(Reading time: 14 - 28 minutes)

19. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

றுதி பயணம்!காதல் வேரினை இயன்றவரை அலசி ஆராயந்து அளித்த கதை!பாலை நிலத்தில் விழிகளுக்கு புலப்படும் கானலாய் சில உறவுகள் எனில்,அப்பாலை நிலத்தில் நிழல் தரும் விருட்சமாய் காதல் ஒவ்வொருவர் வாழ்விலும்!!வலிகளையும் தர வல்லது.வலிமைகளையும் தர வல்லது!ஆராய்ந்து பார்த்தால்...நீண்டு கொண்டே போகும் பிரபஞ்சத்தின் இரகசியமாய் காதலும் கேள்விகளை வளர்த்துக் கொண்டு தான் செல்கிறது.உறவுகள் ஏதுமின்றி இரு பாலர் கொள்ளும் மையலானது சாமானியமான உறவல்ல!நவீன காலத்தில் எண்ணற்ற குழப்பங்கள் தோன்றி இருக்கலாம்.கங்கை நதியும் களங்கப்படுமல்லவா??மெய் காதல் என்றும் உணர்வோடு பிணைந்தது...உயிரோடு கலந்தது!வாழ்வில் ஒருமுறையேனும் காதலித்துப் பாருங்கள்!அது ஒரு நபராய் இருந்தாலும் சரி,அழகிய மலராய் இருந்தாலும் சரி,வடிவமற்ற ஆற்றலாய் இருந்தாலும் சரி!வாழ்வில் ஒருமுறையேனும் காதலித்துப் பாருங்கள்!!

"ப்ளீஸ் கீதா!ஒரே ஒரு பாட்டு!"-கெஞ்சினர் அவ்வில்லத்தில் இருந்தோர்.

"ம்ஹூம்..!எனக்கு பாட வராது!என்னை விட்டுவிடுங்க!"

"பொய் சொல்ற!நீ குக் பண்ணும் போது பாடுவியே!நாங்க எல்லாம் கேட்டு இருக்கோம்.எங்களுக்காக பாடு ப்ளீஸ்!!"

"ஐயோ!"

"ம்...நீ சரிப்பட மாட்ட!சிவா!கீதாவை பாட சொல்லு!"-ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்தவன்,நிமிர்ந்தான்.

"ஆ..!ஒரு பாட்டு தானே பாடு!"-என்றவன்,தன் கைப்பேசியோடு எழுந்து சென்றான்.அவள் முகத்தில் பலத்த ஏமாற்றம்!!எதற்காக அவன் எழுந்து சென்றான்??

"ம்..சிவாவே சொல்லியாச்சு பாடு கீதா!"

"ம்..."

"ஏ..வெயிட்!வெயிட்!சினி சாங்க்ஸ் வேணாம்.இந்தியன் மித்-ல வர எதாவது கடவுளை பற்றி பாடு!அப்படி எதாவது சாங் இருக்கும்ல!"-ஆர்வமாக கேட்டார் லூஸி.

"ம்..."

"எந்த காட் பற்றி பாட போற?"-அவளது கவனம் சில நொடிகள் காதில் ஹெட்செட்டை மாற்றி ஏதோ பாடலை கேட்டு கொண்டிருந்தவனின் மேல் பதிந்தது!!

"சிவா!"

"ஓஹோ...!"-ராகமாய் வலித்தனர் அவர்கள்!!

"கம் ஆன் பாடு!"-சில நொடிகள் விழிகள் மூடி சிந்தித்தாள் அவள்.

பின் தொண்டையை ஒருமுறை செறுமிக் கொண்டு தன் இனிய குரலில் பாட தொடங்கினாள்.

'ஓம்காரம் பிந்து சம்யுக்தம் நித்யம் நியாயந்தியோஹினஹ..!காமதம் மோக்ஷதம் செய்ப ஓம்காராய நமோநமஹ...!"-மிக இனிமையான ராகத்தில் பாட தொடங்கினாள் அவள்.விழிகள் மூடி தன்னை அப்பாடலில் அவள் தொலைத்திருக்க,அவளை கவனியாமல் இருந்த சிவாவின் ஹெட்செட்டை சென்று கழற்றினார் லூஸி!!

"லுக் அட் ஹர்!"மென்மையாக கூறினார் அவர்.

"நமந்திரிஷயோ தேவ!நமந்தியங்சரஸாங்கனாஹ!நராதிவந்தீர் தேவேஷம் நகாராய நமோநமஹ..!மஹாதேவம்! மஹாத்மானம்!மஹாதியானம்!பராயணம்!மஹாபாப ஹரம் தேவம்!மஹாராய நமோநமஹ!!"

"சிவம் ஷாந்தம் ஜெகன்நாதம்!லோகாருக்கிரஹ காரஹம்!சிவமேக பதம் நித்யம்!ஷிகாராய நமோ நமஹ!வாஹனம் ரிஷபோயஸ்ய வாசுகி கண்ட பூஷணம்!வாமே சக்தி தரம் தேவம் வக்காராய நமோ நமஹ!யத்ர யத்ரஸித்திதோ தேவ!ஸர்வ வியாபி மகேஷ்வரஹ!லோகுரு ஸர்வ தேவானாம் யகாராய நமோ நமேஹ!"

"ஓம்காரம் பிந்து சம்யுக்தம் நித்யம் நியாயந்தியோஹினஹ!காமதம் மோக்ஷதம் செய்ப ஓம்காராய நமோ நமஹ..!"-ஸ்துதி முடித்தவள் மெல்ல விழி திறந்துப் பார்த்தாள்.

"வாவ்!"-அனைவரும் கரகோஷம் எழுப்ப,ஒருவன் மட்டும் சிலையாகி அமர்ந்திருந்தான்.

"பாட தெரியாது?"-புன்னகையுடன் கேட்டார் லூஸி.அவள் முகம் முழுதும் பூரிப்பு!!

"லவ்லி சாங் டியர்!"

"தேங்க்ஸ்!"-அவளது பார்வை ஒருவித ஏக்கத்துடன் சிவாவை அடைந்தது.அவனோ...ம்ஹூம்...மனமாற்றத்தை வெளிக்காட்டுவதாய் இல்லை!!

"லெட்ஸ் கோ!"-லூஸி அனைவரையும்  அழைத்து சென்றுவிட,அங்கு தனித்திருந்தனர் இருவரும்!!

நெடும் பெரும் தயக்கம் இருவருக்குள்ளும்!

"கீதா!"

"ம்??"

"நாளைக்கு நீ ஃப்ரீயா?"

"ம்...!"

"ஈவ்னிங்!எதாவது புரோக்கிராம்?"

"இல்லையே! ஏன்?!"

"ஒண்ணுமில்லை...நாளைக்கு உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு!"-அவள் மனதில் ஆயிரமாயிரம் எதிர்ப்பார்ப்புகள் உதித்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.