(Reading time: 19 - 38 minutes)

ந்த நொடி…. அந்த கணம்… அனுவுக்கு என்ன புரிந்தது….என்ன நடந்தது எப்படி உணர்கிறாள் என எதுவும் தெரியவில்லை…… அவனை அணைத்து அவன்  மார்பில் புதைந்திருந்தாள்……

” உங்கள் ரொம்ப படுத்துறேன்ல தீபன்……” கதற தொடங்கியிருந்தாள் அவள்….. இது அவனை இப்போது இப்படி துடித்து ஓடி வர வைத்ததற்காக மட்டுமல்ல….தன்னால் அவன் வாழ்வில் அவன் குடும்பத்தில் என்ன வேதனைகளெல்லாம் வருமோ வந்ததோ என அனைத்துக்கும் தான்….

இந்த நிமிடம் வரை இருந்த அதியின்  தவிப்பு இப்போது வகை வகையாய் கிளை பிரிந்தது.

என்னதான் பின்னிரவு…தெருவில் சுத்தமாய் ஆள் நடமாட்டம் இல்லை எனினும்….. தலைவாசலில் வைத்து இப்படி ஒரு கோலத்தில் நின்றால்…..

ஆனாலும்  ஆறுதலுக்காய் இவனிடம் புதைந்திருப்பவளை என்னவென்று விலக்க..?

கூடவே முன்பு வயலில் வைத்து காயம்பட்டிருந்த வேளையிலும்…..அங்கு யாரும் வரும் வாய்ப்பு அபூர்வம் என்ற நிலையிலும்….அவள் இவனைவிட்டு எத்தனை விலகினாள் என்பதும் இன்றைய மாற்றமும் மனதிற்குள் பளிச்சிட….

அவனும் திக்குமுக்காடித்தான் போனான்…..

ஆனாலும் சுதாரித்தவனாக….” அனு….அனுமா….உன்னால எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல…ப்ரச்சனை வர்ற இடத்துலலாம் நீ இருக்கன்னா….உன்னாலதான் அவங்களுக்கு எதாவது ஹெல்ப் பண்ண முடியும்னு அர்த்தம்பா….. நீயே பாரு கனி ஆன்டிக்கு நீ இல்லைனா யாரு இருந்திருப்பா….. “ அவளிடம் பேசியபடி அவளோடு சேர்ந்து சற்று உள்புறமாக நகர்ந்தான்….

அதுவரை தனக்குள் குலுங்கிக் கொண்டிருந்தவள் இந்த வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்….

‘ஆமாம்தானே அவளது அம்மாவோ கனிஆன்டியோ அனுபவித்த அத்தனை இழப்புகளிலும்  அருகில் இருந்து அவர்கள் வாழ்விற்கு வளம் சேர்க்கும் வாய்ப்பு இவளுக்கு இருந்தது தானே….’

“Warriors ஐ battlefield ல தான வேலைக்கு வைக்க முடியும்….பிணியாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவைனு இருக்குதானே….”

“நீ ரொம்பவும் ஸ்ட்ராங் அனு….. வேற யாராயும் இந்த சூழலுக்கு நம்புறதைவிட கடவுள் உன்னை நம்பிருக்கார்மா… நீ பார்த்துப்பன்னு….”

ஆறு மணி நேர பிரசங்கத்தில் அமராத மனம்…. சில வேளைகளில் ஒற்றை வார்த்தையில் விடுதலை பெறும்…. அப்படித்தான் இந்த நொடி அனுவுக்கு….

“அவர் சித்தம் இல்லாம நம்ம லைஃப்ல எதுவுமே வராதுன்னும் இருக்குது…..கூடவே In all things God works for the good of those who loves Him னும் இருக்குது…….அதனால நடந்த எல்லாம் எதோ ஒரு நன்மைக்காகனு நம்பி அதை விட்டு வெளிய வா அனு…… “

இத்தனை நாள் துளி துளியாய் சேர்ந்து வந்த பயம் அவநம்பிக்கை….எனக்குன்னா இப்டித்தான் ஆகும்…நான் இருக்ற இடம் நல்லா இருக்காது… என்ற அனைத்தும் கசடாக இப்போது கழன்று விழ….

“செலுத்த வேண்டிய அன்பைத்தவிர வேறு எதிலும் கடன் படாதிருங்கள்னு படிச்சிறுக்கதானே……அந்த அன்புல கூட நீ கடன் வைக்கலை…..எல்லோருக்கும் வாரி வாரி கொடுத்றுக்க…..அதுக்காகத்தான் இதெல்லாம்னு யோசி…..”

சுக விடுதலை அவளில்….

ஆனாலும் இந்த அபயன் பவிஷ்யா விஷயம்…? இவள் மனம் இப்படி பாய…

“பவிக்கு அவ மாமாவ செய்யனும்னு இன்னைக்கா அவங்க அப்பா முடிவு செய்தாங்கன்னு நினைக்க….?” இவள் மனம் உணர்ந்தவனாய் கேட்டு வைத்தான் அதி.

‘அதானே…’ என்கிறது இப்போது இவளது அறிவு….இவ்ளவு நேரம் அது ஃபுல் ரெஸ்ட்ல் இருந்துச்சு போல…

“ஆனாலும் அபை பவி மேரேஜ் நடக்கலைனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் தீபன்…” ஏறத்தாழ கெஞ்சல் தொனி இது… “எப்டியாவது அவங்க மேரேஜ நடத்தி வச்சுடுங்க ப்ளீஸ்….”

அவள் தொடர சின்னதாய் சிரிப்பு வந்திருந்தது அதிபன் முகத்தில்….

“கண்டிப்பா…..அதுவும் உங்கள மாதிரி பெரிய இடத்து சப்போர்ட்லாம் இருந்துச்சுன்னா எப்டி நடக்காம போகும்…?” அவன் சொல்ல

இவள் கேள்வியாய் பார்த்தாள்.

“ப்ரேயர் செய்வல்ல அவங்களுக்காக…அத சொன்னேன்….அது காட் வில்னா இவங்களுக்கும் இஷ்டம் இருக்குன்னா கண்டிப்பா நடக்கும் தான….?”

இவள் முகத்திலுமே இப்போது முழு நிம்மதி களை…..சின்னதாய் புன்னகை கூட வருகிறது…

“சரிங்க மேடம் இப்டியே சிரிச்சுட்டே போய் தூங்குங்க….நாளைக்கு பார்க்கலாம்…” அவன் விடை பெற முனைய…

அதன் பின்தான் தான் என்ன செய்து வைத்திருக்கிறோம்….எப்படி நின்று பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையே உணர்கிறாள் அனு… அவ்வளவுதான் அவனை ஒரு அதிர்ச்சிப் பார்வை பார்த்தவள்…. அவனை விட்டு விலகி  வீட்டின் உள் புறம் நோக்கி ஓடத் தொடங்கினாள்….

போச்சு அடுத்த விஷயத்துக்கு அவ அப்செட் ஆகியாச்சா….?

“அனு இதப் பத்தி அப்றம் பேசுவோம்….இப்ப நீ கதவ பூட்டிட்டுப் போ….” இவன் தான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.