(Reading time: 2 - 3 minutes)

குழந்தைகள் ஸ்பெஷல் குட்டி கருத்துக் கதைகள் – 92. மன்னிப்போம் மறப்போம்.

ரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். பயணத்தின் போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு நண்பர் மற்றவரை முகத்தில் அறைந்தார்.

  

அறைந்தவன் மனம் காயப்பட்டது. ஆனால் எதுவும் பேசாமல், “இன்று என் உயிர் நண்பன் என் முகத்தில் அறைந்தான்” என்று மணலில் எழுதினான்.

  

அவர்கள் இருவரும் ஒரு பாலைவனச் சோலையைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தார்கள். அங்கு வேண்டிய அளவு தண்ணீரை குடித்து விட்டு இருவரும் குளிக்க முடிவு செய்தார்கள்.

  

அப்போது அறை வாங்கியவர் சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கினார். ஆனால் அவரின் நண்பர் சமயத்தில் கைக் கொடுத்து அவரைக் காப்பாற்றினார். மீண்டு வந்தப் பிறகு, அவர் ஒரு கல்லில் "இன்று எனது உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்" என்று எழுதினான்.

  

தன் நண்பனை அறைந்து, பின் காப்பாற்றிய நண்பன் அவனிடம், “நான் உன்னை காயப்படுத்தியப் போது மணலில் எழுதிவிட்டு, இப்போது கல்லில் எழுதுகிறாய், ஏன்?” என்று கேட்டான்.

  

அந்த நண்பனோ, “யாராவது நம்மை காயப்படுத்தினால், மன்னிப்பு எனும் காற்று அதை அழித்து விடும் வகையில் மணலில் எழுத வேண்டும். ஆனால், ஒருவர் நமக்கு ஏதாவது உதவி செய்தால், காற்றினால் அழிக்க முடியாததாக  கல்லில் பொறிக்க வேண்டும்.” என்று பதிலளித்தான்.

   

கருத்து:

   

மன்னித்து, மறக்கும் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் நம் அன்றாட வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.

   

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.