(Reading time: 5 - 10 minutes)

2018 மகளிர் தின ஸ்பெஷல் - BESTIE DA! - புவனேஸ்வரி கலைசெல்வி

bestie 

ன் வயதிலோ அல்லது என்னைவிட இளையவர்களாக இருக்கும் தோழிகளுக்காக சொல்லுறேன். மகளிர் தின ஸ்பெஷல் அட்வைஸ்.

எப்படி ஆரம்பிச்சதுனு தெரியல,ஆனா சமூக வலைத்தளங்களில் “bestie” மோகம் அதிகரித்துவிட்டது. பேஸ்புக் ஐ பார்த்தாலே குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5 “tag your bestie” நு போஸ்ட் போடுறாங்க.. இது ஒரு மாதிரி விளம்பரமா மாறிட்டு. இப்போ இதுனால எந்த பிரச்சனையும் இல்லாத மாதிரி இருந்தாலும்,இதுவும் ஒரு பிரச்சனையை கிளப்பும் மந்தமான விரைவில்!!

“இதைபத்தி நீயா பேசுற?”நு என்னை நன்றாக அறிந்தவர்கள் நக்கலாக கேட்பாங்க.

“ஆமா, நான் சொல்லுறேன்.. நான்தான் இதை அழுத்தமாக சொல்ல முடியும் !ஏன்னா நான் தான் அதை உணர்ந்திருக்கேன். கண்ணதாசன் ஐயா மது மாதினால் வாழ்க்கை கெட்டு போவதை கற்பனையில் சொல்லவில்லை.தானே தவறு செய்துவிட்டு “ ஆமா நான் தப்பு பண்ணேன்.. அதுனாலத்தான் உனக்கு சொல்லுறேன்..புத்தி இருந்தா பொழைச்சுக்கோ!” என்ற ரீதியில் தன் கருத்துகளை சொல்லி இருப்பார்..

“நானும் அதே மனநிலையில் தான் சொல்லுறேன்”. சராசரி நட்புக்கும் “bestie” கும் எக்கச்சக்க வித்தியாசங்கள் இருக்கு. நமக்கு நெருக்குமானவனா இருக்கானேனு அந்த இடத்தை தூக்கி தராதீங்க. நீங்களும் அதே மாதிரி அவனுக்கு நெருக்கமா இருக்கீங்களானு பாருங்க..

இதுக்கு தனியா ஏழாம் அறிவு பயன்படுத்தி டெஸ்ட் பண்ணனும்னு இல்லை. “இவ என் bestie” வீட்டுல சொல்லுற அளவுக்கு அந்த ஆண் சிங்கத்துக்கு வீரமிருக்கானு பாருங்க.. “உயிர்த்தோழன்”நா அதுதான். “நம்மள வம்பிளுப்பாங்க.. சண்டை போடுவாங்க.. சிரிக்க வைப்பாங்க..புரிஞ்சுப்பாங்க..எல்லாம் சரிதான்! நீங்கதான் அவங்க தோழினு ஓர் அங்கீகாரத்தை கொடுப்பாங்களா? அதை யோசிச்சு அந்த இடத்தை கொடுங்க. முடியாதுனு சொன்னா, “சரி நீ நண்பனாக இரு..உயிர்த்தோழனாக வேண்டாம்”னு நேரடியாக சொல்லுங்க.. உங்க மனதினை நீங்கத்தான் பாதுகாக்கனும்.

பலநாள் காதலிச்சிட்டு, வீட்டுல காதலுக்கு எதிர்ப்பு வரும்னு யாரவது சொன்னால்,” நீங்களாம் எதுக்கு காதல் பண்ணுறீங்க”நு கோபமா கேட்குறோம்ல? அதே கோபத்தை நட்பில் தேவையான நேரத்துல காட்டுங்க..

இன்னைக்கு காதலுக்கு பல பரிமாணங்கள் உருவாகி “இவ்வளவு தான் காதலா?” ஒரு கசப்பு அங்கங்கே பார்க்கிறோம்.. இந்த “bestie” மோகம் இன்னும் 5-6 வருஷத்துல நட்பையும் அதேபோல களங்க படுத்தும்.

bestie= friendzoned single/ friends with benefits” னு ஒரு நிலையை நோக்கி மெல்லமெல்ல மாற்றம் நகர்ந்து போகுது.. பலதலைமுறைகள் தாண்டி நமக்கு கிடைச்ச “ஆண்-பெண் நட்பு” சுதந்திரத்தை அழகான வழியில் கொண்டு போவோம்.

ரொம்ப சீரியசா பேசிட்டனால ஒரு குட்டி கதை சொல்லுறேன். ஒரு பொண்ணு நட்பில் பல அதிர்ச்சிகள் கசப்புகள் கண்டு “அட போங்கடா” நு ஒரு இடைவெளியோடு எல்லாரையும் அணுகுகிறாள். அப்போ ஒரு பையன் அவளுக்கு அறிமுகமாகி நண்பனாகிறான். அவங்களுடைய ஆறு மாத உரையாடலை சுருக்கமா சொல்லுறேன்.

அவள் : நீயும் ஒரு நாள் போய்டுவ!

அவன் : கண்டிப்பா அப்போ நீ தனியா இருக்க மாட்ட!

~

அவள் : நான் அதிகமா பாசம் காட்டியிருக்க கூடாது! எதிர்ப்பார்த்திருக்க கூடாது. “Expectation Hurts”

அவன் : லூசு, பாசம் அதிகம் வைக்கிறதும் தப்பில்ல,அது எதிர்ப்பார்ப்பை கிளப்புறதும் தப்பில்லை.. யாருகிட்ட அதை காட்டுறோம் அங்கதான் யோசிக்கனும்..

அவள் : என்ன நீங்க? இதுவரைக்கும் எல்லாரும் என்னை “expect” பண்ணாத ,அது தப்புனுதான் சொல்லி நம்ப வெச்சாங்க.. நீங்க தலைகீழாக சொல்லுறீங்க?

அவன்: உன் பாதைல அவங்களா நடந்தாங்க? நீ ஏன் அதை கேட்டு மண்டைய ஆட்டுற?

~

அவள் : எப்படியும் ஒரு நாள் எல்லாரும் போகபோற உலகத்துல ஏன் சந்திச்சு அன்பு காட்டனும்?

அவன்: அப்படின்னா, ஏன் எல்லாரும் ஒரே உலகத்துல பொறந்தோம்? எல்லாத்துக்குமே காரணம் இருக்கும் மா

ஆறு மாசத்துக்கு அப்பறம் அந்த பையனுக்கு பிறந்தநாள் வருது. அவனும் அவளும் வெவ்வேறு நாடுகளில் இருக்காங்க.. சந்திச்சதே இல்லை.தன்னுடைய பயங்களை போக்கி கொண்டே இருக்கும் அந்த பையனுக்கு இன்ப அதிர்ச்சி தரனும்னு ஒரு பரிசு அனுப்பி வைக்கிறாள் அந்த பொண்ணு.

இருவருக்குமே தெரிந்த நண்பர்மூலமா அந்த பரிசு அவன் கையில் கிடைக்கிது.அவன் முகத்தை வார்த்தையே இல்லாத அதிர்ச்சி, புன்னகைக்க மறந்த சந்தோஷம்! அதைப் புகைப்படமாக க்ளிக்கி, அவளுக்கு அனுப்பட அடுத்த பலநாட்கள் சோர்வாக இருக்கும்போது அவள் அகக்கண்ணில் அவன் முகம் தான்னு சொல்லலாம்.

இன்ப அதிர்ச்சி தந்தவளுக்கே பெரிய இன்ப அதிர்ச்சி என்ன தெரியுமா? அந்த பையன் கொடுத்த அங்கீகாரம். “ என் bestie கடல்கடந்து அனுப்பிய பரிசு இது” நு குதூகலமாக வாட்ஸப்பில் ஸ்டேடஸ்.. வாஸ்ட்அப்ல,ப்ரன்ட்ஸ் மட்டுமா இருக்காங்க? குடும்பம்? சொந்தம்? வேலை பார்க்குறவங்க? இத்தனை பேரிடமும் அவன் அவர்களின் நட்பினை அங்கீகரித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டானாம்! மேலும் அந்த பரிசை வீட்டில் மறைத்து வைக்காமல், அனைவரிடமும் காட்டி “இது கள்ளத்தனமல்ல, நல்ல நட்பின் அடையாளம்” என்று சொல்லிவிட்டானாம்! எவ்வளவு அன்பை காட்டினாலும், தேவை முடிந்த்தும் தூரம் போய்விடும் நட்புதான் இக்கால நட்புனு அவள் நம்பி வாழவே தொடங்கியபோது அவனது வருகை அமைந்துள்ளது!

இதை படிக்கிறப்போ, “செம்மல?” அப்படினு தோணுதா? அப்போ, இப்படி ஒரு நட்பு கிடைச்சா சொல்லுங்க “பெஸ்ட்டி டா”நு நான் அவனைப்பார்த்து சொன்னது போலவே! :)

சோ, யாரை கொண்டாடுடுறோம்? யாருக்காங்க விட்டுத்தரோம்? எதை விட்டு தரோம்னு யோசிங்க தோழிகளே. காதல் தப்பா போச்சுனா, சில வருடங்களில் பெற்றொர் பார்க்குற பையனை கூட கல்யாணம் பண்ணி அழகான வாழ்க்கையை துவக்கலாம். ஆனால் ஒரு நண்பன் மனசை உடைச்சா, இன்னொரு நண்பனை யாரு தருவாங்க? மகளிர் தின வாழ்த்துக்கள் தோழிகளே!

{kunena_discuss:1177} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.