(Reading time: 12 - 23 minutes)

10. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

ட்ரிங்.. ட்ரிங்.. ட்ரிங்.. சந்தேகமே வேண்டாம்! அது தமிழின் செல்ஃபோன் தான். (ஒரு ரிங் டோன் கூட வெச்சுக்க மாட்டீங்களா ஹீரோ சார்?)

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் தமிழ். யாழினியின்மேல் தனக்கு உண்டான உணர்வுகளை ஆமோதிப்பதா வேண்டாமா என்ற பெரும் பட்டிமன்றத்தினால் சோர்வுற்றவன், அப்போதுதான் கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான்.

அதை பொறுக்காதது  போல ஃபோன் அலறவும், கஷ்டப்பட்டு விழிகளை திறந்தான் அவன். செல்ஃபோன் திரையில் “சோடாபுட்டி” என்ற பெயரை பார்த்ததும் அவன் தூக்கம் பறந்தே விட்டிருந்தது. உடனே நேரத்தை பார்த்தான்.

காலை மணி 7. “அடிப்பாவி, இந்த ஃபோனை நேத்து நைட்டே பண்ணிருந்தால், நான் நிம்மதியா தூங்கியிருப்பேன்ல?” என்று அதற்கும் அவளையே திட்டியபடி ஃபோனை எடுத்தான் தமிழ்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ஹலோ..”.

ஏதோ ஒரு உந்துதலில் ஃபோன் செய்திருந்தாள் யாழினி. ஆனால் தமிழ் தனது கணீர் குரலில் “ஹலோ”என்றதும் உந்துதல் எல்லாம் ஊர்ந்து எங்கேயோ போயிருந்தது. வார்த்தைகள் கிடைக்காமல் ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னையே சமநிலை படுத்திக் கொள்ள முயற்சித்தாள்.

“ நீ மூச்சு விடுறதை நான் கேட்கணும்னு நினைச்சுதான் ஃபோன் பண்ணியா?” என்று கேட்டான் தமிழ். சிரித்தபடிதான் அவன் அதைக் கேட்டான். ஆனால் அவனது கணீர் குரலோ, அவனது கேலியை அதட்டலாய் பிரதிபலித்து காட்டியது. உடனே சுதாரித்திருந்தாள் யாழினி.

“இல்லை .. நீங்க மருந்து சாப்பிடனும் அதை சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்..”

“என்ன?”

“ நீங்க ஏழரை மணிக்கு மருந்து சாப்பிடனும்.. தூங்கிட்டு இருப்பீங்களோன்னு டவுட்டு வந்துச்சு..அதான் ஃபோன் பண்ணி எழுப்பினேன் !” என்றாள் யாழினி.

“ உனக்கு டைமிங்லாம் ஃபோலோவ் பண்ண தெரியுமா?” என்று ஆச்சர்யமான தொனியில் கேட்டான் தமிழ். உடனே ரோஷம் வந்துவிட்டது அவளுக்கு..

“நீங்க நினைக்கிற அளவுக்கு நாங்க வேஸ்ட் இல்லை தமிழ் சார்” என்றாள் சுள்ளென.

“ நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு எப்படி தெரியும்?”

“அதானே பார்த்தேன்! உங்களுக்கு நீங்க என்ன நினைக்கிறிங்க என்பதுதானே முக்கியம்? எப்பவும் நீங்க மட்டும்தான் சரி.. உங்களை மாதிரி இல்லாதவங்க எல்லாரும் தப்பு! அப்படித்தானே.. FULL OF ATTITUDE!!”என்று சாடினாள் யாழினி.

அளவில் பெரிய பட்டாசையும் நொடியில் கொளுத்தி போட சின்ன தீக்குச்சி போதும்ல? அந்த மாதிரி தமிழ் என்ற பட்டாசை கொளுத்தி போட யாழினியும் அவளது பேச்சும் போதுமே! (அவள் ஏகவசனம் பேசியும் தமிழ் சும்மா இருந்தான்னு சொன்னா நீங்களே நம்ப மாட்டீங்களே!)

“என்னடீ உன்னோட ஒரே வம்பா போச்சு? ஃபோன் பண்ணி சண்டை போடுற? அதான் நான் FULL OF ATTITUDE ஆச்சே, அப்பறம் ஏன் என்கூட பேசுற? எதுக்கு ஃபோன் பண்ணின? நான் மருந்து சாப்பிட்டா என்ன சாப்பிடலன்னா என்ன? வெறுப்பேத்தாம ஃபோனை வை!” என்றான் அவன். எதுவும் பதில் பேசாமல் ஃபோனை வைத்தாள் யாழினி.

“சோடாப்புட்டி!”

“சிடுமூஞ்சி!” இருவரும் ஒரே நேரத்தில் திட்டிக் கொண்டனர். மனதில் எந்த அளவிற்கு கோபம் வந்தாலும், அதைவிட அதிகமாய் கரைப்புரளும் மகிழ்ச்சியை இருவராலுமே கட்டுபடுத்த முடியவில்லை.

தனக்காக விழித்திருந்து ஃபோன் செய்கிறாளே என்று சிலாகித்துக் கொண்டான் தமிழ். (உங்களுக்காக யாரும் விழிக்கல பாஸ்.. காதல் வந்துட்டால் எல்லாத்தையும் சாதகமாகவே இணைச்சு பார்க்குறதே வேலையா போச்சு போங்க!).

இதழில் தவழ்ந்த புன்னகையுடன் அந்த தினத்தை தொடக்கி வைத்தான் தமிழ். சற்றுமுன்பு அவளுடன் சண்டை போட்டதென்ன இப்போது அதை ரசிப்பதென்ன? “குட்டி குட்டி சண்டைகளும் நல்லாத்தான் இருக்கு” என்று எண்ணிக் கொண்டான் அவன்.

யாழினியோ தமிழின் குரலை நினைவுகூர்ந்து கொண்டிருந்தாள். அவன்தான் தன்னை ஆட்டிப்படைக்கிறான் என்றால், அவனது குரல் ஒருபடி மேல்தான் போலும்! ஃபோனை வைத்து பல நொடிகள் கடந்தும் இன்னும் தன் செவியருகில் தமிழ் முணுமுணுப்பது போலவே ஒரு ப்ரம்மை.

“சரியான இம்சை.. இவன் பேசுனா கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு.. ஆனா பேசுற வார்த்தைதான் ..சரியே இல்லை.. ! பேசாம நாமளே ஸ்க்ரிப்ட் எழுதி, இதை மட்டும் பேசுப்பான்னு சொல்லிடனும் போல”. (தாராளமா பண்ணும்மா ..எனக்கும் வேலை குறையும்ல?).

ஹீ கிளம்பலாமா? ரெடியாகிட்டியா?” என்று குரல் கொடுத்தான் புகழ். அவளுக்காக என்றோ பரிசாக வாங்கி வைத்த உடை,இன்று கை கொடுத்தது. அவள் பிடிவாதமாக புகழை அந்த வீட்டிற்கு செல்லவே கூடாது என்று கூறிவிட்டிருந்தாள். அதனால் மெசேஜ் மூலம், சஹீபாவை கன்னியாகுமரிக்கு அழைத்து செல்வதாக சொல்லியிருந்தான் அவன்.

அவளது இன்றைய பெற்றோர் கொஞ்சம் ஆடித்தான் போயினர். அவளை தடுப்பதற்கு வழியே இல்லையா? என்று புகழிடம் உதவி கேட்டிட, அனைத்தையும் சீர் செய்வது தனது பொறுப்பு என்று வாக்கு கொடுத்தான் அவன்.

அடர்நீல நிற சுடிதாரில் அழகே உருவாய் இருந்தாள் சஹீபா.

“எப்படி இருக்கு புகழ்?” என்று இடதும் வலதும் திரும்பியபடி கேட்டாள் சஹீபா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.