(Reading time: 8 - 15 minutes)

16. நிர்பயா - சகி

Nirbhaya

ரு திங்கள்கள் கடந்தப்பின்பு...

"நிர்பயா மீண்டும் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பு!உதகையில் தலைவிரித்தாடிய குற்றங்கள் யாவும் இனி தரைமட்டமாக்கப்படும் என்று நம்பிக்கை!"-மீண்டும் அவளது ராஜ்ஜாங்கம் தொடங்கியது.

பெருஞ்சினத்தோடு சேனலை மாற்றினார் சங்கரன்.

"3 திங்களாய் அஸ்தமித்திருந்த ஆதவன்,மீண்டும் தனது பிரகாசத்தோடு உதகையில் இன்று உதிக்கின்றான்.ஆண்,பெண் என்ற பேதமின்றி பலரின் வாழ்வில் நம்பிக்கையை ஆழமாய் விதைத்த உதகையின் சகாப்தம் தான் கடந்த வந்த பாதையை குறித்தும், பள்ளி மாணவர்களின் வினாக்களுக்கும் மனம் திறக்கிறது!நேரடி ஔிபரப்பு!இன்று காலை பத்து மணிக்கு காண தவறாதீர்கள்!"-என்றது மற்றொரு ஔிபரப்பு நிகழ்ச்சி.

எழ மாட்டாள் என்று எண்ணியவள் மீண்டும் மீண்டும் எழுகிறாள்!!தான் கொண்டு வந்த பிம்பம் இன்று தன்னையே மிதிக்கிறது என்ற பொறாமை அவருக்கு!!

"அடடே..!நிர்பயா பேட்டி கொடுக்கிறாளா?தவறாம பார்க்கணும்!"-எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார் விசாலாட்சி.

"யாராவது அதை பார்த்தீங்க மனுஷனா இருக்க மாட்டேன்!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"இப்போ மட்டும் இருக்கியா என்ன?போடா போடா!உனக்கு எல்லாம் பயந்த கிழவி எப்போதோ போயிட்டா!போ...!என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ!"-என்று வாய்விட்டு சிரித்தார் அவர்.

"என்னம்மா?பழைசை மறந்துட்டியா?"

"இல்லை...ஞாபகப்படுத்துறேன்!பிரதாப் நிலைமையை ஞாபகப்படுத்துறேன்!அடுத்து நீயா?உன் தங்கச்சியான்னு தெரியலை!எப்போ நீ பெற்ற பொண்ணு உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது எட்டிக்கூட பார்க்கலையோ,உனக்கெல்லாம் மரியாதை கொடுக்கணும்னு எனக்கு தலை எழுத்து இல்லை!ஆண்டவன் இருக்கான்!அதனால தான் மரணத்தை விரும்பி ஏற்றுக்கிட்டவளைக்கூட உன்னை அழிக்கவே திரும்பவும் அனுப்பி இருக்கான்!இனி உனக்கு வேற கதி இல்லை..."-என்று வெறுப்பை உமிழ்ந்துவிட்டு அங்கிருந்து சென்றார் விசாலாட்சி.

"இனி உனக்கு வேற கதி இல்லை!"-அந்த வாக்கியம் மட்டும் சங்கரனின் நெஞ்சினில் ஆழமாய் தைத்தது.

"We welcome our respected and loveable administrative officer Ms.Nirbhaya to this wonderful event!"-நிகழ்ச்சி தொகுப்பாளினி மாண்புமிகு மாவட்ட ஆட்சியரை வரவேற்க அரங்கமே அதிரும்வண்ணம் கரகோஷம் எழுந்தது.

"அனைருக்கும் வணக்கம்!"-என்று ஆரம்பித்தாள் அவள்.

"3 மாதம் நான் இல்லாத சமயத்துல நிறைய தவறுகள் இங்கே நடந்ததாக எனக்கு செய்தி வந்திருக்கு!கவலைப்பட வேண்டாம்,இன்னும் ஒரு மாதக்காலத்துல அதை எல்லாத்தையும் முழுதாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறேன்!"-மீண்டும் கரகோஷம்!!

"அதுக்கு முன்னாடி எனக்கு தனிப்பட்ட ஒரு மெயில் வந்திருக்கு!From Master Jagadheesh Venkatram from Government hr.sec.school.அதனால தான் இந்த விழாவுக்கு தனிப்பட்ட ஒரு ஆர்வத்தோட வந்தேன்.இங்கே இருக்கிற நிறைய மாணவர்களுக்கு என்னை என்க்குவைரி பண்ணணும்னு ஆசையாம்!Those who having questions to ask kindly ask me."-என்றாள் அவள்.

சில மணி நிமிடங்கள் கனத்த மௌனம் அந்த அறை முழுவதும்!!

"யாருக்குமே இல்லையா?"-மீண்டும் மௌனம்.பின்,அரை நிமிடங்களுக்கு பின்,ஒரு பதினைந்து வயது சிறுவன் எழுந்தான்.

"எஸ்!"

"மேடம்..!"

"நோ நீட் டூ கால் மேடம்...!ஐ மே ஸ்பிரியர் டூ யு!பட்,யு ஆர் நாட் இன்பீரியர் டூ மீ!"-என்றாள் அவள்.

"நீங்க ஏன் ஐ.ஏ.எஸ் படித்தீங்க?சின்ன வயசு யைம்மா?இல்லை...வேற எதாவது ரிசனா?"

"நல்ல கேள்வி!வாட் இஸ் யுவர் ஆம்பிஷன்?"

"டாக்டர்!"

"குட்!"

"இங்கே இருக்கிற எத்தனை பேருக்கு டாக்டர் ஆக ஆசை?"-அவளது கேள்விக்கு அங்கிருந்த முக்கால் வாசி மாணவர்கள் கரம் தூக்கினர்.

"வெரி நைஸ்!என்ஜினியர்?"-எஞ்சி இருந்தோர்களில் எண்பது சதவீதம் கை உயர்த்தினர்.

"வெரி குட்!லாயர்?"-அங்கே அமர்ந்திருந்த ஜோசப் திரும்பி பார்த்தான்.பத்து பேர் கரம் உயர்த்தினர்.

"ரைட்டர்?"-ஒருவரும் இல்லை.

"போலீஸ்?"-ஐந்து கரம் எழுந்தது.

"ம்...தி இஸ் தி ஆன்சர்!இங்கே இருக்கிறவங்கல்ல 95 சதவீதம் டாக்டர் இல்லன்னா என்ஜினியர்!நான் பத்தோட பதினொன்றா இருக்க விரும்பலை!அதுக்காக அந்த நோபல் ஃப்ரோபஷன்ஸை தப்பா பேசலை!உலகத்தை எல்லாரும் ஒரு திசையில பார்க்கும் போது,இங்கே இருக்கிற சிலர் மாதிரி நான் அதை வேற திசையில் பார்க்க விரும்பினேன்!அடுத்தவங்களுக்கு சேவை செய்ய,மனம்,பணம்,தைரியம் இதை எல்லாத்தை விடவும் கொஞ்சம் பவரும் தேவைன்னு புரிந்தது.ஸோ...ஐ சோஸ் திஸ்!"என்றாள்.

அரங்கமே அதிரும் ஒரு கரகோஷம்!!

"ஐ.ஏ.எஸ் பாஸ் பண்றது கஷ்டம்னு சொல்றாங்க!நீங்க எப்படி முதல் அட்டம்ண்ட்ல ஃபர்ஸ்ட் கிளாஸில பாஸ் பண்ணீங்க?"-என்றான் இன்னொருவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.