(Reading time: 2 - 3 minutes)

கருத்துக் கதைகள் – 16. நன்றி மறப்பது நன்றன்று... - தங்கமணி சுவாமினாதன்

deer

செழித்து வளர்ந்திருந்த அந்த புல் வெளியில் மான் ஒன்று வெகு சந்தோஷமாய் மேய்ந்து கொண்டிருந்தது.நல்ல கொழுத்த மான் அது.அப்போது இரண்டு மூன்று வேடர்கள் வேட்டையாட அந்த வழியாக வந்தனர்.அவர்களின் கண்களில் இந்த மான் விழுந்தது.எவ்வளவு கொழுத்த மான் இதை இன்று எப்படியும் வேட்டையாடி விட வேண்டுமென எண்ணி அதன் மீது அம்பை செலுத்தினார்கள்.நல்ல வேளையாக அவ்வம்பு மான்மீது படவில்லை.தனக்கு ஆபத்து வந்து விட்டது என புரிந்து கொண்ட மான் மிக வேகமாக ஓட ஆரம்பித்தது.வேடர்களும் மானைத் துரத்தினார்கள்.

மான் காற்றாய்ப் பறந்தது.ஒரு புதருக்குள் போய் ஒளிந்து கொண்டது.புதரில் கொடியொன்று படர்ந்திருந்தது.அக்கொடியின் இலைகள் மானை மறைத்துக் கொண்டன.

மானே நீ கவலைப் படாதே அந்த வேடர்கள் கண்களில் நீ படாதவாறு உன்னை இலைகளாகிய நாங்கள் பாதுகாப்போம் என்றன.மானும் சப்தம் போடாமல் நின்றது.

வேடர்கள் மானைக் காணாது திகைத்தனர்.சற்று நேரம் அமைதியாக நின்றனர்.

ஓளிந்திருந்த மான் வேடர்கள் சென்றுவிட்டதாக நினைத்தது.அப்பாடி தப்பித்தோம் என நினத்ததது.கொஞ்சமும் நன்றியில்லாது தன்னை வேடர்கள் கண்களில் விழாதவாறு மறைத்துக் காப்பாற்றிய கொடியின் இலைகளை ப்ரக் பரக் என்று கடித்துத் தின்றது.அப்படித்தின்னும் போது ஏற்பட்ட சப்த்தத்தினாலும் இலைகள் தின்னப்பட்டதால் ஏற்பட்ட இடைவெளியாலும் மானின் இருப்பிடத்தை வேடர்கள் தெரிந்து கொண்டார்கள்.கொஞ்சமும் தாமதிக்காது மானை வேட்டையாடினார்கள்.

நன்றி கெட்ட மான் இறந்து போனது.தன்னைக் காப்பாற்றிய இலைகளை கொஞ்சமும் நன்றியில்லாது தின்றது மான் செய்த தவறுதானே?செய்னன்றி மறப்பது நல்லதில்லை அல்லவா?

 

கதை சொல்லும் கருத்து:

நன்றி மறப்பது நன்றன்று.....

படித்தமைக்கு நன்றி....

Story # 15 - Kooda natpu kedaai vilaiyum

Story # 17 - Kunam naadi... Kutramum naadi

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.