(Reading time: 19 - 38 minutes)

டுத்தும் இவன் மில்லில் ஒரு எமெர்ஜென்சி இவன் போயாக வேண்டிய நிலை….. மீண்டும் வீடு திரும்பிய நேரம் பின் இரவாகி இருந்தது…. இன்று அனுவைப் போய் பார்க்கவெல்லாம் முடியாது எனினும் அவளை அழைத்து பேசிவிட நினைத்திருந்தான் அதி…..

இப்போதோ அதற்கும் வழி இல்லை….ஆக இவன் தன் அறைக்குள் நுழையவும், இவன் கால்கள் இவனை அதாக பால்கனிக்கு கூட்டிப் போக…. இவன் கண்களோ இயல்பாய் அனு வீட்டு மாடிக்கு தன் பார்வையை அனுப்பி வைத்தது…… அங்கு அவன் கண்ட காட்சியில் அதிர்ந்தே  போனான் அதிபன்….

அனு தங்கி இருந்த வீடு பழைய கால கட்டிடம்….ஒவ்வொரு சுவரும் இரண்டடி பருமன்….. மொட்டை மாடி கைப்பிடிச் சுவரும் அப்படியே…அதோடு அந்த கைப்பிடி சுவர் பழைய கால அலங்கார முறைப்படி தொடராய் அடுக்கப்பட்ட பிறைகள் போல் அமைக்கப்பட்டிருக்கும்…..

அந்த ஒவ்வொரு பிறை வளைவிலும் ஒரு ஆள் தாரளமாய் முதுகு சாய்த்து …ஈசி சேரில் அமர்வது போல் உட்கார முடியும்…..  அந்த நேரத்தில் அப்படிதான் அமர்ந்திருந்தாள் அனு….. அதோடு  அவள் அப்படியே தூங்கியும் போயிருந்தாள்…..

வானம் வேறு மழைக்கு முறுக்கிக் கொண்டிருக்க…..சட சடவென தூரல் போட ஆரம்பித்தால்…?? ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவள்… என்ன ஏது என புரியாமல்…எங்கிருக்கிறோம் என மறந்து சற்று தடுமாறினாலும் போதும்… அந்த கைபிடி சுவரில் இருந்து நேரடியாய் தரையில் போய்தான் விழுவாள்…..

அப்படி மழை கூட தேவையில்லை தூக்கத்தில் சற்று பிறண்டாலும் என்ன ஆவாளாம் இவள்…..???

அவசர அவசரமாய் அவள்  வீட்டை நோக்கி வேக வேகமாய் ஓடத் தொடங்கினான் இவன்….

எத்தனையோ உணர்வு போராட்டங்களுடன் அரை குறையாய் தூங்கிப் போயிருந்த அனுவிற்கோ  அந்த நேரத்தில் வீசீய ஒரு சிலீர் குளிர் காற்றில் எங்கிருந்தோ வருகிறது கால் சதவீத விழிப்பு…..

மெல்ல மெல்ல புரிகிறது தான் எங்கிருக்கிறோம் என….முதல் ஞாபகம்…… அச்சோ ஆன்டி எதுக்கும் இவள கூப்டுறுந்தாங்கன்னா…..? “நீங்க தூங்குங்க ….நான் கொஞ்ச நேரத்துல படுக்கிறேன் ஆன்டி…” என படுக்கையில் படுத்தவரிடம்  சொல்லிவிட்டு மாடி வந்தவள்….

இதற்குள் சட சடென பெருந்தூரலாய் தொடங்கியது மழை….

இப்போது கைபிடி  சுவரிலிருந்து கவனமாய் இறங்கியவள்….. அருகில் தரையில் வைத்திறுந்த அவள் மொபைலை குனிந்து இருட்டில் தடவி எடுத்தவள்….எழும் போது இயல்பாய் அதி வீட்டுப் புறமாய்ப் பார்க்க அவன் வேகமாய் இவர்கள் வீடு நோக்கி தெருவில் ஓடி வந்து கொண்டிருப்பது தெரிகிறது…. இத்தனை மணிக்கு வருவதென்றால்…??

இதற்குள் வானம் பிய்ந்து உள்ளே பதுங்கி இருந்த மொத்த நீரும் ஒன்றாய் கொட்டுவது போல் ஒரு பேய் மழை….

என்ன ஏன் என்று புரியவில்லை ஆனாலும் இவள் கட கடவென படி இறங்கி….வீட்டு கதவு திறந்து….. உள் முற்றம் கடந்து காம்பவ்ண்ட் சுவரில் இருக்கும் தலை வாசல் கதவை அவசரமாய் திறக்கும் போது  அங்கு வந்திருந்தான் அவன்…..

‘என்னாச்சு தீபன்…?’ என இவள் கேட்கத்தான் நினைக்கிறாள் அதற்கும் முன்னாக அவளை இரு தோள்களிலுமாக தன் கைகளால் இறுகப் பற்றினான் அவன்….. இவளுக்கு எதுவும் புரியவில்லை… பதிலுக்காய் அவன் முகத்தைப் பரிதவிப்போடு பார்த்தாள்….. அவன் இப்படி நடந்துகிடனும்னா கண்டிப்பா விஷயம் ரொம்பவே சீரியஸ்…..

இப்பொழுது அவள் மீதிருந்து தன் கைகளை சட்டென புரிந்தவனாக எடுத்துக் கொண்டவன்…..தன் ஆழ கண்களையும்…..துடிக்கும் இரு கைகளையும் இறுக மூடி…. அந்த கைகளை தன் முகம் மீதே வைத்து…..பின் மெல்ல அவைகளை இறுக இறுக கீழிறக்கி…. இன்னும் தவித்தபடி இருக்கும் விழிகளை திறக்க….

அவனை ஆட்டிப் படைக்கும் உணர்வுகளை அடக்க படும் பாடு இவளுக்கு தெள்ளத் தெளிவாய் புரிகிறது….

அதியின் அறை இரண்டாவது தளமல்லவா அவன் வீட்டில்…..அதிலிருந்து இறங்கி இவன் முதல் தளம் வரும் போது அனு இவன் பார்வைக்கும் படவில்லை….அவள் அதற்குள் விழித்து மொபைலை எடுக்க குனிந்திருப்பாள் என அவனுக்கு தெரியாதே…. அவள் விழுந்துவிட்டாள் போலும் என நினைத்துவிட்டான் அவன்…

அதோடு அந்த பக்கமாக அவள் வளர்க்கும் செடிகளை கோழி கிளறுகிறது என….இரும்பு கம்பிகளில் வலை அடித்து ஒரு  குட்டி வேலி போடும் வேலை நேற்று தான் நடந்தது…… அழகுக்கென அந்த  கம்பிகள் அத்தனையும் கூர் முனையோடு அமைக்கப் பட்டிருந்தது…..மேலிருந்து விழுந்தால் அவள் அதில் வந்து விழுவாள் என அவனுக்கு உறைக்க….அந்த உயிர் வலியில் ஓடி வந்திருந்தான் அவன்…

    இவளுக்கு பின்னாக சற்று தொலைவில் தெரியும் அந்த குட்டி வேலியை அவன் இப்போது  தவிப்பாய் நிம்மதியுமாய் பார்க்க…… அனுவுக்கு விஷயம் புரிந்துவிட்டது…….அதோடு அவன் தவிப்பின் அளவும் படும் பாடும்….

“எனக்கு ஒன்னுமில்ல தீபன்…..பாருங்க நான் சேஃப்…. ரொம்பவும் சேஃப்…. சாரிபா……  வெரி சாரி…. பயந்துடீங்களாபா…” அவன் உணர்வுகளுக்கு இவள் உணர்வுகள் இப்படியாய் வாயல் பதில் சொல்ல…. கையோ அவன் இடக்கன்னத்தைப் போய் ஆதூரமாய் தொட்டு தாங்க……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.