(Reading time: 10 - 19 minutes)

"ன்பா இப்படியெல்லாம் பேசி எங்களை கஷ்டப்படுத்துறீங்க?"

நாராயணன் சாப்பாட்டினை பாதியிலேயே நிறுத்தி கைகழுவி விட்டு எழுந்தார்.

"என்னப்பா முழுசா சாப்பிடாம எழுந்துட்டீங்க?" என்று கவலையோடு கேட்டாள் மேகலா.

"போதும்மா. நீங்க சாப்பிடுங்க"

தன் தந்தை நடந்து கொள்வது மேகலாவுக்கு வருத்தத்தை தந்தாலும் அவரைத் திருத்தமுடியாது என்று அவளே ஆறுதலை கூறிக்கொண்டாள். நீண்ட மூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வசந்தின் அறையை நோக்கிச் சென்று கதவைத் தட்டினாள்.

"வசந்த்! சாப்பிட வா!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"எனக்கு தான் பசிக்கலைனு சொன்னேனே அக்கா"

"அப்பா சாப்டுட்டு போயாச்சு"

அடுத்த நொடி கதவு திறக்கப்பட்டது. "இன்னைக்கு என்ன செஞ்சிருக்க?"

"சப்பாத்தி"

"தினமும் இதானா"

"அப்போ நீ சாப்பிடாத. உன் வேலையை பாரு"

"இருக்க பசிக்கு சப்பாத்தி மாவையே சாப்பிடலாம் போல இருக்கு" என்று கூறிக்கொண்டே மாடிப்படியிலிருந்து வேகமாக கீழிறங்கிய வசந்த், தன் தந்தையின் பூட்டிய அறையை ஒரு முறை நோட்டமிட்டுக்கொண்டான்.

"சீக்கிரம் சீக்கிரம்" என்று மேகலாவை அவசரப்படுத்திய வசந்த் டைனிங் சேரில் உட்கார்ந்தான்.

மேகலா உணவை பரிமாறினாள். வசந்த் வேகமாய் விழுங்கினான்.

"மெதுவா சாப்பிடுடா. அப்போவே சாப்ட்ருக்கலாம்ல? என்ன வீராப்பு வேண்டிகிடக்கு?"

வசந்த் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தான். "உனக்கே தெரியும்ல அக்கா, நாங்க ரெண்டு பேரும் ஒரு இடத்துல ஒண்ணா இருந்தா அங்க உலக யுத்தமே நடக்கும். அது மட்டும் இல்லாம நாளைக்கு என் கனவு நிறைவேத்திக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு"

"என்னடா சொல்ற?"

"ஆமா அக்கா, ஸ்பான்சர் ஒருத்தர பார்க்க போறேன். ஜெசிகா தான் ஏற்பாடு பண்ணினா. அவரை மட்டும் நான் இம்ப்ரெஸ் பண்ணிட்டேன்னா அப்புறம் நாராயணன் எனக்கு குடுக்குற மரியாதையை பாரு. தங்கத்தட்டுல வச்சி என்ன தாங்குவாரு"

"அப்படியே போட்டேன்னா பாரு, அப்பாவை மரியாதை இல்லாம பேரு சொல்லி கூப்பிடுற, நிலா! நீயும் வாடி சாப்பிடலாம். அப்படியே அக்காவையும் கூட்டிட்டு வா"

அமேலியாவை சாப்பிட வருமாறு நிலா அழைத்தாள். சமையலறையில் ஒளிந்திருந்த அமேலியா, தான் பிறகு சாப்பிடுவதாய் சைகை மொழியில் கூறினாள்.

"அக்காவுக்கு பசிக்கலையாம் அம்மா" என்று கூறியபடி நிலா சாப்பிடுவதற்கு தயாரானாள். அவளுக்கு சாப்பாடு ஊட்டினாள் மேகலா.

"ஏன் உன் பொண்ணுக்கு தானாவே சாப்பிட முடியலையாமா?"

"அப்படியே பழகிட்டாடா"

"அவ ஏன் சாப்பிட வரலை?"

"புது இடம்ல, பாவம், கூச்சப்படுறா. அது மட்டுமில்லாம, நீ வேற கைய புடிச்சி சேட்டை பண்ணிட்டியா, அதான் பயப்படுறானு நினைக்கிறேன்"

"அவளா பயப்படுறா? வரையுரென்ற பேருல என் முகத்தை அலங்கோலம் பண்ணிருக்கா"

"நல்லாதான வரைஞ்சிருக்கா"

"அவளுக்கு சப்போர்ட்டா"

அந்நேரத்தில் நாராயணன் திடீரென கதவைத் திறந்தார். வசந்த் அதிர்ந்தான்.  நாராயணன் வசந்தைப் பார்த்தார். வசந்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"நான் தான் சொல்றேன்ல சாப்பாடு வேணாம்னு. எதுக்கு என்னை வற்புறுத்தி சாப்பிட வைக்குற?" என்று மேகலாவிடம் பொய்யான கோபத்தோடு கத்தினான்.

மேகலா நாராயணனை நோக்கினாள். 

"ஏன்மா, சார வற்புறுத்தி சாப்பிட வைக்குற? அவரு ரோஷமுள்ளவரு. திரும்ப அவர் வற்புறுத்துறதுக்கு முன்னாடி சாம்பார் எடுத்து ஊத்து" என்று கூறிக்கொண்டே சோபாவில் இருந்த தனது மூக்குக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு மீண்டும் தனது அறைக்கே சென்றுவிட்டார்.

மேகலாவும் நிலாவும் சிரித்தார்கள். அவர்கள் சிரித்தாலும் பரவாயில்லை, அவர்கள் சிரிப்பதைக் கண்டு காரணமே இல்லாமல் தன்னையும் அறியாமல் சிரித்த அமேலியாவைக் கண்டு தான் வசந்திற்கு கோபம் வந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

மேகலாவும் நிலாவும் கூட சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். "நிலா, அக்காவை சாப்பிட சொல்லு" என்று மீதமிருக்கும் தன் வேலையைப் பார்க்க சென்று விட்டாள் மேகலா.

சாப்பிட்டு முடித்த நிலா, சிறிது நேரம் தொலைக்காட்சியில் கேம் ஆடினாள். பிறகு, தூக்கம் வரவே படுக்கைக்குச் சென்று விட்டாள். வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சமையலறையில் இருந்த அமேலியா தன்னை அறியாமல் அங்கேயே உறங்கினாள். 

வசந்த் தனது அறையை விட்டு மெல்ல வெளியே வந்தான். பூனை போல் மாடியிலிருந்து இறங்கியவன், சுற்றும் முற்றும் ஒருமுறை நோட்டமிட்டுக்கொண்டான். டைனிங் டேபிளை நோக்கி வந்த அவன், அமேலியாவிற்காக இருந்த உணவை எடுத்துக்கொண்டு வேகமாய் தன் அறையை நோக்கி ஓடி மறைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.