(Reading time: 25 - 50 minutes)

ன் கைப்பேசியை தேடி அந்த அறைக்கு சென்றவளோ அதை மறந்து எதை எதையோ யோசித்தவளாக தனியே அமர்ந்திருந்தாள் மைத்ரீ.  ப்ரியாவோடு செல்ஃபி எடுத்தவள் தன் கைப்பேசியை அங்கேயே விட்டுவந்திருக்க அதை எடுத்து வந்தாள் யஷ்விதா.  அதை பார்த்துதுமே ஜெய்யிடம் ராகுல் வந்திருப்பதை சொல்ல மறந்துவிட்டதை உணர்ந்தாள்.

‘அய்யோ! தனியா வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்களே’ ராகுலுக்காக வருந்தியவள் உடனடியாக ஜெய்யை அழைத்திருந்தாள்.

“ராகுலை பார்த்து பேசியாச்சு மைதி” மண்டபத்தின் ஒரு சுவரோரமாக மறைந்து நின்றபடி சரயூவை பார்த்திருந்தான் ஜெய்.  அது அவனின் குரலில் மகிழ்ச்சியாக எதிரொலித்தது.

நண்பனின் குரலுக்கான காரணம் சட்டென புரிந்தவள் புன்னகையுடன், “சரயூ வந்துட்டா போல”

‘என்னைப் பற்றி எப்படிதா இவளுக்கு தெரியவருதோ!’ தோழியின் புரிதலை மெச்சியவன், “ஆமா மைதி!”

“சரி..சரி! நீ ஃபோனை வை… எனக்கு இப்பவே அவளைப் பார்க்கனும்.  எத்தனை நாளாச்சு?” தோழியை காணும் மகிழ்ச்சியில் மனதில் இருந்த குழப்பங்களை மறந்தாள் மைத்ரீ.

சரயூவை வரவேற்க கிளம்பியவள் உடனிருந்த யஷ்விதாவையும் தன்னோடு சேர்த்து கொண்டு நடந்தாள்.

சரயுவோடு வந்திருந்த வேதிக், சௌம்யா மற்றும் கிரணை பெண்களிருவரும் ஒரு சேர வரவேற்றார்கள்.

சரயூ மைத்ரீயை அணைத்து, “ஸாரி மைதி!”

“போதும் சரயூ! எத்தனை முறைதா மன்னிப்பு கேட்ப? அதான் அண்ணா கல்யாணத்துக்கு வந்துட்டியே”

“ஆமா மைதி! ஆனா ஷாப்பிங்க் வரமுடியாம போச்சே” திடீரென இந்த போட்டிக்கு கலந்து கொண்டதால் மைத்ரீ மற்றும் ஜெய்யை காண முடியாததை நினைத்து வருந்தினாள் சரயூ.

மைத்ரீயிடம் பேசினாலும் சரயூவின் கண்கள் ஜெய்யை தேடி அலைந்து கொண்டிருந்தன.  தான் வந்தது மைத்ரீக்கு தெரிந்திருக்க அவனுக்கும் நிச்சயமாக தெரிந்திருக்கும்.  அப்படியிருந்தும் அவன் வராதது அவளுக்கு வேதனையாக இருந்தது.

“சஞ்சு எங்க, மைதி?” தவிப்போடு அவள் கேட்ட கேள்வி மைத்ரீயை தாக்கியது.

“இங்கதா இருப்பா.  அவனுக்கு ஃபோன் பண்ணிப்பாரு, சரயூ” தன்னால் உதவ முடியாது என்பதை மறைமுகமாக தெரிவித்தாள் மைத்ரீ.

எத்தனை முயன்றும் மைத்ரீயினால் ஜெய்யின் கோபத்திற்கான காரணத்தை அறியவும் முடியவில்லை அதை குறைக்கவும் முடியவில்லை.  காரணம் தெரிந்தால் அல்லவா அதை போக்கும் வழியை கண்டுபிடிக்க என்று மைத்ரீயும் சோர்ந்து போனாள்.   அதே சமயம் நண்பனின் கோபத்திற்கு சரயூ போட்டியில் கலந்து கொண்டது காரணமில்லை என்பதை புரிந்திருந்தாள்.  இந்த சூழலில் சரயூவிற்காக அவனிடம் பரிந்து பேசவும் முடியாது தள்ளி நின்றாள்.

தனது கைப்பேசியில் ஜெய்யிற்கு அழைத்தாள்.  அந்த பக்கம் ரிங்க் போக இவளினுள் படபடப்பு, தவிப்பு, கோபமென கலவையான உணர்வுகள் வலம்வந்தன.  கண்களோ இப்போதும் அவனைத் தேடி மண்டபத்தை அலசிக் கொண்டிருந்தது.  அழைப்பு ஏற்கபடாமல் முடிந்தது.  தானே தவறு செய்திருந்தாலும் இன்றும் அவன் தன் அழைப்பை ஏற்காதது அவளுக்கு எரிச்சலை கொடுத்தது.  எத்தனை கனவு கண்டிருந்தாள் அவள்? இன்று எப்படியும் அவனை பார்த்து பேசி சமாதானம் செய்துவிடலாம் என்று.  அது நடவாமல் போகவும் அவள் மனமும் முகமும் வாடின.

பெண்கள் நால்வரும் ஒரு குழுவாக அமர்ந்திருக்க கிரண் அவர்கள் புறம் வந்து இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிவிடலாம் என்று சொல்லிவிட்டு சென்றான்.

காலை 11 மணிக்கு தொடங்கி நாள் முழுவதும் நடக்கும் போட்டியில் இவர்களின் நடனம் பத்தாவதாக இடம் பெற்றிருந்தது.  பங்கேற்பவர்கள் அனைவரும் போட்டி தொடங்குமுன் இஸ்கானில் குழுமி தங்களின் வரவை பதிய வேண்டும்.

“கல்யாணத்துக்கு நீ போயே ஆகனுமா சரயூ? நீ அங்க போயிட்டு இஸ்கான் வரமுடியுமா?”

“நிச்சயமா போகனும் கிரண்.  சஞ்சு வேற எங்கிட்ட கோவிச்சிட்டிருக்கான்.  நான் மட்டும் கல்யாணத்துக்கு போகல மைத்ரீயு எங்கூட சண்ட போடுவா”

“அங்க போயிட்டு நேரத்துக்கு உன்னால வர முடியுமானுதா யோசனையா இருக்கு”

“அதெல்லாம் நான் மேனெஜ் பண்ணிடுவேன்.  இல்லைனா நீயும் எங்கூட வாயேன்.  வேதிக், சௌம்யா, ரூபினும் வருவாங்க.  ஸோ நீயும் வா.. நான் நேரத்துக்கு வருவனா இல்லையானு கவலை படாம ரிலாக்ஸாயிருக்கலாம்”

அவளுடனே இருந்து சரியான நேரத்துக்கு போட்டிக்கு வந்துவிடலாமென்பது நல்ல யோசனையாக இருக்கவும் கிரண் அதை ஒப்பியிருந்தான்.

போட்டியும் இன்றே இருப்பதனால் அவர்கள் சிறிது நேரத்தில் கிளம்ப வேண்டியிருந்ததை ஞாபக படுத்தியதில் சரயூ பதட்டமானாள்.  ஜெய்யை பார்க்காமலே புறப்பட வேண்டியிருக்குமோ என்ற எண்ணம் வருத்த மறுபடியும் அவனை கைப்பேசியில் அழைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.