(Reading time: 8 - 15 minutes)

20. நிர்பயா - சகி

Nirbhaya

டிந்துப்போய் தனித்திருந்தாள் அவள்.வாழ்வே சூனியமாகி போனது!!அழுவதற்கும் உடலில் தெம்பில்லாமல் போக,மனம் சிதைந்து இருந்தாள் அவள்.எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவள் பெருமூச்சு வாங்கினாள்.

இனி என்ன செய்ய போகிறோம்??இதுதான் என் சரித்திரமா??நம்பிக்கையை அளிக்க இல்லை பொய்பிக்காமல் இருக்கவும் எவரும் இங்கில்லையா??பல கேள்விகள் இதயத்தை துளைத்தன.

மனம் நிம்மதிக்காக யாகசம் செய்தது.அப்படியே காலார நடக்கலாம் என்ற எண்ணம் இதயத்தை வியாபித்தது.எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

மௌனமாக மிக மௌனமாக...!

சில மணி நேரங்கள் கடந்திருக்கலாம்!

சற்று தூரத்தில் யாரோ ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்டது.

மிக துல்லியமாக அவள் கவனத்தை ஈர்த்தது அக்குரல்!!

சற்று தூரத்தில் ஒரு 12 வயது சிறுவன் அமர்ந்திருந்தான் கண்கள் கலங்கிய நிலையில்!!

அங்கிருந்து நகர்ந்துவிட புத்தி உரைத்தாலும் மனமோ அவனை நோக்கி செல்ல துடித்தது.

அவனருகே சென்று அமர்ந்தாள்.

"உன் பெயர் என்ன?"

"............."

"எதுக்கு அழுற?"

"............."

"சொல்லு!"

"என் பெயர் ராம்!என்னை எங்க அப்பாம்மா படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க!"

"ஏன்?"

"அவங்களுக்கு என்னை படிக்க வைக்க பணம் இல்லையாம்!என்னை வேலைக்கு போக சொன்னாங்க.முடியாதுன்னு சொன்னேன்.என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க!பணம் சம்பாதித்தால் தான் வீட்டுக்கு வரணும்னு சொல்லிட்டாங்க!"-அவளுக்கு மனம் அடைத்தது.

நிர்பயா தன்னிடமிருந்த 500 ரூபாய் தாளை அவனிடம் நீட்டினாள்.

"வேணாம்கா!இதுக்கு பேரு பிக்ஷை!நான் உழைத்து சம்பாதிக்கணும்.நான் திரும்ப என் வீட்டுக்கு போக மாட்டேன்!"

"வீட்டுக்கு போகாம எப்படி?"

"வேலைக்கு போவேன்,என் சொந்த உழைப்பால நானே படிப்பேன்.பெரிய ஆளா ஆகி அப்பறம் என்னை அவமானப்படுத்தினவங்க முன்னாடி போய் நிற்பேன்!"-அவனது மனவுறுதி அவளை ஸ்தம்பிக்க வைத்தது.

"இன்னும் எந்த கஷ்டம் வந்தாலும் அதை எதிர்க்கிற தைரியம் எனக்கு இருக்கு!நான் தப்பே பண்ணாதவன்.ஆண்டவனை தவிர யாருக்கும் பயப்பட மாட்டேன்!நீ போக்கா!என் மேலே இரக்கம் படாதே!"-சுருக்கென தைத்தது அவன் வைராக்கியம்.

"இந்த ஊர் கலெக்டர் கூட இதுமாதிரி நிறைய கஷ்டத்தை ஜெயித்து தான் வந்தவங்களாம்!நானும் நல்லப்படியா வந்துடுவேன்கா!பெரிய ஆளா நிச்சயம் வருவேன்.நம்பிக்கை இருக்கு!"-நிர்பயாவின் விழிகள் ஒரு துளி கண்ணீரை சிந்தின.அச்சிறுவன் மௌனமாக எழுந்து சென்றான்.கிழிந்த வஸ்திரம்!கறுத்த தேஜம்!கலைந்த கேசம்!ஆனால்,அச்சமயம் அவளது இதயத்தில் அஸ்தமித்திருந்த நம்பிக்கை ஆதவனை துயில் கலைத்த நம்பிக்கை நாயகனாய் நின்றான் அவன்.

தனது கைப்பேசியை எடுத்தாள் அவள்.

"சொல்லுங்க மேடம்!"

"ஒரு பையனுக்கு அட்மிஷன் வேணும்!நாளைக்கு அவனை கூட்டிட்டு வர ஏற்பாடு பண்றேன்!அவன் தங்க பாதுகாப்பான இடத்தையும் அரென்ஜ் பண்ணுங்க!"

"எஸ் மேடம்!"-இணைப்பை துண்டித்தாள் அவள்.புதியதோர் சகாப்தம் பிறந்தது.

இறுதிக்கட்ட சோதனை யாதும் தீர்ந்துப்போக,இனி நீதியை வழங்கும் நியாய தேவியாக அவளை நியமிக்கின்றேன்...

றுநாள் காலை....

"வாட் தி ஹெல்?என்ன சொல்ற நீ?"

"..............."

"ச்சே...!"-என்றவன் தன் கைப்பேசியை விசிறியடித்தான்.

"என்னடா?என்னாச்சு?"-பதறியப்படி கேட்டார் லட்சுமி.

"சங்கர் ஃப்ராப்பர்ட்ஸ் லைசன்ஸை அந்த நிர்பயா கேன்சல் பண்ணிட்டாம்மா!"-இதைக் கேட்ட அனைவரும் ஆடிப்போயினர்.

"10,20 இல்லை முழுசா 200 கோடி நஷ்டமாகி இருக்கு!"

"200 கோடியா?"

"ஆமாம்மா!அவளை என்ன செய்யுறதுன்னே புரியலை!"

"இனிமே நாம தான்டா ஜாக்கிரதையா இருக்கணும்!சொத்து மொத்தமும் அவளுக்கு போயிடுச்சு!"

"எ..என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.