(Reading time: 19 - 37 minutes)

னக்கு என்ன ஆச்சு என்று கேட்பதற்கு முன் உனக்கு என்ன ஆச்சு என்று சொல்?, மகிந்த்

நான் இதுவரை உன் விசயத்தில் தலையிடாமல் இருந்ததற்கு காரணம் ,நீ இதற்க்கு முன் என்று.... கவிழையாவை கைகாண்பித்து, “இது போல நம் ஸ்டேடஸ்க்கு பங்கம் வருவது போல செய்ததில்லை” சோ! உன் மீது கோபம் கொள்ள அவசியம் இல்லாமல் போனது. பட், இப்போ நீ செய்த இச் செயலுக்கு என்னால் கோபப்படாமல் எப்படியிருக்க முடியும் என்றாள்.

அதுவரை கவிழையாவை தன் அம்மாவிற்கு தெரியாமல் கல்யாணம் செய்ததற்கு தான் கோபமாகப் பேசுகிறார்கள் என்று நினைத்தவன், இப்பொழுது தன் கௌரவத்திற்கு பங்கம் வந்ததாகக் கூறியதும் கோபம் பொங்கியது.

மாம்... என்ன சொன்னீங்க? என் ழையாவை கல்யாணம் முடித்தது உங்களுக்கு கௌரவக்குறைவா? அந்த ஐஸ்வர்யாவின் பிளான் படி எவனோ ஒருவனின் குழந்தைக்கு என்னைக் கல்யாணம் முடித்து அப்பன் என்று அடையாளம் காண்பிக்க நினைத்த அவளை கல்யாணம் செய்தால் உங்களின் கௌரவம் பிரகாசமாய் ஜொலித்திருக்குமோ? என்றான்.

பின், இங்கபாருங்கள் மாம்.. இதுவரை என்னுடைய படிப்பு மற்றும் என்னுடைய பிசினஸ் எல்லாமே என்னுடைய விருப்பம் போல்தான் நான் செய்துவந்துள்ளேன். அதேபோல் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய மனைவியாக யார் வரவேண்டும் என்பதையும் நான் தான் முடிவு செய்துள்ளேன். என்னுடைய பெர்சனல் வாழ்க்கையில் புதிதாக் நீங்கள் இண்டர்பியர் ஆவதை நான் அக்சப்ட் செய்யமாட்டேன்.

என் மேரேஜை அக்சப்ட் செய்து ரிசப்சனுக்கு ஏற்பாடு செய்தீர்களானால் நமக்குள் ரிலேசன்சிப் நல்ல படி தொடரும். இல்லாவிட்டாலும் என்னுடைய ரிசப்சன் நல்லபடியாக நடக்கும். ஆனால் அது நீங்கள் இல்லாமல் நடக்கும் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது அங்கு உள்ளே வந்தார் விஸ்வநாதன்.

வந்தவர் எப்படிமஹிந்த்? உன் கல்யாண ரிசப்சன் நானும் உன் அம்மாவும் இல்லாமல் நடக்கமுடியுமா ? என்றவர் சுபத்ராவை பார்த்து உன்னை நான் என்னசொன்னேன் அவசரப்படாதே மெதுவா பொறுமையா பேசலாம் என்றுதானே சொன்னேன், என்றார்.

பின் கவிழையாவைப் பார்த்து என்ன மருமகளே உன் வீட்டிற்கு வந்திருக்கிறேன் முதலில் உன்னை பார்க்கிறேன் என்னிடம் ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என்றும் என்னை வரவேற்று உபசரிக்கணும் என்றும் தோன்றவில்லையா? என்று சூழ்நிலையை எளிதாக்க முயன்றார்.

அவர் அவ்வாறு சொன்னதும் தான், அவர் வந்தபின்னாலும், பெரியவர் என்ற மரியாதைக்கு எழுந்துநிற்க மறந்து சுபத்திரா பேசிய பேச்சில் உறைந்து அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்

அவசரமாக் அவள் எழுந்து நிற்பதற்கும் மஹிந்தன் அவள் அருகில் வந்து அவள் கைபிடித்து கூட்டிக்கொண்டு ப்ளீஸ் என்று கண்களால் பேசியவன் தன் தந்தையின் காலில் ஆசிர்வாதம் வாங்கப் போனான் அவர்களைத் தடுத்த விஸ்வநாதன் பொறுங்கள் என்றவன், சுபத்திரா என்று தன் மனைவியை தன் அருகில் அழைத்தார்

முகச் சினுங்கலுடன் அவர் அருகில் வந்து சுபத்ரா நின்றவுடன் கவிழையாவுடன் கைப்பிடித்தபடி அவளுடன் தன் பெற்றோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

பின் உட்காரவும் இது வருண் ழையாவுடைய தம்பி டாட் என்று வருணை அறிமுகப்படுத்தியதும், வருணைப் பார்த்து என்னப்பா படிக்கிற? என்று கேட்டார்.

அதற்கு, அங்கிள் நான் டுவல்த் படிக்கிறேன் என்று தான் படிக்கும் பள்ளியின் பெயரையும் சேர்த்துக் கூறினான்.

அப்படியா? என்று கூறிக்கொண்டிருக்கும் போதே காயத்திரி அனைவருக்கும் பருக பானம் தாயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள்

எடுத்துகோ வருண் என்று கூறியவர், வீட்டில் அம்மா அப்பாவை கேட்டதாகச் சொல் இன்னும் ஓரிரண்டு நாளுக்குள் நானும் ஆண்டியும் ரிசெப்ஷன் தேதி முடிவு செய்து முறைப்படி பேச உங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொல் என்றவர்,

மஹி, உன் தங்கை மதுரா போன் பண்ணி அம்மா இங்க கோபமாக வந்திருப்பதாக சொன்னதால், நான் என் வேலைகளை அப்படியே பாக்டரியில் போட்டுவிட்டு வந்துவிட்டேன் அதனால நானும் உன் அம்மாவும் இபொழுது கிளம்புகிறோம். மேல என்ன செய்யலாம் என்பதை போனில் பேசிவிடுகிறேன், என்றவர் தன் மனைவியுடன் கிளம்புவதற்கு விடைபெறும் பொழுது,

கவிழையா என் மகன் உன்னிடம் இதுவரை நடந்தது கொண்டவிதத்தை மதுரா என்னிடம் சொன்னாள். அவன் செய்ததது எனக்கு வருத்தமாக உள்ளது

என் மகன் பெண்கள் விசயத்தில் மிகவும் கண்ணியமானவன் என்ற பெருமை எனக்கு இருந்தது ஆனால் நான் அவனுக்குத் தேர்ந்தேடுத்தப் பெண் தவறானவள். அதனால் அவன், தனக்கு ஏற்ற மனைவியாக உன்னை இக்காட்டான நிலைமையில் நிற்பந்தப்படுத்தி தேர்ந்தெடுத்து வரும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது.

அதனால் உன் மனசு காயமடைந்திருக்கிறது இருந்தாலும் இனிமேல் என் மகனால் உன் காயத்தை ஆற்றமுடியும். ஏனென்றால் அவன் முழுவதுவும் கெட்டவன் இல்லை என்பதை நீ போகப் போகத் தெரிந்து கொள்வாய். நீ புத்திசாலிப் பெண் என நினைக்கிறன் என்று கூறியவர். சிறு தலையசைவுடன் தன் மனைவியுடன் வெளியேறினார்.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.