(Reading time: 8 - 16 minutes)

"து எனக்கு சுத்தமா பிடிக்கலை.அதனால தான் சிவன்யா அம்மா சாப்பிடுற சாப்பாட்டில விஷத்தை கலந்து நான் அவங்களை கொன்னேன்!"-அசோக் திடுக்கிட்டு போனான்.

"அடுத்ததா அவ தான்!இந்த விஷயம் என் அப்பாக்கு தெரிந்து,மொத்த சொத்தையும் அவ பேர்ல மாற்றி எழுதிட்டு,நெஞ்சு வலியில அவரும் போயிட்டார்!சரி,அடுத்து அவ சொத்து எல்லாம் நமக்கு வரணுமே,அதனால,ஒரு கையெழுத்துக்காக தான் இத்தனை வருஷமா அவளை பாசமா பார்த்துட்டு வரேன்!"-அசோக்கிற்கு மனம் முழுதும் பதைபதைத்தது.

"அதனால,அவ உனக்கு வேணாம்!எப்படியும் கொஞ்ச நாள்ல அவளும் சாக போறா!"-அதற்கு மேலும் கேட்க பொறுமை இல்லாதவன்,அவனது சட்டையை பற்றினான்.

"டேய்!நீ எல்லாம் மனுஷனா?பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வியா?ச்சீ..!நான் உயிரோட இருக்கிறவரை அவ நிழலைக்கூட உன்னால தொட முடியாது!"

"டேய்!கையை எடுடா!என்ன ரத்தம் கொதிக்குதா?"

"இன்னும் ஒரு வார்த்தை பேசாத!உனக்கு என்ன அவ சொத்து தானே வேணும்?எல்லாத்தையும் வாங்கிக்கோ!ஒரு பத்து பைசா விடாம எல்லாத்தையும் வாங்கிக்கோ!ஆனா,எனக்கு என் மதி வேணும்.அவளை மட்டும் எனக்கு கொடு!அவளை மகாராணி மாதிரி வாழ வைக்க எனக்கு தெரியும்!"-யோசிக்காமல் கூறினான் அசோக்.

மீண்டும் அமைதி!!

"எனக்கு வேண்டியது அவ பணம் தான்!அவ இல்லை..அந்த ப்ராப்பர்ட்ஸ் எல்லாத்தையும் என் பேர்ல மாற்றிட்டு நீ அவளை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ நான் கேட்டுக்க மாட்டேன்."

"ச்சே..!உன்னை போய் நம்பினேனே!வெளியே போடா!"

"ம்..காதல் கண்ணை மறைக்குதா?நீ எப்படி அவளால சந்தோஷமா இருக்கன்னு நானும் பார்க்கிறேன்!"-என்றவன் தனது காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அசோக்கின் மனதில் உச்சக்கட்ட வெறுப்பு.கேவலம் பணத்திற்காகவா இப்படி ஒரு நாடகம்?

சிவன்யாவின் எதிர்காலத்தை நினைத்து கவலைகள் மேலோங்கின.அவளால் நிச்சயம் மகேஷின் மாற்றத்தை ஏற்க முடியாதே!எது என்ன நடக்குமோ,அவளுக்கு எந்த துன்பத்தையும் இனி தர கூடாது!என்ற முடிவை எடுத்தான் அசோக்.

நாட்கள் நகர்ந்தன...

ஒருநாள்...

எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவனின் கைப்பேசி அலறியது.

"ஹலோ!"

"நான் மகேஷ் பேசுறேன்!"

"என்ன வேணும்?"

"வந்து உன் சிவன்யாவை கூட்டிட்டு போ!"-அவன் கூறியது அவனை திடுக்கிட வைத்தது.

"என்ன?"

"அன்னிக்கு பெரிய வசனம் எல்லாம் பேசினல்ல!டாக்குமண்ட்ல சைன் பண்ண சொல்லி,உன் மகாராணியை கூட்டிட்டு போ!"-அசோக் உச்சக்கட்ட வெறுப்பை அடைந்தான்.

"எங்கே வரணும்?"

"அதான்..உன் சிவன்யாக்காக கட்டி வைத்திருக்கியே மாட மாளிகை அங்கே தான் வா!"-அவன் சற்றும் தாமதிக்கவில்லை இணைப்பைத் துண்டித்து அங்கிருந்து கிளம்பினான்.

அவன் மனதில் சிறு ஆனந்தமும் தோன்றியது!!இனி கவலை இல்லை!அவள் எனதாகி விடுவாள் என்ற ஆனந்தம் அது!!

அரை மணி நேரத்தில் அவனது சிவன்யாவிற்காக உருவாக்கப்பட்ட இல்லத்திற்கு வந்தான் அவன்.

"மதி!"

".........."

"மதி!எங்கேம்மா இருக்க?"

"வாங்க அசோக் சார்!"-உரக்க கத்தினான் மகேஷ்.

"மதி எங்கே?"

"பொறுமை!ஏன் பறக்குற?அப்படி என்ன அவளை உடனே கூட்டிட்டு போகணுமா?எதாவது அவசரமா?"

"ச்சீ..வாயை மூடு!என் மதி எங்கே?"

"அவசரப்படாதேடா!நான் சொன்னா செய்வேன்."-என்றவன் அவன் எதிரே வந்து நின்றான்.

"என் மதி எங்கே?"

"நீ ஏன் அவ மேலே இவ்வளவு பைத்தியமா இருக்க?"

"ஏன்னா,நான் அவளை காதலிக்கிறேன்!அவளைவிட முக்கியம் எனக்கு இந்த உலகத்துல எதுவுமே இல்லை!"

"ப்ச்..!அப்படின்னா,அவ அந்த ரூம்ல இருக்கா பாரு!"

"என்ன?"

"அந்த ரூம்ல இருக்காப் பாரு!போய் எடுத்துக்கோ!"-அசோக் அவனது சட்டையை இறுகப் பற்றினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.