(Reading time: 8 - 15 minutes)

"ஷ்டம் தான்!ஆனா,முடியாதது இல்லை.ஒரு திருக்குறள் இருக்கு,"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலித் தரும்"நானும் முயற்சி பண்ணேன்.சோதனைகள் என்னையும் விட்டு வைக்கலை!பல அவமானங்களை நான் சந்தித்தேன்.எனக்கு ஆதரவா அந்த ஆண்டவனை தவிர யாரும் அப்போ இல்லை.ஐ.ஏ.எஸ் என் கனவா இல்லை,என் வாழ்க்கையோட கட்டாயமா மாறியது!போராடினேன்.வெளியே வந்தேன்!இன்னிக்கு உங்க முன்னாடி நிற்கிறேன்!சிம்பிள்!"

"அப்படி என்ன சோதனைகளை கடந்து வந்தீங்க?"-சில நொடிகள் அவளிடம் கனத்த மௌனம்.

"உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?"

"என் அப்பா!"

"எனக்கும் தான்!ஆனா,அவருக்கு இல்லை.சொல்லப் போனா உங்களை எல்லாம் பார்க்க பொறாமையா இருக்கு!உங்களுக்கு எல்லா வகையில இருந்தும் அன்பு கிடைக்குது!பட்,கிட்டத்தட்ட 17 வயசு வரைக்கும் எந்த ஒரு அன்பையோ,பாதுகாப்பையோ,நம்பிக்கையையோ யாரும் எனக்கு தரலை!எனக்கு நல்லப்படியா அமைந்தது 4 விஷயம் தான்!1.என் கெரியர்,2.என் டீச்சர்ஸ்,3.என் தாத்தா பாட்டி,4.என் லைப் பார்ட்னர்!"-தன்னிச்சையாக அவளது விழிகள் ஜோசப்பை அடைந்தன.

"என்னை வழிநடத்தக்கூட யாரும் இல்லை!"-அங்கு சில நொடிகள் கனத்த மௌனம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

"ஸ்டூடண்ட்ஸ்காக என்ன சொல்ல ஆசைப்படுறீங்க?"

"வாழ்க்கையில ஒரு விஷயத்தை முடியாதுன்னு நினைக்காதீங்க!உங்களால முடியாதுன்னா அந்த ஆண்டவன் அதை உங்கக்கிட்ட ஒப்படைக்க மாட்டான்.அடுத்தவங்களை பற்றி கவலைப்படாம உங்க மனசு சொல்றதை கேளுங்க!அது என்னிக்கும் தவறான வழியில் போகாது.தனக்கு ஒரு அடையாளம் இருக்கணும்!அது சொந்த உழைப்பால உருவாகணும்!தப்புன்னு தெரிந்தா தட்டி கேளு!உன் பேச்சை கேட்க ஆள் இல்லையா?நல்லா படி,உழைத்து முன்னேறு,ஒரு பவருக்கு வா!உலகம் உனக்கு வழிவிட காத்துட்டு இருக்கு!அப்போ தட்டிக்கேளு,உன்னை எதிர்த்து கேள்வி கேட்க எவனும் இருக்க மாட்டான்."

"அப்போ எங்களை மாதிரி ஸ்டூடண்ட்ஸ்காக நீங்க உங்க பவரை விட்டு கொடுப்பீங்களா?"-துணிகரமான இக்கேள்வி கேட்ட மாணவனிடம் தஞ்சமடைந்தன அவையாரது விழிகள்...!

"நல்லக் கேள்வி கேட்ட தம்பி!நானும் ஒரு காலத்துல உன்னை மாதிரி இருந்தவ தான்!படித்து,ஜெயித்து சேவை செய்ய வந்திருக்கேன்.கொஞ்ச நாள் நானும் செய்றேன்!அதுக்குள்ள நீயும் பெரிய லெவல்ல வா!விதியை மாற்றி எழுது!என்னை இறக்கிவிட்டு நீ என் இடத்துல உட்காரு!சந்தோஷப்படுற முதல் ஆள் நானாகதான் இருப்பேன்.ஏன்னா,இந்த நாடு உன்னை மாதிரி இரத்தம் கொதிக்கிற இளைஞர்களுக்காக தான் தவம் கிடக்குது!"-அவளது பதிலுக்கு வினா எழுப்பிய அந்த சிறுவனே கரகோஷம் எழுப்பினான்.

வரலாறு என்பது பத்தோடு பதினொன்றாம் பாடமல்ல பயில்வதற்கு!அது,போராடி வென்ற தனி ஒருவனின் வீர சகாப்தம்!வெற்றி என்பது நாவிற்கு இனிய கனி தான்!அதை சுவைக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர் அகிலத்தில் இல்லை.நியாயமான ஆசைகளை தேவைகளாக உருமாற்றுங்கள்!உங்கள் மனதிடம் இந்த இலட்சியம் அத்தியாவசியம் என்று நம்பிக்கையை விதையுங்கள்...!ஒரு வெற்றி தேடி ஓடும் நெஞ்சமானது பல சஞ்சலங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது இயற்கையின் நியதி!!சஞ்சலங்களை வேரறுத்து தங்களின் தனிப்பட்ட இச்சையை பொதுநலத்திறகாக பயன்படுத்துங்கள்!காரிருள் விலகி உதிக்கும் புது ஆதவ ஔி அகிலத்தின் நன்மைக்காக தங்களால் உருவாக்கப்படும்!காத்திருந்த விடியல் ஒருநாள் அவசியம் தோன்றும்!!!!

"செமயா பேசுனடி!எனக்கு சந்தேகமா இருக்கு நீ என் அம்மூ தானே?"

"அதிலென்ன சந்தேகம்?"

"இல்லை...ஒரு காலத்துல அவ,கொஞ்சம் கத்தி பேசுனாலும் ஊரே உடையும் அளவுக்கு அழுகிற பயந்தாங்குளியா இருந்தா!இப்போ,தைரியத்தையே விலைக்கு வாங்கின மாதிரி பேசுறா!"

"எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்தது தான்!"

"நானா?"

"ம்...ஒரு காலத்துல,ஒருமுறை யாரோ என் சீனியர்,அதாவது உங்க கிளாஸ்மேட் எனக்கு ப்ரபோஸ் பண்ணதுக்கு அவரை சீரியஸ் ஆக்கிட்டு என்வந்து திட்டினீங்க!அவன் தான் பேசுறான்னா உங்க எங்கே போச்சு அறிவு?ஓங்கி அவனை அறைய வேண்டியது தானே!அந்த அளவுக்கூட தைரியத்தை கற்றுக்க மாட்டியான்னு கேட்டிங்க!ஞாபகமில்லை??"

"நீ அதெல்லாம் மறக்கலையா?"

"நான் முயற்சி பண்ணேன்.ஆனா,என்னால உங்கக்கூட வாழ்ந்த நாட்களில் ஒரு நொடியைக் கூட மறக்க முடியலை!நீங்க விட்டுட்டு போன பிறகு தான்,உங்களைப் பற்றி நிறைய யோசித்தேன்.ஏதோ ஒரு புதையலை தொலைத்த உணர்வு அடிக்கடி வரும்!கஷ்டமா இருக்கும்!"-அவனது தோளில் சாய்ந்தப்படி கூறினாள்.

"நீ தானே போக சொன்ன?போயிட்டு உன் அடையாளத்தை உருவாக்கிட்டு திரும்ப வாடான்னு நீ தானே சொன்ன?"

"ம்...ஒருவேளை நீங்க என்னைவிட்டு விலகாம இருந்திருந்தா,உங்க மேலே இருந்த காதல் எனக்கு தெரியாமலே போயிருக்கும்!நமக்குள்ள வெறுப்பு தான் இருந்திருக்கும்!"-என்றவளை கூர்ந்துப் பார்த்தான் ஜோசப். 

"உன்னை லவ் பண்ணதுக்கு புண்ணியம் பண்ணி இருக்கணும்டி!இன்னொருத்தியாக இருந்தா என் வாழ்க்கையை இந்த அளவுக்கு சந்தோஷமா மாற்றி இருப்பாளான்னு தெரியலை!எவ்வளவு பெரிய இடத்துல இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாம அடுத்துவங்களுக்காக வாழுற!வாழ்க்கை முழுசும் உனக்காக வாழ ஆசைப்படுறேன்.உனக்காக மட்டும்...!"-என்று அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ஜோசப்.

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.