(Reading time: 8 - 16 minutes)

சொன்னபடியே அவன் வந்ததும் கடைக்குள் சென்று நேரே அவள் யோசித்து வைத்திருந்த மொபைல் இருந்த இடத்திற்கு அவள் செல்ல,

"அனு அங்க எங்க போற?" என்று பின்னாலேயே வந்தான் விதார்த் தேவ்.

"இந்த மொபைல் தான் வாங்க போறேன் தேவ்"

"இதுவா?" சற்றே சிரிப்பும் ஏளனமும் அவன் குரலில்.

"ஆமாம் ஏன்?"

"இதெல்லாம் ஒரு 'லுக்' கொடுக்குமா? இதை போய் வாங்குறேன்னு சொல்ற?"

"இல்லை இது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.."

"நமக்கு பிடிச்சுருக்குனு அதை செய்ய கூடாது அனு, நாலு பேரு நம்மள பாக்கும்போது 'கெத்தா' இருக்கணும்"

"ஆனால்.."

"இந்த ஆனால் ஆவன்னா எல்லாம் வேண்டாம்.. வா அங்க போலாம் நான் சொல்ற மொபைல் தான் நீ இன்னைக்கு வாங்கணும்"

"ம்ம்ம் ?"

"என்ன வாங்க மாட்டியா? உனக்கு கண்டிப்பா பிடிக்கும் பாரேன்"

"நீ சில்லு வாங்கிக்குறேன்.. பிடிக்கலைன்னாலும்"

"பிடிக்கும் உனக்கு"

ஒரு முறை தனக்கு பிடித்த அந்த 'மாடல்' மொபைலை திரும்பி பார்த்தவள், அவனுடன் சென்று அவன் செலக்ட் செய்து பார்த்து பார்த்து வாங்கி பில் காட்டும் வரையிலும் பேசவில்லை.

ஒரு ஏக்க பெருமூச்சுடன் அவள் வெளியில் வர, பழைய போனை அவளிடம் இருந்து வாங்கி 'சிம் கார்டை' கழட்டி அவனே pudhu phonail போட்டு அதை ஆன் செய்து அவளிடம் கொடுத்தான்.

"பிடிச்சிருக்கா?"  குழந்தையின் குதூகலத்துடன் அவன் கேட்கையில் இல்லை என்று சொல்ல முடியவில்லை அவளால்..

"ம்ம்ம்ம்"

"தெரியும்.. எப்பவுமே இந்த மாதிரி பொருள் எல்லாம் பிடிக்காம போகுமா? அது நான் செலக்ட் பண்ணி?! இந்த மாதிரி விலை அதிகமான பள பளன்னு இருக்குற பொருள் எல்லாம் எல்லாருக்குமே பிடிக்கும்.. வெச்சிருக்கிற நமக்கும் கெத்து"

அன்று முழுவதும் அவன் இதை பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தான்..!! பணம் பணமிருந்ததால் தான்.. அதை நாம் வைத்திருக்கும் பொருள்களில் மற்றவருக்கு காண்பித்தாள் தான் இந்த சமுதாயத்தில் நாம் மதிக்கப்படுவோம்..!!

"னு.. அடியேய் அனு"

"ம்ம்ம் ஆங்?"

"எந்த உலகத்துல இருக்க?"

"ம்ம்ம் இல்லை.. அது... சொல்லு ஆதி"

"ஹ்ம்ம் கும் சுத்தம்.. இந்த காபி"

"ஹ்ம்ம்ம்"

"சிம் கார்டு போடலையா?"

"போடணும்.."

"பரத் கிட்ட சொல்லிட்டேன்"

"என்ன சொன்னான்??"

"நானே வாங்கி இருப்பேன்ல நீ ஏன் வாங்குனான்னு கோபப்பட்டான்"

"சாரி டி"

"ஏய் லூசு.. விடு அவன் கோபப்படறது என்ன இன்னைக்கு மட்டுமா நடக்குது?"

"எங்க அவன்?"

"உள்ள தான் இருக்கான் அவனுக்கும் காபி கொடுத்துட்டு தான் வந்தேன்"

"ஹ்ம்ம்"

"உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ம்னு அங்கேயே இருக்கான்"

"ம்ம்ம்ம்"

"அம்மாக்கு போன் பண்ணி மொபைல் கீழ விழுந்துடுச்சு பயப்படாதிங்கன்னு சொல்லிட்டான்"

"ஓ?"

"என்னடி ம்ம்ம்ம் ஓன்னு?! கதையா சொல்றேன்"

"இல்லை... அவங்களுக்கு என்ன என்மேல அவ்ளோ அக்கறையா? இதே என் தங்கச்சின்னா இருக்கும்"

"அனு.. எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?! இப்படி பேசாதேன்னு?"

"ம்ம்ம்ம்ம்"

"மறுபடியுமா? சரி விடு வா பீச்சுக்கு போலாம்"

"நான் வரலை"

"உதை படுவடி நீ.. ஒழுங்கா வா.. பரத் ரெடி நானும் ரெடி.. நீ போய் ரெடி ஆகு"

"சொன்ன கேட்க மாட்டியே"

"பரத் கிட்ட சொல்லு"

"வேற வினையே வேண்டாம்.. ஏற்கனவே என்மேல கடுப்புல இருப்பான்"

"தெரியுதுல்ல கிளம்பு"

"சரி டி, இந்த போன்.. சிம் பரத் கிட்ட தான் இருக்கும்.. போட சொல்லு நான் ரெடி ஆகுறேன்" என்று கூறி அவள் அறைக்குள் அனன்யா செல்ல, ஒரு பெருமூச்சுடன் ஆதிரா பரத்திடம் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.