(Reading time: 31 - 62 minutes)

19. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

Puthir podum nenjam

இன்னும் ட்விஸ்ட், டர்ன் ஓவர் வரலை.. விறுவிறுப்பு இன்னும் ஆரம்பிக்கலை... ஹீரோ ஹீரோயின்க்கு ஸ்பார்க் வரவும் லேட்டாகுது... இன்னும் லோ கியர்லே கதை மூவ் ஆனாலும், டீசர் போட்டதும் விரட்டி வந்து ஆர்வமாக கேட்ட தேவியும், சுஜாதாவும் தான் இந்த எபிசொட் எழுத எனக்கு பெரிய மோட்டிவேஷன்!

இந்த எபி சிறப்பா வர என்னாலே முடிஞ்ச முயற்சியை போட்டு இருக்கேன்! இன்னும் இரண்டு, மூணு எபிசொட் தான் கார்ப்பரேட்டை சுத்தும்ன்னு அனுமானிக்கிறேன்.. பார்க்கலாம்! ஆனா, ஒன்னு மட்டும் நிச்சயம்  - ஒரு பெரிய திருப்பு முனையை நோக்கி நகன்று கொண்டே இருக்கிறோம்! மறவாது கருத்துக்களை பதிவிடுங்கள் - ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்!

புதிர் 19

திய உணவு வேளை வந்ததும்.... அஞ்சனா ஆர்யமனை பார்த்து வருவதாக கிளம்ப சசி ஏதோ நினைவு வந்தவளாய்...

“ஹே.. இப்போ தான் நினைவுக்கு வருது!!! இன்னைக்கு எக்சிகியூட்டிவ் லஞ்ச் ஆன்!!! வெளியே சாப்பிட போயிருப்பாங்க!”, என்றதும்.. திகைத்த அஞ்சனா,

“அப்போ.. ஆர்யமனும் போயிருப்பாரா?”, என்று கேட்டதும்..

“காலையில் நீ கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லாம சும்மா சிரிக்கிறப்பவே தெரியலை அதில் வில்லங்கம் இருக்கும்ன்னு! ஹூம்.. அப்படி என்ன இருக்கோ  அந்த கொலாஜ் வொர்க்லே? முடிக்கணும்ன்னு இவ்வளோ துடிக்கிற?”

என்று சசி புலம்பிக் கொண்டே சிணுங்கிய இன்டர்காமை எடுக்க...

அஞ்சனாவிற்கோ மனதில் சிரித்த முகமாய் ஆர்யமன் நின்ற கோலம் மனதில் ஒரு கணம் வந்து போனது! ‘ஆர்யா அப்படி எல்லாம் கிடையாது’, என்று எண்ணிக் கொண்டே சசியைப் பார்க்க....

இண்டர்காமில் பேச ஆரம்பித்த சசியின் பேச்சில் கடுமை தெரியவும் என்னவென்று கேட்க ... ரிசீவரை பொத்திய சசி கோபம் கொப்பளிக்க,

“உன்கிட்ட பேச எவனோ வாய்ஸ் மாத்தி... அமெரிக்கன் இங்கிலீஷ்ல போல ட்ரை பண்றான்.. பேரை சொல்லுடான்னு என்னையே கலாய்க்கிறான்!!!! யாருகிட்டா???!!!!”

“லெப்ட் அன்ட் ரைட் வாங்கிறதுக்கு முன்னாடி எதுக்கும் கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன்! குதிரைன்னு உனக்கு யாரும் தெரியாது தானே?”,

என்று கேட்டு கூட முடிக்க இல்லை... “அய்யோ குதிரை என் கசின் சசி!”, என்று பதறி... பறந்து போய் ரிசீவரை வாங்கிய அஞ்சனா..

“ஹே குதிரை!!!”, என்றாள் ஆசையாக!!! அவனிடம் பேசி பத்து நாட்களுக்கு மேலாகி விட்டதே! ஹர்ஷவர்தனோ,

“யார் அந்த சசி?? எத்திக்ஸ் இல்லாம போனை உன்கிட்ட கொடுக்காம கேள்வியா கேட்கிறது?”, கேட்டான்  எரிச்சலுடன்..

“அதுவா..”, என்ற படி சசியைப் பார்த்து சிரித்துக் கொண்டே,

“நம்ம வானத்தை போல (வாட்ஸ் ஆப்) க்ரூப்ல போட்டு இருந்தேனே!!! என் பெஸ்ட் ஃப்ரண்ட் சசி! இவ அடுத்த பாஜி! அதான் ப்ளாங் கால்லான்னு செக் பண்ணிட்டு தான் என் கையில் கொடுக்கிறா!”

என்றதும் உண்மை புரிந்து கொண்ட சசி, “அடப்பாவி! எனக்கு பல்பா??”, என்று பாவமாக சொல்லி விட்டு... ஹெட்போனை மாட்டிய  படி தன் கணினியில் கவனத்தை வைத்தாள் - அவளுக்கு தனிமை கொடுக்கும் பொருட்டு!

அஞ்சனா சொன்னதைக் கேட்டதும் சசியின் மீதான் எரிச்சல் மறைந்து திருப்தி உண்டானது ஹர்ஷவர்தனுக்கு!

“உனக்குன்னு ஒரு ஃப்ரண்ட்ஸ் சர்க்கிளை உண்டாக்க ஆரம்பிச்சிருக்க! வெரி குட்! அப்படியும் பாஜி மாதிரி ஆளுங்க தான் அமையுது பாரு உனக்கு!”, என்று சிரித்தவன்..

“அப்புறம் ஒரு ஷாக்கிங் நியூஸ் கேள்விப் பட்டேன்”, என்ற பீடிகை போட முழித்த அஞ்சனாவை மேலும் குழப்படிக்காமல்,

“எனக்கு வந்த தேங்க்ஸ் கார்ட்லே நீயும் ஒர்க் செய்திருக்கன்னு கேள்வி பட்டேன்!!!”, என்றான் ஆர்வமாக.. அதைக் கேட்ட அஞ்சனா திகைத்தாள்....

“என்னது??? அது... அது.. உன் கைக்கு வந்திடுச்சா? எப்போ?”, என்று கேட்டவளிடம் அவன் அது சென்ற வாரமே வந்து விட்டது என்றதும்  மிகுந்த ஏமாற்றமடைந்தவள், பின் அவன்,

“அதை பாராட்டாத ஆளே இல்லை! வாட் எ மெஸ்மரைசிங் ஒர்க்! என்னோட ஆபிஸ்லே ஃப்ரேம் போட்டு  வைச்சிட்டேன்! ”, என்று சொல்ல சொல்ல இவள் ஏமாற்றமெல்லாம் மறைந்து போய் சந்தோஷம் நிலை கொள்ள...

“உனக்கு ஹேப்பின்னா எனக்கும் ஹேப்பி தான் பார்ட்னர்!”, என்றாள் குதூகலமாக! வரைவது என்றதும் மலரும் நினைவுகள் கட்டவிழ்ந்தது ஹர்ஷ்ஷிற்கு!

“நாம ஒரு குருவியை வரைஞ்சது நினைவு இருக்கா..?”, என்று கேட்டதும்,

“அதைப் பார்த்து நிறைய குருவி செத்தது தான் நினைவு இருக்கு பார்ட்னர்!”, என்று இவள் சொல்ல..

“குருவி மட்டுமா.. அமெரிக்கன் ஈகிளையே சாச்சதே நம்ம ட்ராயிங்! நம்ம  திறமை இப்படி இருக்கும் பொழுது... இதில்லே என்னத்தை வொர்க் செய்திருப்பே? கன்பர்ம்ட்டா இது ஆர்யமனோட டாப் நாட்ச் ஆர்ட் வொர்க்!!! அவன் பெயின்ட் பண்றப்போ... சும்மா ப்ரஷ் எடுத்து கொடுத்திருப்பே.... ”, என்று கிண்டலடிக்க...

‘ஆர்யா செய்ததா அது???’, என்று மனம் வியந்தாலும் ஹர்ஷ்ஷூடன் வாயாடுவதிலே குறியாக அஞ்சனா,

“அப்படி எடுபிடி வேலை பார்த்திருந்தா கூட  பெயின்டர் ஆகி இருப்பேன்.. உன் கூட சேர்ந்து.... உனக்கு திருட்டு தம் வாங்கி கொடுக்க தான் பழகியிருக்கேன்! இன்னைக்கு எத்தனை பத்த வைச்சே?”, என்று கணக்கெடுக்க ஆரம்பிக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.