(Reading time: 4 - 8 minutes)

30. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ங்கிராட்ஸ் சார்…. உங்களுக்கு பொண்ணு பொறந்திருக்கா… அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்குறாங்க… நீங்க போய் பாருங்க…”

நர்ஸ் புன்னகையுடன் சொல்லிவிட்டு செல்ல,

“அய்யோ…. கடவுளே… இதென்ன எங்க திலீப் தம்பிக்கு வந்த சோதனை?... இந்த வீட்டுக்கு வந்தாலும் வந்தா மகராசி, இப்படியா எங்க எல்லாரோட தலையிலயும் இடியை தூக்கி போடணும்?...”

நொந்து கொள்வது போல் விசாலம் புலம்ப, திலீப் அப்படியே நின்றுவிட்டான் அமைதியாக எதுவுமே பேசாது…

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த நர்ஸ், “சார்… என்ன உங்க பொண்ணை பார்த்தீங்களா?.. அவ்வளோ அழகு தெரியுமா உங்க குழந்தை?... அப்படியே உங்க ஜாடை தான்….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சந்தோஷமாக சொல்லிவிட்டு செல்ல, ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றினாள் விசாலம் தன் வார்த்தைகளால்…

“அட ஆண்டவா!!!.... அப்படியே தம்பி ஜாடைன்னு சொல்லிட்டு போயிட்டாளே… பையனா மட்டும் இருந்திருந்தா, இந்நேரம் அன்னைக்கு நிறைஞ்ச சபையில பேசினவங்க வாய்க்கெல்லாம் பதிலடி கொடுத்த மாதிரி இருந்திருக்குமே… ஹ்ம்ம்… எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணுமே… என்ன செய்ய?... விதி இப்படி இருந்தா நாமதான் என்ன செய்ய முடியும்?...”

தன் ஆட்டத்தை கணக்கச்சிதமாக அவள் தொடர்ந்துவிட்டு, “இப்படியே நின்னுட்டிருந்து என்ன பண்ணப் போறீங்க தம்பி?... போய் பாருங்க… என்ன இருந்தாலும் உங்க ரத்தம் இல்லையா?... வேற என்ன செய்ய முடியும்?... போங்க…” என பூடகமாய் சொல்ல, அவன் மெல்ல சரயூவின் அறைக்குள் நுழைந்தான்…

சரயூவின் அருகில் படுத்து கை, கால்களை ஆட்டிக்கொண்டிருந்த தன் மகளை பார்க்கையில் அவனுக்கு உள்ளிருந்து ஏதோ ஒன்று பொங்க, மகளை தன் கைகளில் அள்ளி எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டான்…

அவன் தூக்கியதும், கை, கால்களை அசைத்து அவனை அவன் மகளும் வரவேற்க, மெல்ல மகளின் உச்சியில் இதழ் பதித்து, சிரித்துக்கொண்டான் திலீப்….

பின், மகளைப் பார்க்க பார்க்க, தன்னைப் பார்ப்பது போலவே இருக்க, தொட்டிலில் அந்த பிஞ்சை படுக்க வைத்துவிட்டு, சரயூவின் அருகில் வர, அவள் இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை…

“சந்தோஷப்பட வேண்டிய நேரத்துல, மனசு ஏனோ அந்த சந்தோஷத்தை முழுமையா ஏத்துக்க மாட்டிக்குது சரயூ… என்னமோ கஷ்டமா இருக்குற மாதிரி இருக்குடி…. எழுந்திருடி… எங்கிட்ட பேசுடி… நீ பேசினா தாண்டி நான் சரியாவேன்… ப்ளீஸ் எழுந்திரு சரயூ….”

மனைவியின் கைப்பிடித்து பேசியவன், அவளருகிலேயே அமர்ந்திருந்து அவளையேப் பார்த்திருக்க, ஆழ்ந்த மயக்க நிலையில் இருந்தாள் சரயூ…

அறையை விட்டு வெளியே வந்த திலீப்பிடம், “சரயூ நல்லா இருக்குறாளா தம்பி?.... மயக்கம் தெளிஞ்சிட்டா?...” என விசாலம் கேட்க,

“இல்ல இன்னும் மயக்கமா தான் இருக்குறா….” என்றான் அவன்…

“அதுவும் நல்லதுக்குத்தான்… உங்க முகத்தைப் பார்த்தாலே கஷ்டப்படுவா… உங்க முகமே வாடிப்போய் இருக்கு… அதப் பார்த்து அவ கஷ்டப்படுறதுக்கு அவ மயக்கத்துலயே இருக்குறது எவ்வளவோ நல்லது தான்.. ஹ்ம்ம்… சரி ,இனி பேசிதான் என்ன ஆகப்போகுது… அத விடுங்க தம்பி… நீங்க பெரியவருக்கு போன் போட்டு முதல்ல தகவலை சொல்லுங்க…”

அவன் அமைதியாக வெளியே வந்து தகப்பனிடம் விஷயத்தை தெரிவித்துவிட்டு, திரும்புகையில், அன்று அவனை அவமானப்படுத்தியவர்களில் ஒருவர் நிற்க, அவன் எதுவும் பேசாமல் அவரைக் கடந்து செல்கையில்,

“என்னப்பா திலீப்?... பார்த்துட்டு பேசாம போற?... சரயூவை இங்கதான் சேர்த்திருக்கன்னு சொன்னாங்க…?... அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…”

“ம்ம்….”

“என்னப்பா ஒரு சுரத்தே இல்லாம பதில் சொல்லுற?... குழந்தை பொறந்துட்டா?... என்ன குழந்தைப்பா?...”

“பெண் குழந்தை…”

“சரியாப்போச்சு போ… இந்த தடவையும் உனக்கு பொண்ணு தான் பொறந்திருக்கா?... அதுசரி பணம், காசு இருந்து என்ன பிரயோஜனம்?... அது அதுக்குன்னு ஒரு கொடுப்பினை வேணும்ல… அதோட பெத்துக்கவும் வழி இருக்கணுமே… சரி விடு… இனி உன்னை குறை சொல்லி என்ன ஆகப்போகுது?... உனக்கு குறை இருக்குன்னு தான் அன்னைக்கே நிரூபணம் ஆகிடுச்சே…”

அவர் சொல்லி முடித்ததும், சட்டென அவரின் சட்டையைப் பிடித்தான் திலீப்….

“இதுக்கு மேல ஒருவார்த்தை பேசினீங்க… மரியாதை கெட்டுடும் சொல்லிட்டேன்….”

அவன் கோபமாக கத்த,

“உண்மையை சொன்னா உனக்கு கோபம் வேற வருதா?... அதான் நீயே ஊருக்கு நிரூபிச்சிட்டியே, உனக்கு ஆண் குழந்தை பொறக்காதுன்னு… இதுல உனக்கு வெட்டி கோபம் வேற ஒரு கேடு?... ஒரு ஆண் வாரிசு பெத்துக்க வழி இல்ல… இதுல என் சட்டையை பிடிக்க வந்துட்டான்… அட சே எடு கையை….”

நக்கலாக சொல்லிவிட்டு, அவனின் கையை தட்டிவிட்டுவிட்டு அந்த ஆள் சென்றுவிட, திலீப்பை சுற்றிக் கூடியிருந்த அந்த கூட்டத்தின் முன்பு அவன் தலை கவிழ்ந்து நின்றான் மனதில் ஏற்பட்டிருந்த ஆறாத வடுவுடன்…

சின்ன அப்டேட்டிற்கு மன்னித்துவிடவும்… அடுத்த வாரம் முழுமையான பெரிய எபிசோட் கொடுக்கிறேன்…

ஜானவி-கார்த்திக்கையும் அடுத்த வார கதையில் பார்க்கலாம்…

நன்றி….

தொடரும்

Episode # 29

Episode # 31

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.