(Reading time: 25 - 50 minutes)

12. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ன்னைக்கும் ஃபோன் எடுக்கல… மெஸ்ஸெஜுக்கும் பதிலில்லை.  ஹூம்ம்…. சஞ்சு! உன்னை எப்படி வழிக்கு கொண்டுவரனும்னு எனக்கு தெரியும்.  வீட்டில நானில்லாத நேரமா ப்ளான் பண்ணி கல்யாண பத்திரிக்கை கொடுக்க மைத்ரீயையும் அப்பாவையும் கூப்பிட்டிட்டு வந்திருக்க…. காலேஜுக்கும் வராம எங்கிட்ட இருந்த தப்பிச்சுட்டிருக்கியா? நாளைக்கு கல்யாணத்துக்கு வந்து உன்னை நேர்ல பார்க்கப்போறனே… அப்போ எங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறனு பார்ப்போம்”

மூன்று வாரங்களாக சரயூ, தன்னிடம் பேச வாய்ப்பு தந்திருக்கவில்லை ஜெய்.  அதே சமயம் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தியிருந்தான் கிரண்.  இதனால் சரயூவின் மனதில் அவனைப் பற்றிய நல்லெண்ணமும் மரியாதையும் வளர்ந்திருந்தது.

மண்டபத்தில் ஆதர்ஷ்-ப்ரியாவின் நிச்சயம் முடிந்திருக்க எல்லோரும் இரவு உணவை முடித்து உறங்கி கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் உறங்குவதை தனக்கு சாதகமாக்கினான் ஆதர்ஷ்.

“உன்னை பார்க்கனும் ப்ரியா… யாருக்கும் தெரியாம மொட்டை மாடிக்கு வா”

“என்னது?! இப்போவா! இல்லை ஆதர்ஷ்…. முடியாது” தன் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கையின் தூக்கம் கலையாமலிருக்க மிகவும் ரகசியமாக பேசினாள் ப்ரியா.

“ப்ளீஸ் ப்ரியா!”

“முடியாது! சொன்னா புரிஞ்சுக்கங்க தர்ஷ்… யாராவது பார்த்துட்டா கஷ்டம்”

“யாரும் பார்க்கமாட்டாங்க; நீ இங்க வா…”

“தர்ஷ் சொ…” அவளை மேலும் பேசவிடாது தடுத்தவன்

“நீ வர வரைக்கும் நான் இங்கேயே உனக்காக காத்திட்டிருப்பேன்! எவ்வளவு நேரமானாலும் சரி….” அவள் மறுத்துவிடுவாளோ என்று தர்ணா போராட்டத்தை கையிலெடுத்தான்.

சிறிது நேரம் இருவிரிடமும் மௌனன் நிலவியது.  மறுபடியும் இச்சந்திப்பை மறுத்தாள் ப்ரியா.

“இதென்ன பிடிவாதம்? சின்ன பிள்ளை மாதிரி…. சொன்னத கேட்க மாட்டீங்களா?”

“நான் சொல்லுறத நீ கேட்க மாட்டியா ப்ரியா?”

“ப்ச்ச்… வரேன்” அணைப்பை துண்டித்தவள் யஷ்விதா தூங்குவதை உறுதிபடுத்திக் கொண்டு அறையிலிருந்து எட்டிப்பாத்தாள்.  யாரும் இருக்கிறார்களா என்று நோட்டமிட்டவள் அவசரமாக மாடிப்படிகளில் ஏறினாள்.

இவள் மாடிக்கு வந்தததும் சுவரின் மறைவிலிருந்து வெளிவந்தான் ஆதர்ஷ்.

“அத்தனை அவசரம் என்ன தர்ஷ்? யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க? நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்லை! சரி போகட்டும்.  இப்போதா பார்த்தாச்சு இல்லை… போய் தூங்குங்க” கோபத்தில் பொரிந்தவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பினாள்.

அவளின் கோபத்தால் சிவந்திருந்த முகத்தை ரசித்தவனுக்கு… இன்று நிச்சயத்தின் போது நாணத்தால் சிவந்திருந்த அவளின் முகம் நினைவுக்கு வரவும் அவள் பேசியதை கவனித்திருக்கவில்லை அவன்.  ப்ரியா திரும்பி நடக்கவும் அவசரமாக அவளின் கையை பற்றினான்.

“இதென்ன விளையாட்டு தர்ஷ்? கையை விடுங்க… கீழே யாரும் பார்க்கறதுக்குள்ள நான் போயாகனும்”

அவள் முகத்தையே பார்த்திருந்தவன் “முதமுதலா என்னை காஃபி டேல பார்க்க வந்திட்டு அமைதியா உட்கார்ந்திருந்த… நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்ன… அதே ப்ரியாதானா நீ!”

“அதே ப்ரியாதான்! ஏன்? இப்போ என்னாச்சு?”

“நீ ரொம்ப மாறிட்ட ப்ரியா” அவள் படபடவென பேசியதைச் சுட்டிக்காட்டினான் ஆதர்ஷ்.

“இப்போ என்ன நான் மாறிபோயிட்ட?

“அன்னைக்கு என்னை பார்க்க வந்த ப்ரியா அமைதியா இருந்தா… அவளுக்கு எம்மேல கோபப்பட தெரியாது.  ஆனா இப்போ….” ஏதோ சொல்ல வந்தவனை இடை வெட்டி

“அன்னைக்கு உங்களை பிடிச்சிருக்கா இல்லையானு தெரியாத நிலை.  ஆனா இன்னைக்கு உங்களை பிடி…” அவள் சொல்ல வந்ததை முடிக்காமல் நிலத்தை நோக்கினாள்.  இத்தனை நேரமிருந்த கோபம் மறைந்து அவள் கன்னங்கள் நாணத்தில் சிவந்தன.

“சொல்லு ப்ரியா! இன்னைக்கு என்னை பிடிக்கலைனு சொல்லு” கண்களில் குறும்பு மின்ன அவளை சீண்டினான்.

சட்டென நிமிர்ந்து வலியோடு அவன் முகத்தை நோக்கி, “அப்படி விளையாட்டுக்கு கூட சொல்லாதிங்க தர்ஷ்.  எனக்கு உங்களை மட்டும்தா பிடிச்சிருக்கு!” என்றவளின் குரல் தழுதழுத்தது.

மறுநொடியே அவளை தன்னோடு இறுக்கி அணைத்திருந்தான் ஆதர்ஷ்.

“உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா ப்ரியா?”

“ம்ம்…”

அவளை தன்னிடமிருந்து விலக்கி, “என்ன ம்ம்…? நீ ரொம்ப கஞ்சம் ப்ரியா.. ஆனா அதெல்லாம் நாளைக்கு இராத்திரி நடக்காது.  எல்லாமும் தாராளமா இருக்கனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.