(Reading time: 20 - 39 minutes)

போகும் வழியெல்லாம் பூர்விக்கு ஒரே யோசனையாக இருந்தது....... ஒரு வாரம் கழித்து தான் இருவரும் விமான சீட்டு பதிவு செய்திருந்தனர். பட்டமளிப்பு விழா முடிந்ததும், தான் இந்தருடன் சுற்றிய இடங்களை எல்லாம், ஸ்ருதிக்கு காட்ட எண்ணி இப்படி செய்திருந்தனர். ஆனால் இப்பொழுது ஸ்ருதி கிளம்பி விட்டால் தான் தனியாக இருக்க வேண்டுமே என்று பூர்விக்கு கவலையாக இருந்தது.......

நேராக லைப்ரேரி சென்று டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்து விட்டு, ஸ்ருதி தனது சான்றிதழை பூர்வியிடம் கொடுக்க சொல்லும், கடிதத்தையும் டைப் செய்து அதையும் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்தாள். அதன் பின்  இந்தரை அழைத்தாள் பூர்வி.......

அவன் வந்ததும், அவனிடம் எல்லாம் விளக்கமாக கூறி, ஸ்ருதியை எப்படி ஏர்போர்ட் அனுப்புவது என இந்தரிடம் யோசனை கேட்டாள். ஏனெனில், ஏர்போர்ட் இரண்டு மணி நேர பயணத்தில் இருந்தது. தனியாக ஸ்ருதியை வாடகை காரில் அனுப்ப கொஞ்சம் தயக்கமாக இருந்தது பூர்விக்கு.......

“ஒன்னும் பிரச்சனை இல்லைடா, நம்ம ஓட்டலில் இருந்து இன்று விமானத்தில் செல்பவர்களுக்கு, ஆட்களின் எண்ணிக்கை பொருத்து,  பஸ் அல்லது கார்  இருக்கும் அதில் அவளை அனுப்பி விடலாம். என கூறி அதற்கு உரிய வேலையும் பார்த்தான். நான் போய் transfer நேரம் பார்த்து சொல்றேன், நீ போய் உன் தோழியை அழைத்து கொண்டு ஹோடேல்க்கு வந்து விடு, என கூறி கிளம்பினான் இந்திரஜித்.........

அதே போல் ஓட்டலுக்கு சென்று பயண நேரம் பார்த்து, பூர்விக்கு போன் செய்தான். “பூஜா, இன்னும் அரை மணி நேரத்தில் கார் இருக்கு, அதில் போகலாம், நான் மானேஜரிடம் சொல்லி இருக்கிறேன், அவர் கவனித்து கொள்வார். எனக்கு அவசர வேலை வங்கியில் இருக்கு, நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன்” என கூறி போனை வைத்தான்.   

பூர்வியும், ஸ்ருதியும், ஓட்டலுக்கு சென்ற பொழுது, வரவேற்பறையில் மேனஜர் Andrin இவர்களுக்காக காத்திருந்தார். இருவரிடமும் மரியாதையாக பேசினார். ஒரு அமெரிக்கா குடும்பம் மட்டும் இருந்ததால் ஒரு காரில் அவர்களுடன் ஸ்ருதியையும் ஏற்றி அனுப்பினார்.......

“ஏர்போர்ட் போனவுடன் எனக்கு போன் செய் ஸ்ருதி, ஊருக்கு போனவுடன் அப்பாவுக்கு எப்படி இருக்கு என்று போன் செய் என கூறி ஸ்ருதியை வழி அனுப்பினாள் பூர்வி......

வீட்டுக்கு வந்து மீதி இருந்த சாமான்களை பேக் செய்து வைத்தாள்.  அடுத்து ஒரு வாரம் இந்தருடன் நேரம் கழிக்கலாம் என்ற எண்ணமே அவளை சந்தோஷமாக இருக்க செய்தது......  மாலை நேரம் இந்தருக்காக காத்திருந்தாள், ஆனால் அவன் தான் வரவில்லை........

ரவு அம்மாவுடன் skype ல் பேசிய பொழுது ஸ்ருதி பற்றி எல்லாம் கூறிய பின் ,  அக்கா எங்கே என்று கேட்டதற்கு எதோ செக்கப்புக்கு மருத்துவமனை சென்றிருக்கிறாள் என்று கூறினார்கள்........ அதை பற்றி விரிவாக அம்மாவிடம் கேட்கவில்லை பூர்வி, அதற்கு வேறு அம்மா வருத்த படுவார்கள் என்று........

பேச்சை மாற்ற எண்ணிய பூர்வி “அம்மா உங்களுக்கு என்ன வாங்கி வர இங்கிருந்து” என கேட்டதற்கு..........

“படிக்க போன இடத்தில என்ன வாங்கி வருவ? வேணும்ன்னா , ஒரு வெள்ளை கார  மாப்பிள்ளை, வாங்கி வா என்று கூறி பூர்வியை கிண்டலடித்தார்கள்........

“சரோமா, உங்க ஆசை நிறைவேற்ற படும். ஆனால் வெள்ளைகார மாப்பிளை தான் இல்லை” என பூர்வி கூறியதை அவளது அம்மாவும் கிண்டலாகவே எடுத்து கொண்டார்........

“என்னவோ போ, உன்னை பார்க்கணும் போல இருக்கு பூர்விமா” என தனது ஆதங்கத்தை வெளியிட்டார் சரோஜினி..........

“இன்னும் ஒரு வாரம் தான், நான் அங்கு இருப்பேன். என கால் பட்டவுடன் நீங்க எல்லாம் ரொம்ப சந்தோஷ படுவீங்க” என சாமியார் ரேஞ்சுக்கு அருள் பாவித்தால் பூர்வி.......

அம்மாவிடம் பேசி முடித்தவுடன், சிறிது நேரத்தில் ஸ்ருதி அழைத்தாள்.

”நான் பத்திரமாக வந்து சேர்ந்துட்டேன், அப்பா இப்பொழுது நன்றாக இருக்கிறார். இப்போ ICU வில் இருக்கார், நாளை ரூம்க்கு மாற்றி விடுவதாக சொல்லி இருக்காங்க” என கூறினாள்.

“ஒகே டா , டேக் கேர், அப்புறம் பேசறேன், நீ அம்மாக்கு ஆறுதலா இரு...... என பூர்வி பதில் கூறினாள்.

“ஓகே பூர்வி, நீ ஜாக்கிரதையா இரு, அடுத்த ஒரு வாரம் என்ன செய்ய போற? நீயும் முடிந்தால் டிக்கெட் மாத்த பாரு.....

“முடிந்தால் பார்க்கறேன், ஸ்ருதி......... என கூறி போனை வைத்தாள் பூர்வி.

அதன் பின்பே இந்தர் ஏன் மாலை வரவில்லை என யோசிக்க தோன்றியது........

காலை எழு மணிக்கு பார்த்தது. இப்பொழுது மணி இரவு 11, ஏன் ஒரு போன் கூட செய்யவில்லை? என யோசித்து கொண்டே அவனை போனில் அழைத்தாள்.......

“ஹாய் டா, ஆல் ஒகே வா “ என இந்தர் கேட்டதற்கு........

“ஆல் ஒகே தான், ஆனா நீங்க இவினிங் என்னை வந்து பார்க்கறேன்னு சொன்னிங்க? என்று கூறினாள் பூர்வி.......

“சொன்னேனே, பாங்க் வேலைடா, எல்லா நேரமும் அதுக்கே போய்டுச்சு, உன்னோட தோழி ஊர் போய் சேர்ந்தாச்சா?.......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.