(Reading time: 20 - 39 minutes)

07. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ந்த ஆறு மாதமும், இறக்கை கட்டி கொண்டு பறந்தது. தோழிகள் மூவரும் கடைசி தேர்வும் எழுதி முடித்த பின் ஹெலனா ஸ்கூபா டைவிங் கற்க பிரான்ஸ் கிளம்பினாள்........

இந்த ஆறு மாத வகுப்புக்கான சான்றிதழை பூஜாவிடமே கொடுக்கும் படி கடிதம் எழுதி கொடுத்துவிட்டு அவளது துணிகளை பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள்.

அவர்கள் மூவரும் தங்கி இருந்தது ஒற்றை படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்ட். படுக்கை அறை பெரிதாக இருந்தாலும், இருவர் படுக்கும் கட்டில் மட்டுமே இருந்தது. அதனால் மூன்றாவது ஆள்  படுப்பதற்கு ஹாலில் இருந்த மூவர் அமரும் சோபாவை நகர்த்தி படுக்கை அறையிலேயே போட்டிருந்தனர்.  பூஜா சோபாவிலும் மற்ற இருவர் கட்டிலிலும் படுப்பார்.

“ஹே, நான் ஊருக்கு போய்ட்டா, ஒரு இடம் காலியாகிவிடும், அதனால் இந்த சோபாவை நகர்த்தி ஹாலில் போட்டு விடலாம், வந்து ஒரு கை பிடி பூர்வி” என ஹெலனா கூறியதற்கு........

“தாங்க்ஸ் ஹெலனா, ஆனா எனக்கு இதுவே பழகி விட்டது. அதனால் இது இங்கேயே இருக்கட்டும். இன்னும் இரண்டு வாரம் தானே இருக்கு” என பூஜா பதிலுரைத்தாள்.

இன்னும் இரண்டே வாரம், கூறிய போதே, இந்தரை பிரிய வேண்டும் என்ற நினைப்பு மேலோங்கி வருத்தமும் உண்டானது.......

“ நாம பிரிவதை நினைத்து நீ இவ்வளவு வருத்தப்பட வேண்டாம், நாம மேல் படிப்புக்கு ஒன்றாக தானே சேர போறோம். சோ சியர் அப் பேபி” என பூஜாவின் சோகம் அறியாது ஹெலனா பேசி கொண்டிருந்தாள்.

“உங்க ரெண்டு பேரிடமும் நான் கொஞ்சம் விஷயம் சொல்லணும்” என பூஜா பீடிகை போட்ட பொழுது.......

“ஓகே இன்னைக்கு என்னோட டிரீட், நாம வெளியே எங்காவது போய் சாப்பிடலாம், அப்போ நீ சொல்ல வந்ததை சொல்லு. இப்போ போய் கிளம்பு , என பாட்டாக பாடி ஹெலன கிளம்ப சென்றாள்.

மூவரும் கிளம்பி, அவர்கள் ஏரியாவில் இருந்த ஒரு தாய்லாந்து உணவு விடுதிக்கு வந்தனர். அங்குள்ள தாய் ஸ்பெஷல் சூப் மூவருக்குமே மிக பிடிக்கும். நல்ல காரமா லெமன் கிராஸ் எல்லாம் போட்டு சூப்பரா இருக்கும். சுவிஸ் நாட்டு உணவு வகை எதுவும் காரமாக இருக்காது, அதனால் மூவரும் அடிக்கடி வரும் உணவகம் இது தான்...... இந்திய உணவகம் எதுவும் இவர்களது ஏரியாவில் இல்லாததால் இது தான் அவர்களது காரத்திற்கு தீனி போதும் இடம்.........

அதுவுமில்லாமல் இங்கு wifi ப்ரீ, அதனால் அவர்கள் செல்ல தடை இல்லாமல் இருந்தது......

மூவரும் வேண்டியதை ஆடர் செய்தபின் சரி பூர்வி நீ என்னவோ சொல்ல வந்த, அதை சொல்லு முதலில் என ஹெலனா ஆரம்பித்தாள்.

அதற்குள் ஸ்ருதியின் செல்லில் அவளது அம்மா அவளை அழைத்து, “ஸ்ருதி உன்னோட அண்ணாவுக்கு பொண்ணு பார்த்து முடிவு செய்துட்டோம். உனக்கு, அவங்க குடும்ப போட்டோ, skype ல் அனுப்பி இருக்கான் உங்க அண்ணா. நீங்களும் பாருங்க........நீங்க மூணு பேரும்  இங்க வந்தவுடன், நிச்சயதார்த்தம் வைத்து கொள்ளலாம் என்று அப்பா பொண்ணு வீட்டில் சொல்லிட்டாங்க” என அவளது அம்மா சந்தோசமாக சொல்லி கொண்டிருந்தார்........

மூவருக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது. மூவரும் அடித்து பிடித்து skype ல் வந்த அந்த குடும்ப புகை படத்தை பார்த்தனர்.

“சூப்பர், அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க” என பூர்வி கூறியதற்கு.....

“அண்ணிய விட அவங்க அண்ணன் நல்ல இருக்கார்” என ஹெலனா கூற!!!

அப்பொழுது தான் ஸ்ருதி, மண பெண்ணின் அருகில் இருந்த அவளது அண்ணனை பார்த்தாள்.

“ம்ம்ம்...... நல்லா தான் இருக்கார்” என ஸ்ருதியும் ஒப்புகொள்ள.......

“அது என்ன நல்லா தான் இருக்கார்ன்னு இழுக்கற” என ஹெலனா ஸ்ருதியை கிண்டினாள்.

“நல்லா தான் என்றால், சுமாரா இருக்கார்ன்னு அர்த்தம்” என ஸ்ருதியும், பதிலளித்தாள்.

“ஹேய் , அப்ப அண்ணா கல்யாணத்தில், நீ அவரை சைட் அடிக்க கூடாது, ஒன்லி காபி ரைட்ஸ் எங்களுக்குத்தான்” என இன்னும் கொஞ்சம் ஸ்ருதியை கேலி செய்தாள் ஹெலனா........

“இதில் என்னை சேர்க்காத ஹெலனா, அது உங்க ரெண்டு பேர் பாடு”, என பூர்வி உள்ளே புகுந்தாள்.  

“ரெண்டு பெரும் கொஞ்சம் நிறுத்தரிங்களா, எதோ பிரியாணி பாக்கெட் எனக்கு வேணும் , எனக்கு வேண்டாம்ன்னு சொல்ற மாதிரி என்ன கலாட்டா” என ஸ்ருதி கூற மூவரும் பலமாக நகைத்தவாறு அவர்களது உணவை அருந்தினர்.

பேச்சு அப்படியே ஸ்ருதியின் அண்ணன் கல்யாணத்தில் எப்படி உடை உடுத்தலாம், எப்படி சிகை அலங்காரம் செய்யலாம், என அதை பற்றியே சென்றதில், பூர்வியும் , இந்தரை பற்றி கூற சமயம் அமையாது போனது. அதுவும் நல்லதுக்கு தான் என பின் நாளில் பூர்வி நினைத்ததுண்டு.

உணவை முடித்து மூவரும் அப்பாட்மென்ட்க்கு வந்து இரவு உடை மாற்றி, படுக்கையில் விழுந்தனர்.

“கடைசியா உங்க அக்கா கல்யாணத்தில் நல்லா ஜாலியா என்ஜாய் செய்தோம்  பூர்வி, இப்போ ஸ்ருதி அண்ணா கல்யாணத்திலும் ஒரு கலக்கு கலக்கிடலாம்.” என ஹெலனா கூறினாள்......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.