(Reading time: 18 - 35 minutes)

கீதனுக்கு வினியின் மீது அக்கறை இல்லையா? எத்தனை தவறான குற்றச்சாட்டு இது? சற்று முன்பு நான் விஷ்வானிகாவைப் பற்றி சொன்னதும் அபிக்கு முன்னதாக ஓடி வந்தவன் சகி தானே? ஒரு கணமும் தாமதிக்காமல், தன்னுடன் பிறந்தவளை தூக்கிக் கொண்டு காரில் கிடத்தியவன், ஏதோ ஒரு வேகத்தில் காரை ஓட்ட ஆரம்பித்ததும், சில நொடிகள் கூட காரை ஓட்டவில்லையே! சட்டென காரை நிறுத்தியவன் அபியிடம், அண்ணா எனக்கு கை நடுங்குது.. நீங்களே ஓட்டுங்க! என்று சொன்னதோடு நிறுத்தாமல் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு அவள் பாதங்களை தன் மடியில் வைத்துக் கொண்டு கண்ணீர் மல்கினானே! அது எப்படி பொய்யாகிடும்?” என்று அவள் மனமே கேள்வி கணைகளை  தொடுத்தன.

இன்னொரு புறம், “ அந்த அளவிற்கு அன்பு வைத்திருப்பவன் ஏன் இப்போது நடிக்க வேண்டும்.. ஒரு பக்கம் பனியாய் உருகி, மறுபக்கம் பகலவனாய் சுட்டெரிக்கிறானே! இரண்டில் எது நிஜம்?” என்றது.

“ எது எப்படியோ, என் கண் முன்னாடி கீதனுக்கு எதுவும் நடக்க கூடாது!” என்று முடிவெடுத்துக் கொண்டு அவள் நிமிர்ந்தபோது அங்கு ரௌத்திரமான முகபாவத்துடன் சகியிடன் ஏதோ விவாதித்து கொண்டிருந்தார் வேணு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ ஒரு நிமிஷம் சார்!” இருவரின் பேச்சையும் குறிக்கிட்டு ஒலித்திருந்தது மைத்ரேயியின் குரல். தனக்காக அவள் இடையிட்டு பேசுவதை அப்போதும் கூட சகியின் மனம் ரசிக்காமல் தவறவிடவில்லை.. அதே நேரம், அவளை இந்த பேச்சினில் இழுக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை.

“ மாயா, இட்ஸ் ஓகே .. நீங்க எதுவும் சொல்ல வேணாம் “ என்றான் அவன். அவனை தீர்க்கமாய் பார்த்தவள்,

“ நானும் உங்க ரெண்டு பேருக்கிட்டயும் அதைதான் சொல்லிக்க விரும்புறேன்!” என்றாள். இரு ஆண்களுமே புரியாமல் விழித்தனர். அவர்கள் மட்டுமில்லை.. சகியின் மொத்த குடும்பத்தின் பார்வையுமே இப்போது மைத்ரேயியின் மீதுதான்.

“அதாவது, நான் உங்க வீட்டுக்கு மூணாவது மனுஷி தான்.. தயவு செஞ்சு என் முன்னாடி எதுவும் பேசாதிங்கன்னு சொல்ல வரேன்!” என்றாள் மைத்ரேயி.

“ என் கீதன் அனைவரின் முன்னிலையிலும் கேள்வி கேட்க்கப்படுவது எனக்கு சிரமமாக இருக்கிறது|” என்று நேரடியாய் சொல்ல முடியாதவள், மறைமுகமாய் பேசினாள்.

“மன்னிச்சிருங்க அங்கிள். அங்கிள் மட்டுமில்லை, நீங்க எல்லாருமே என்னை மன்னிக்கனும்.. பெரியவங்க பேசும்போது, இடைப்புகுந்து பேசும் பழக்கம் எனக்கு இல்லை.. நேற்று எனக்கு மனிதாபிமானத்தோடு சகிதீபன்  உதவினார். அவரோடு சேர்ந்து நீங்களும் உங்க வீட்டில் இடம் கொடுத்தீங்க. அதே மாதிரி இன்னைக்கு ஒரு துன்பம் வந்தபோது, நானும்  உங்க பக்கம் நின்னதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்.. ஆனாலும் என் இடத்தை நான் உங்க எல்லாருக்கும் நியாபகப்படுத்தனும்னு நினைக்கிறேன்.. தயவு செஞ்சு என்னை வெச்சுக்கிட்டு இதையெல்லாம் பேச வேணாமே” என்று கை கூப்பினாள் மைத்ரேயி. மேலும், “ நான் இப்போ கெளம்பறேன்” என்று கூறி அங்கிருந்து விடைபெற எத்தனித்தாள் மைத்ரேயி.

மறந்தும் கூட அவள் விஷ்வானிகாவின் பக்கம் திரும்பவே இல்லை. மற்றவர்களுக்கும் அவளது முகத்தை பார்க்க சங்கோஜமாக இருந்தது. அருண் தாத்தா தான் கொஞ்சம் சுதாரித்து கொண்டு,

“ உன்னுடைய தெளிவான பேச்சு, நீ வளர்க்கப்பட்ட விதத்தை சுட்டி காட்டுதும்மா.. நீ சொல்லுற மாதிரியே ஆகட்டும்.. ஆனா ஒன்னும்மா, எல்லாமே  சரியாகிடும், அப்போ நீ கண்டிப்பா எங்கள் வீட்டுக்கு வரணும்!” என்றார்.

புன்னகைத்தாள் மைத்ரேயி. அவளுக்கு வேறென்ன சொல்லவதென்று தெரியவில்லை. சின்ன தலையசைப்புடன் அவள் வெளியேறிட முற்பட, “நானே உங்களை ட்ராப் பண்ணுறேன்”என்று அவளை அழைத்து சென்றான் சகிதீபன். அப்போது கிடைத்த சின்ன தனிமையில் தான் மைத்ரேயி ஆதங்கம் நிறைந்த குரலில், சகியிடம் அப்படி பேசியிருந்தாள்.

“இனிமே நாம சந்திக்க வேணாம்” என்று அவள் சொன்னதின் அர்த்தம், இனி இந்த  மாதிரி கசப்பான சூழ்நிலையில் சந்திக்க வேண்டாம் என்று நினைத்து தான் ! மேலும் மனதிற்குள், “அல்லது என் கனவை நனவாக்கி என்னை உன்னவளாய் மாற்றிவிடு கீதன்!” என்று உரைத்திருந்தாள் அவள். அதை மட்டும் அவள் வாய்திறந்து சொல்லியிருந்தாள் நடப்பதே வேறாகியல்லவா இருந்திருக்கும்?

ன் கேள்விக்கு பதில் சொல்லுங்க கீதன்!”

“டீச்சர்ன்னு ப்ரூவ் பண்ணுறீங்க மாயா!” என்று மென்னகை புரிந்தான் அவன் உடனே.

மைத்ரேயியிடமிருந்து நிம்மதி பெருமூச்சு வந்தது. “ஹப்பாடா .. இன்னும் என்னை மாயான்னுதான் கூப்பிடுறான்.. அப்படின்னா என் மேல அதிகம் கோபமில்லை!” என்று சொல்லிக் கொண்டாள். அந்த நிம்மதியில் பேச்சை வளர்த்தாள் அவள்.

“நான் நல்ல டீச்சர்.. அதான் எப்பவும் என் தொழிலுக்கு ஏற்ற மாதிரி கேள்வி கேட்குறேன்.. ஆனா நீங்க தான் ரொம்ப பேட் ஸ்டூடண்ட்” என்றாள் அவள்.

மீண்டும் மென்னகை புரிந்தான் சகிதீபன். அவள் பக்கம் திரும்பி தலை சரித்து ஆழ்ந்த குரலில்,

“ நான் உங்களுக்கு ஸ்டூடண்ட்டா மாயா? ஸ்டூடண்ட் மட்டுமா?” என்று கேட்டான் அவன். குப்பென வியர்த்துவிட்டது அவளுக்கு.

“ என்ன கேட்க வருகிறானாம் இவன்? அதுவும் ஆழ்ந்த குரலில்?” அவள் கேள்வியுடன் பார்க்க, சகியோ சாலையில் கவனமாய் இருந்தான். ஒருவேளை அவன் அப்படி எதுவும் பேசவே இல்லயோ? என்று அவளுக்கே குழப்பம் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.