு இடைவேளைக்குக் கூட அனுப்பாமல் வேளைச் செய்ய சொல்லி இருந்தான். அவனுடைய அசிஸ்டண்ட் வித்யா எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதில் திருப்தி அடையாமல் போடோஸ் எல்லாம் மீண்டும் எடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

அப்படிப் பர பரப்பில் இருந்தவனின் மொபைல் போன் ஒளித்தது. “யாருடா அது இந்த நேரத்துல” என்று புலம்பிக் கொண்டே போனைப் பார்த்தவன் அதில் “அனு” என்று பேர் வரவே அதுவரை அண்ணியனாக இருந்தவன் அம்பியாக மாறினான்.

போனை ஆன் செய்தவன் “சொல்லுங்க அனு, எதாவது பிரச்சனையா, இந்த டைம்ல கால் பண்ணிறுக்கீங்க” என்றான் தன் வேளைப் பரபரப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல விஷ்ணு. எனக்கு ரெம்ப போர் அடிக்குது. அதான் பேசலாமே னு போன் பண்ணேன். நீங்க பிஸியா இருக்கீங்களா?” என்றாள் தயக்கத்தோடு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

“பிஸியா? நானா? என்ன அனு, நான்தான் எப்பவுமே ஃப்ரீ னு உங்களுக்குத் தெரியாதா?” என்று கூறிக் கொண்டே நிமிர்ந்து வித்யாவை பார்த்தான். அவளோ இவன் கூறுவதை கேட்டு இவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஒரு நிமிஷம் அனு” என்று அவளிடம் போனில் கூறிவிட்டு, வித்யாவையும் மற்றவர்களையும் பார்த்து உணவு இடைவேளை என்று அறிவித்து விட்டு மீண்டும் அனுவோடுப் பேசத் துவங்கினான். உணவை முடித்துவிட்டு மற்றவர்கள் திரும்பி வரும் வரை இவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

பேசி முடித்துவிட்டு போனை வைப்பதற்கு முன் “விஷ்ணு, உங்களுக்கு வேளை முடிஞ்சிடுச்சினா ஈவீனிங் சீக்கிரம் வரமுடியுமா?” என்றாள் அனு.

“அனு இன்னைக்கி எனக்கு ஒரு வேளையும் இல்ல. இன்னும் 30 மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன்” என்றான் விஷ்ணு. நமக்கு வேளையா முக்கியம்.

“தேங்காட் விஷ்ணு. சரி அப்போ பார்க்கலாம்” என்று கூறிவிட்டு போனைக் கட் செய்தாள் அனு.

அனுவிடம் பேசிவிட்டுத் திரும்பியவனின் முன்னால் ரெடியாக போட்டோஸுடன் நின்றாள் வித்யா.

“விஷ்ணு, அந்த பொண்ண மேகப் போட சொல்லிட்டேன். நீ சொன்ன மாதிரியே லைட்டீங் எல்லாம் செட் பண்ண சொல்லிட்டேன். ஒரு 30 மினிட்ஸ் வெய்ட் பண்ணினா திரும்பவும் போட்டோ ஸுட் ஆரம்பிச்சிடலாம். மத்தவங்களிடமும் பேசிட்டேன், இன்னைக்கு போட்டோஸ் நல்ல வராம யாரும் இந்த இடத்தை விட்டு போகமாட்டாங்க” என்று சிரிக்காமல் கூறிமுடித்தாள் வித்யா.

தான் முன்பு கூறிய குறைகளையெல்லாம் சுட்டிக் காட்டி தன்னைக் கிண்டல் செய்கிறாள் என்று விஷ்ணுவிற்குத் தெரியும்.

“இல்ல வித்யா நீ சொன்ன மாதிரி இந்த போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. இதுல பெஸ்டு எது னு பார்த்து பிரிண்டிங்க் கு அனுப்பிடு. நான் கொஞ்சம் அவசரமா கிளம்பனும்” என்றான் விஷ்ணு.

அவசரமா கிளம்பனுமா? மவனே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பாடு படுத்தன. இரு நீ எப்படி 30 மினிட்ஸ்ல போர னு பாக்குரேன் என்று எண்ணிக் கொண்டு “இல்ல விஷ்ணு நீ சொன்ன மாதிரி இந்த போட்டோஸ் எல்லாம் சரி இல்லதான். ஒவ்வொரு பிக்லேயும் சம் திங் மிஸ்ஸிங்” என்று அவன் கூறிய வசனத்தையே மீண்டும் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.