(Reading time: 10 - 20 minutes)

ம்ம சுராவோட ஹெட் கேப்டன் ரெண்டு பேர், மிதுன் சார் மூணு பேரும் சேர்ந்து NGO ஒன்னு நடத்திட்டு இருக்காங்க.. அது நாம படிக்கும்போது பேசிட்டு இருப்போமே அதே மாதிரி இருந்துச்சு. அதான் நானும் அவங்க கூட சேர்ந்துட்டேன்.”

“என்ன NGO ..?”

“அதான்பா.. தற்காப்பு கலை எல்லோருக்கும் கட்டாயம் தெரிஞ்சு இருக்கணும்னு பேசினோமே.. அதுக்கு முதல் படியா இவங்க ஒவ்வொரு காலேஜ் போய் volunteer ஆ கத்து கொடுக்கறாங்க.. நிறைய பேர் வீட்லே சம்மதிக்க மாட்டங்க இல்லியா.. அதனாலே காலேஜ் லே சனி, ஞாயிறு கிழமையில் போய் சொல்லிக் கொடுக்கறாங்க.. அதோட சின்ன சின்ன கிராமங்களில் எல்லாம் போய் அங்கே உள்ள ஊர் பெரியவங்க கிட்ட பேசி அங்கே உள்ள குளம், ஏரி எல்லாம் தூர் வார முயற்சி பண்ணிட்டு இருக்காங்க.. அதுக்கு அவங்க அங்கே உள்ள கிராமத்து பசங்களையே எடுத்து கொள்வதால் , தூர் வாரும் வேலை முடிஞ்சதும் ஒரு குழு மாதிரி உருவாக்கி அவங்களையே maintain பண்ண சொல்றாங்க.. இதுனாலே ஊர்லே யாரவது நீர்நிலைகளை மாசுபடுத்தினால் இவங்க பைன் போடுறது மட்டும் இல்லாமல், மண் திருடினால் இவங்களே பிடிச்சு போலீஸ் லே ஒப்படைக்கிறாங்க .

இந்த வேலை எல்லாம் கேட்டு நானும் இப்போ இவங்க கூட ஊர் ஊரா போயிட்டு இருக்கேன்” என்று முடித்தான்..

“ஒ.. ஏண்டா என்னையும் கூட்டிகிட்டு போலாம் லே.. “

“வெளியூர் எல்லாம் வேண்டாம் டி.. “

“ஏண்டா.. மத்ததுக்கு மட்டும் வாய் கிழிக்கிற.. நானும் தானே கராத்தே எல்லாம் கத்துகிட்டு இருக்கேன் .. அப்புறம் ஏன் நான் மட்டும் வரக் கூடாது.”

“ஹேய் லூசு. .அப்படி இல்லை மா.. நாங்க போற இடத்துலே குளிக்கிறதுக்கு இடம் இருக்காது.. ஏன் பல இடத்துலே பாத்ரூம் கூட இருக்காது.. அங்கே எல்லாம் ஜென்ட்ஸ் நாங்க எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணுவோம்.. லேடீஸ் ஆல முடியாது டா.. அதுனாலே தான் avoid பண்றோம்..”

மூஞ்சியை சுருக்கியவள் “அப்போ நீ மட்டும் சீன் போட்டு சைட் அடிக்க போறேன்னு சொல்லு.. ஆல்போல் வேல போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே ன்னு பாட்டு பாடி எத்தனை பேர் கிட்ட கடலை போட்ட.. ? “

“அடிங்க.. நான் எல்லாம் அப்படி இல்ல... போன வேலைய மட்டும் தான் பார்ப்பேன்..”

“ஹா..ஹா.. நீ போறதே அந்த வேலைக்கு தானே” என்று சிரித்தாள்..

இவர்கள் இருவரின் கலகலப்பை பார்த்தவன் தன்னவள் தன்னோடு எப்போது இப்படி பேசுவாள் என்று ஏங்கினான்..

இவர்கள் சண்டை ஒரு வழியாக முடிந்த பின் ,

“சரி சரி.. கீமா.. என்னை கொத்து பரோட்டா போடாத.. சார் கிட்ட பேசி பார்க்கலாம்.. எதாவது வேலையில் உன்னையும் சேர்க்க முடியுமான்னு “  என்றபடி திரும்பி “சார் .. நீங்களே சொல்லுங்க.. “

அப்போது மகிமாவும் “சாரி சார் .. உங்களை போரடிச்சுட்டோமா..?” என்று மன்னிப்பு கேட்டாள்.

“ஹேய்.. இது எல்லாம் புதுசா என்ன ? “ எனவும்

“என்ன சொல்றீங்க சார்” என்றார்கள் இருவரும்..

சுதாரித்த மிதுன் “உங்களை மாதிரி friends பார்க்க நல்ல இருக்குன்னு சொன்னேன்.. மகிமா நீங்க கவலை படாதீங்க.. உங்களுக்கும் ஒரு வேலை தரேன்.. நீங்க உங்க ப்ரீ டைம் லே வந்து எங்க NGO ஆபீஸ் லே இருக்கிற சில வேலைகளில் ஹெல்ப் பண்ணுங்க.. நெக்ஸ்ட் வீக் வாங்க.. “ என்று ஆபீஸ் அட்ரஸ் கொடுத்தான் மிதுன்.

மிதுனின் மனதில் “சப்பா.. என்ன வேலைக்காக வருணை friend பிடிச்சோமோ .. இன்னிக்குதான் அந்த வேலை ஆரம்பிச்சு இருக்கு.. இப்போவே கண்ணை கட்டுதே.. இன்னும் இவ கிட்ட எப்போ லவ் சொல்லி ... எப்போ அவளை ஒத்துக்க வைக்கிறது என்று மானசீகமாக தலையில் கை வைத்தான்.

மழை பொழியும்

Episode 15

Episode 17

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.