(Reading time: 10 - 20 minutes)

16. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ர்ஜுன் & கோ வின் பிளான் சொதப்பலில் முடிந்ததை அடுத்து, அவரவர்கள் தங்கள் வேலைக்கு திரும்பி இருந்தார்கள்.

சுபத்ராவின் குடியரசு தின பங்களிப்புக்கு பின் அந்த ட்ரைனிங் அகாடமியில் அவள் மிகவும் பிரபலம் ஆகி விட்டாள். அங்கிருந்த higher ஆபீசர் எல்லோருக்கும் அவளை தெரிந்து இருந்தது. அதனால் போகும் போது வரும் போது பார்த்தால் நின்று அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டே சென்றனர்.

சாதராணமாக பேசினாலே அரை மணி நேரம் மொக்கை போடுபவள் சுறா.. இப்போ அவளுக்கு என்று ஒரு இமேஜ் உருவான பின்பு இன்னும் ஜாஸ்தி ஆகி விட்டது அவள் ரம்பம்.. கூடவே இருக்கும் நிஷாவின் பாடுதான் திண்டாட்டம்..

இதனால் அர்ஜூனால் சுபத்ராவிடம் அதிகம் பேச முடிவதில்லை. அர்ஜுன் சுராவிடம் கடலை போடும்போது ராகுல் நிஷாவிடம் போடுவான். இப்போ இருவரையும் தனி தனியாக பார்க்க முடியாமல் இவர்களின் நிலைமை கொஞ்சம் திண்டாட்டமாக இருந்தது.

இதற்கு இடையில் இவர்கள் பயிற்சி காலம் முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால் , கடுமையான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.. disaster எனப்படும் பேரிடர் சமயங்களில் ராணுவ வீரர்களின் பணி, தேர்தல் நேரத்தில் செயல்படும் முறை, எமேர்ஜென்சி என்று சொல்லபடும் அவசர காலத்தில் செய்ய வேண்டியது .. எல்லாம் பயிற்சியாக கொடுக்கப்பட்டது. இவை தவிர எல்லை பாதுகாப்பு படையில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் எல்லாமே கற்றுக் கொண்டு இருந்தனர்.

இதனால் ட்ரைனிங் ஹெட்டான அர்ஜுன், ராகுல் இவர்களும் பிஸியாக இருந்தனர். பார்க்கும் கொஞ்ச நேரத்தில் பொதுவான விசாரிப்புகளோடு முடிந்தது.

இவர்கள் ட்ரைனிங் இங்கே நடந்து கொண்டு இருக்க, அங்கே சென்னையில் மிதுன் கொஞ்சம் கொஞ்சமாக தன் திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்து இருந்தான்.

சுபத்ரா, வருண், மகிமா மூவருமே ஒரே தெரு என்று இல்லா விட்டாலும் ஒரே ஏரியாவில் தான் வசித்து வந்தனர்.  ஸ்கூல் பஸ் ஆரம்பித்து காலேஜ் பஸ் வரை மூவரும் ஒன்று போல் சென்று வருவார்கள்.

அதில் இப்போ சுபத்ரா இல்லாதது வருண், மகிமா இருவருக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. bachelor டிகிரி வரைக்கும் மூவரும் ஒரே பிரிவு தான். சுபத்ரா ட்ரைனிங் சென்ற பின் இவர்கள் இருவரும் மேல்படிப்பில் சேர்ந்து இருந்தனர்.

வருண் அட்வேர்டிசிங் சம்பந்தாமாக படிக்க, மகிமாவோ அனிமேஷன் சம்பந்தப்பட்ட படிப்பில் சேர்ந்து இருந்தாள். வேறு வேறு காலேஜ் .. இதனால் இருவரும் பார்த்துக் கொள்வதே சண்டே மட்டும் தான் என்று ஆகி விட்டது.

முதலில் எல்லாம் இவர்களின் நண்பர்கள் எல்லோருமே மூன்று பேருக்கும் நண்பர்களாக தான் இருப்பார்கள். இதனால் எங்கே சுற்றுவது என்றாலும் மூன்று பேரும் ஒன்றாக இருப்பார்கள்.

பெண்கள் மட்டுமாக ஷாப்பிங்கோ என்றால் சுராவும், கீமாவும் சேர்ந்து செல்வார்கள். வருண் பெரும்பாலும் இவர்களோடு சென்று விட்டு , தன் வேலையை முடித்துக் கொண்டு பிறகு மூவரும் ஒன்றாக திரும்புவார்கள்.

ஆனால் இப்போது மூவருமே தனி தனியாக சென்ற பின், மகிமாதான் மிகவும் தவித்து விட்டாள். காலேஜ் இல் அவளுக்கு பெரிய அளவில் friends கிடையாது. இளநிலை படிப்பு போல் இல்லாமல் இங்கே உள்ள எல்லோருமே சற்று maturity உடன் நடந்து கொள்பவர்கள். படிப்பை முக்கியமாக கருதுபவர்கள். மிச்சம் இருக்கும் கொஞ்ச பேரும் படிப்பில் குறைவாக இருந்தாலும், தங்களுக்கு என பாய் friend ஏற்படுத்திக் கொண்டோ, அல்லது நிச்சயம் முடிந்து வருங்காலத்துக்காக காத்து இருப்பவர்கள். அதனால் மகிமா ஒரு மாதிரி reserved ஆகி விட்டாள்.

இந்த நிலையில் வருணை பார்த்து கிட்ட தட்ட மூன்று மாதத்திற்கு மேல் சென்று இருந்தது மகிமாவிற்கு. அந்த குடியரசு தினத்திற்கு பின் அவள் இரண்டு அல்லது மூன்று முறை சுறாவின் வீட்டில் வைத்து பார்த்தாள் அவ்வளவுதான்.

சுறா வீட்டிற்கு கூட அவன் எப்போது வந்து செல்கிறான் என்று தெரியாத அளவிற்கு பிஸியாக இருந்தான்.

அந்த சண்டே அவளுக்கு மிகவும் போரடிக்க , பீனிக்ஸ் மால் சென்று இருந்தாள். அங்கே உணவகம் வாயிலில் வைத்து வருணை பார்த்தவள் நேராக அவனிடம் சென்றாள். பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்க வில்லை. ஓங்கி வருண் முதுகில் அறைந்தாள்.

யாருடா அது என்று திரும்பி பார்த்த வருண்

“ஹேய். .கீமா பிசாசு .. நீதானா? எதுக்குடி இப்போ அடிச்ச ?”

“போடா.. எருமை... உன்னை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு? நீதான் நிக்கறியா இல்ல உன் ஆவியா ன்னு சந்தேகமா இருந்தது.. அதான் அடிச்சு confirm பண்ணிகிட்டேன்..”

“அடியா இது.. ? இடி மாதிரி இருந்தது .. “

“நல்லா வேணும்.. ஏண்டா.. இங்கே என்ன பண்ணிட்டு இருக்க.. ? நான் கூட பயுள்ள ரொம்ப படிக்குது போலே ன்னு நினச்சேன். நீ என்னடான்னா மால்லே சுத்திகிட்டு இருக்க? மால் தான் வரன்னா என்னையும் கூட்டிகிட்டு வந்துருக்கலாம் லே.. “

“இல்ல கீமா.. காலையிலே வேற வேலையா போய்ட்டோம்.. மதியம் சாப்பிடலை.. வேலை முடிஞ்சதும் இங்கே வந்துட்டோம்..” என்று அவனோடு சேர்த்து இன்னொருவரையும் சொல்ல,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.