(Reading time: 20 - 39 minutes)

ம்ம். அவ போய் சேர்ந்தது போன் கூட பண்ணிட்டா. உள்ளுரில் இருக்க உங்க கிட்ட தான் பேச இவ்வளவு நேரம்........

“முதலில் பிசினஸ் அப்புறம் தான் நட்புன்னு நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்கடா , அதான் கொஞ்சம் லேட்.........

“இது என்ன கொஞ்சமா?  

“மணி கணக்கு பார்த்தா அதிகமா தோணும், ஆனா நாள் கணக்கு பார்த்தா, ரொம்ப கம்மி தான..... தனியாவா இருக்க, இல்லை உன்னோட வேற தோழிகளுடன் இருக்கியா?

“தனியா தான் இருக்கேன். இடம் மாறினா தூக்கம் வராது. சாரா கூட அவளோட அப்பார்ட்மென்ட்க்கு வர சொன்னா, நான் தான் போகலை.......

“ஓகேடா, நாளைக்கு மாலை வந்து உன்னை விழாவிற்கு அழைத்து போகிறேன்.”

“இன்னைக்கு மாலை வந்த மாதிரியா?

“எதோ ஒரு நாள் அப்படி ஆச்சுன்னா, அதுக்குன்னு இப்படியா? விட்டா FB ல மிமிஸ் போட்டு கலாய்ப்ப போல இருக்கே........ நாளைக்கு பார்க்கலாம், குட் நைட்.

“குட் நைட்” என கூறி போனை வைத்து இந்தரை நினைத்து கொண்டே உறங்கி போனாள் பூர்வி.......

று நாள் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன் வலது கண் தானாக துடித்தது. அதை கண்டு கொள்ளாமல் குளித்து முடித்து காபி மேக்கரில் காபி தாயாரித்து காபி கப்புடன் வந்து பழைய பாடலை ஒலி பரப்ப விட்டாள்........

கண்ணு வலது கண்ணு தான துடிசுதுன்னா 

எதோ நடக்குமின்னு பேச்சு 

என சின்ன கவுண்டர் படத்தின் பாடல் பாடி கொண்டிருந்தது....... அப்பொழுது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை பூர்விக்கு......

அன்று மாலை நன்றாக தன்னை அலங்கரித்து கொண்டாள். இந்திய உடையில் வருமாறு சாரா கூறி இருந்ததால், aqua கலரில் லேஹங்கா அணிந்து, அதே நிறத்தில் நகை செட்டும் அணிந்தாள். அவளது கேசம் எப்பொழுதும் அடர்த்தியாக, இயற்கையாகவே  Straightening செய்தது போல் இருக்குமாதலால், அதை அப்படியே வாரி லூசாகவே விட்டாள்.

இந்தர் மாலை நேரம் வந்து, அவளது அப்பார்ட்மென்ட் முன்பு காரை நிறுத்தி ஹாரன் அடித்த பொழுது, பூர்வி வெளியே கிளம்பி வந்து, அவர்களது அப்பார்ட்மென்ட் முன்பு இருந்த ஐந்து படிகளில் இறங்கிய பொழுது, அவளை பார்த்த இந்தருக்கு இதய துடிப்பு கூடத்தான் செய்தது. அதுவும் அவனது கார் ஹெட் லைட் வெளிச்சத்தில் அவளை பார்த்த பொழுது அவனுக்கு அழகி படத்தில் வந்த பாட்டு தான் நியாபகம் வந்தது........

ஒளியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ இல்லையா........

“ப்பா தேவதை மாதிரி இருக்கடா........ என இந்தர் கூறியதற்கு

“இங்க சும்மாவே ரொம்ப குளிர், இதுல நீங்க வேற ஐஸ் வைக்காதிங்க, இருந்தாலும் ரொம்ப தேங்க்ஸ்......... நான் ஏதாவது உங்களை பாராட்டி சொல்லனுமா? என பூர்வி அவனிடம் கேள்வியாக கேட்டாள்.......

“உண்மைக்கு பாராட்டு தேவை இல்லை, ஒப்பனைக்கு தான் பாராட்டு தேவை பூஜாமா” என செல்லமாகவே கூறினான் இந்தர்..........

“அப்ப நான், இயற்கையா அழகா இல்லன்னு சொல்றிங்களா?

“இப்ப சண்டை வேண்டாம்ன்னு தான் சொல்றேன்” என கூறி புன்னகைதான் இந்தர்..........

அவன் புன்னகையை பார்த்து பூர்வியின் மனம் கொள்ளை போனது......

விழாவில் முதலில் பிஜி மாணவர்களுக்கும் பின்பு யுஜி மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. MBA பிரிவில் இந்தருக்கு தங்க பதக்கம் வழங்க பட்டது பார்த்து பூர்விக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவன் என் கூடத்தான் ஊர் சுற்றி கொண்டிருந்தான், அப்புறம் எப்படி?....... பூர்வி சிறு வயதிலிருந்தே எப்பொழுதும், நன்றாக படிப்பாள் தான் ஆனால் இப்படி தங்க பதக்கம் எல்லாம் வாங்கியதில்லை.

ம்ம்ம் ஓவர் படிப்ஸ் தான் போல பையன் என மனதிற்குள் நினைத்து கொண்டாள். விழாவில் சாராவுடன் அமர்ந்திருந்தாள். இவர்களது முறை வந்த பொழுது, ஸ்ருதி, ஹெலனா விற்கும் சேர்த்து இவளே முறையே அவர்களது கடிதங்களை கொடுத்து அவர்களது சான்றிதல்களையும் பெற மூன்று முறை மேடை ஏறி இறங்கினாள்.

ஒருவழியாக பட்டமளிப்பு விழா முடியவே இரவு பத்து ஆகியது, அதன் பின்பே டின்னர் ஆரம்பமாகியது....... அவர்கள் நாட்டு வழக்கப்படி உணவுடன் மதுவும் பரிமாறப்பட்டது...    சாராவுடன் சேர்ந்து பூர்வியும் மற்ற தோழிகளும் உணவை ஆரம்பித்தனர். அனைவரும் உணவு உண்ட பின்  மேடையில் பாடுபவர்கள் பாட ஆரம்பித்தனர்.......

பூஜா, இந்தருக்கு போன் செய்து வீட்டுக்கு போகலாமா? என கேட்டதற்கு.....

“கொஞ்சம் நேரம் காத்திரு, போகலாம்” என கூறினான்.

மேடையில் பாடல் ஆரம்பித்ததும், நடுவிலிருந்த மேசை, நாற்காலிகளை ஓரமாக போட்டு விட்டு, நடனமாட ஆரம்பித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.